Home

Thursday, July 1, 2010

தமிழக மாநகராட்சிகள்,நகராட்சிகள்,பேரூராட்சி,ஊராட்சிகள், ஒரு பார்வை

தமிழக மாநகராட்சிகள்

இந்தியாவின் மாநிலமான தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப மாநகராட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளன.தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 10 மாநகராட்சிகள் இருக்கின்றன. இந்த மாநகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த மாமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாமன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். மாநகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 10 மாநகராட்சிகள் உள்ளன.

1.சென்னை மாநகராட்சி
2.கோவை மாநகராட்சி (கோயம்புத்தூர்)
3.மதுரை மாநகராட்சி
4.ஈரோடு மாநகராட்சி
5.சேலம் மாநகராட்சி
6.தூத்துக்குடி மாநகராட்சி
7.திருச்சி மாநகராட்சி (திருச்சிராப்பள்ளி)
8.நெல்லை மாநகராட்சி (திருநெல்வேலி)
9.திருப்பூர் மாநகராட்சி
10.வேலூர் மாநகராட்சி


தமிழக நகராட்சி மன்றங்கள் தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் நகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நகராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த நகராட்சி மன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் நகராட்சி மன்றத் தலைவராகவும், ஒருவர் நகராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். நகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி நகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

தமிழக நகராட்சிகள் (முனிசிபல்) இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் நகர உள்ளாட்சி அமைப்பான இவ்வமைப்புகள் பண்டையத் தமிழர்கள் காலத்திலேயே பின்பற்றி வந்த அமைப்பாக வரலாற்று சான்றிகள் கூறுகின்றன. தமிழகத்தில் சோழப் பேரசு வீற்றிருந்த காலத்தில் குடவோலை முறையில் இவ்வமைப்புகளை அமைத்திருந்ததாக சான்றுகள் கூறுகின்றன.தமிழக உள்ளாட்சி அமைப்பான நகராட்சிகள் அரசியலமைப்பு 74 வது திருத்தச் சட்ட செயல் 1992ன் விதி 243 டபுள்யூ நகாரட்சிகள் அமைக்க . அதற்கு அதிகாரங்களை வழங்க வழி செய்கின்றது. அதன் படி இது ஒரு மாநில அரசிடமிருந்து அதிகாரப் பகீர்வைப் பெற்றத் தன்னாட்சி அமைப்பாக தமிழகத்தில் செயல்படுகின்றது.தமிழகத்தில் நகராட்சி அமைப்புச் சட்டத்தின் படி 10 மாநகராட்சிகள் மற்றும் 148 நகராட்சிகள் (49 மூன்றாம் படி நிலை நகராட்சிகள் உட்பட) இயங்குகின்றன.


தமிழக ஊராட்சி மன்றங்கள் தமிழ்நாட்டில் பேரூராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் குறிப்பிட்ட வருவாயுடைய ஊர்களை ஊராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த ஊராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் ஊராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த ஊராட்சி மன்றத்திற்கான தலைவர் மக்களால் நேரடியாகத் தலைவர் தேர்வு செய்யடுகின்றார். இந்த ஊராட்சி மன்றத்திற்கான துணைத் தலைவர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களால் தேர்வு செய்யடுகின்றார். ஊராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஊராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி மன்றத்தலைவரே அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் மொத்தம் 12606 ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன.
ஊராட்சிப் பகுதிகளில் இருக்கும் வாக்காளர்கள் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட வார்டு உறுப்பினர் என்று நான்கு பதவிகளுக்காக நான்கு வாக்குகள் அளிக்கின்றனர். பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வாக்காளர்கள் வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் ஒரு வாக்கு அளிக்கின்றனர்.

தமிழகப் பேரூராட்சி

தமிழகப் பேரூராட்சி மன்றங்கள் இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் நகராட்சிகளுக்கும் ஊராட்சிகளுக்கும் இடைப்பட்ட நிலையில் பேரூராட்சி என்ற அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் குறிப்பிட்ட வருவாயுடைய ஊர்களை பேரூராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த பேரூராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் பேரூராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பேரூராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த பேரூராட்சிமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் பேரூராட்சி மன்றத் தலைவராகவும், ஒருவர் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். பேரூராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் பேரூராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி பேரூராட்சிச் செயல் அலுவலர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் 561 பேரூராட்சி மன்றங்கள் இருக்கின்றன.
பேரூராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு இடைப்பட்டதாக இருக்கின்றன. பேரூராட்சிகளில் மக்கள்தொகை 5000க்கு அதிகமாகவும் 30,000 வரையிலும் உள்ளனர்.
பெரும்பான்மையான பேரூராட்சிகள் தாலுக்கா தலைமையிடமாகவும், ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,பதிவுத்துறை அலுவலகம், வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்கள்,வழிபாட்டு தலங்களாகவும் தொழிலகங்கள் நிறைந்ததாகவும் விளங்குவதால் நகரங்களுக்கான வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகின்றன. தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-ன்படி பேரூராட்சிகளின் நிர்வாகம் செயல்படுகிறது.

பேரூராட்சிகள் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்/உதவி இயக்குநர் மற்றும் மாநில அளவில் பேரூராட்சிகளின் இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.பேரூராட்சிகள் இயக்ககம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும்துறையின் கீழ் செயல்படுகிறது.

பேரூராட்சிகள் மேற்கொள்ளும் பணிகள்

பொது சுகாதாரம் - துப்புரவு,கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி,திடக்கழிவு மேலாண்மை
மக்கள் உடல்நலம் மற்றும் நோய்த்தடுப்பு
குடிநீர் வழங்கல்
விளக்குவசதி
கட்டிடங்கள் கட்டுவதை ஒழுங்குசெய்தல்
தொழிற்சாலைகள் மற்றும் தொழில்கள் ஏற்படுத்துவதை உரிமம் வழங்கி முறைப்படுத்துதல்
பிறப்பு/இறப்பு பதிவு
மயானங்களை ஏற்படுத்தி பராமரித்தல்.
தமிழ்நாட்டில் பேரூராட்சிகள் நான்கு நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வகை பேரூராட்சிகள் எண்ணிக்கை
நிலை 2 82
நிலை 1 221
தேர்வுநிலை 245
சிறப்புநிலை 13
மொத்தம் 561


நன்றி மீண்டும் அடிப்படை அறிந்து சிந்தித்து நடப்போம் ......

No comments:

Post a Comment