Home

Saturday, September 4, 2010

ஒன்றியப் பகுதி(யூனியன் பிரதேசங்கள்) ஒரு பார்வை.

ஒன்றியப் பகுதி (யூனியன் பிரதேசம்)(English: Union Territory) என்பது இந்தியாவில் ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். இது மாநிலங்களைப் போலல்லாமல் நேரடியாக நடுவண் அரசினால் நிர்வகிக்கப்படுகிறது. 2005-ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் ஏழு ஒன்றியப் பகுதிகள் உள்ளன.

அவையாவன:

அந்தமான் நிக்கோபார் தீவுகள்
சண்டீகர்
தமன் தியூ
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
பாண்டிச்சேரி
லட்சத்தீவுகள்
டெல்லி தேசிய தலைநகரப் பகுதி
இவற்றில் புதுச்சேரிக்கும் டெல்லி தேசிய தலைநகரப் பகுதிக்கும் மாநில அந்தஸ்து உடையனவாகும். யூனியன் பிரதேசங்கள் நேரடியாக இந்திய குடியரசு தலைவரால் நிர்வாககிக்கப் படுகிறது. பிற மாநிலங்களின் போல் தேர்தல் மூலம் அரசமைக்காமல் குடியரசு தலைவர் அமைத்த ஆளுனரால் நிர்வாகம் செய்யப்படுகிறது. புதுவைக்கும் டெல்லிக்கும் தேர்தல் மூலம் அரசமைக்க உரிமை இருப்பினும், இவற்றுக்கு சில சட்டம் இயற்றுவதில் குடியரசு தலைவர் ஒப்புதல் தேவை.

திரிபுரா .

திரிபுரா இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் அகர்தலாவாகும். பேசப்படும் முக்கிய மொழிகள், வங்காள மொழியும் காக்பரோக்குமாகும்.பரப்பளவு: 10,492 கிமீ² சனத்தொகை: 28 லட்சம் (1991).

வரலாறு

சுதந்திரத்துக்கு முன் திரிபுரா முடியாட்சி நாடாக இருந்தது. இம் முடியாட்சிக்கு எதிராக எழுந்த கணமுக்தி பரிஷத் இயக்கம், முடியாட்சியை வீழ்த்தி, நாட்டை இந்தியாவுடன் இணைத்தது. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பெருமளவு வங்காள மக்கள் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்து இந்த மாநிலத்தில் குடி புகுந்துள்ளனர்.

மக்கள் தொகை சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 3,199,203 100%
இந்துகள் 2,739,310 85.62%
இசுலாமியர் 254,442 7.95%
கிறித்தவர் 102,489 3.20%
சீக்கியர் 1,182 0.04%
பௌத்தர் 98,922 3.09%
சமணர் 477 0.01%
ஏனைய 1,277 0.04%
குறிப்பிடாதோர் 1,104 0.03%

நன்றி மீண்டும் பயணம் தொடரும் ..

மிசோரம் .

மிசோரம்

தலைநகரம் :அய்சால்

மிசோரம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்று. அய்சால் இம்மாநிலத்தின் தலைநகர். மீசோ இன மக்கள் இங்கு அதிகம் வசிக்கின்றனர். மீசோ மொழி அதிகார்பபூர்வ மொழி. இம்மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் கிறித்தவர்கள். மிசோரம் மாநில மக்களின் கல்வியறிவு விகிதம் 89%. கேரளாவுக்கு அடுத்தபடியாக அதிக கல்வியறிவு உள்ள மாநிலம் இது. மிசோரம் மாநிலத்தின் மக்கள் தொகை சுமார் 890,000.

மக்கள் தொகை சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 888,573 100%
இந்துகள் 31,562 3.55%
இசுலாமியர் 10,099 1.14%
கிறித்தவர் 772,809 86.97%
சீக்கியர் 326 0.04%
பௌத்தர் 70,494 7.93%
சமணர் 179 0.02%
ஏனைய 2,443 0.27%
குறிப்பிடாதோர் 661 0.07%


நன்றி மீண்டும் பயணம் தொடரும் ..

மணிப்பூர் .

மணிப்பூர்
உருவாக்கம் 21 ஜனவரி 1972
மொழி :மணிப்புரி
சமயம் இந்து சமயம் 58%; கிறிஸ்தவம் 34%; இஸ்லாம் 7%
தலை நகரம் :இம்பால்
ஆளுனர் :அர்விந் தேவ்
முதலமைச்சர் :ஒக்ராம் இபோபி சிங்
பரப்பளவு 22,327 கிமீ²
மக்கள்தொகை - மொத்தம் (2001) - அடர்த்தி 2,388,664 /107/கிமீ²
கல்வியறிவு: - மொத்தம் 68.9%- ஆண்கள் 77.9%- பெண்கள் 59.7%
நகராக்கம் 23.88% (2001)

மணிப்பூர் (Manipur), வடகிழக்கு இந்தியாவிலுள்ள ஒரு மாநிலமாகும். மணிப்பூர் ஒரு princely state ஆக 1891ல் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்டது. மணிப்பூர் அரசியற் சட்டம், 1947, செயற்படுத்து அதிகாரமுள்ள தலைவராக மகாராஜாவையும், தெரிந்தெடுக்கப்பட்ட சட்டசபையொன்றையும் கொண்ட ஜனநாயக அரசாங்கமொன்றை நிறுவியது. அக்டோபர் 1949ல் இது இந்தியாவுடன் இணைந்த போது, சட்ட சபை கலைக்கப்பட்டது. மணிப்பூர், 1956 முதல் 1972 வரை ஒரு யூனியன் பிரதேசமாக இருந்தது. 1972ல், ஒரு மாநிலமானது.இதன் தலை நகரம் இம்பால். மணிப்பூர், இந்திய மாநிலங்களான நாகலாந்து, மிஸோரம், அஸ்ஸாம் என்பவற்றை முறையே, வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளிலும், கிழக்கில் மியன்மாருடன் அனைத்துலக எல்லையொன்றையும் கொண்டுள்ளது.இந்த மாநிலத்தில் பெரும்பாலான குடிமக்கள் மைத்தி (Meitei) இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் Meiteilon அல்லது மணிப்பூரி என்றழைக்கப்படும் தம் பரம்பரை மைத்தி மொழியைப் பேசி வருகின்றனர். இம்மொழி 1992ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய மொழிகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய படைகளுக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற கடும்போரின் பல சண்டைகளுக்கு இப்பிரதேசம் களமாக விளங்கிற்று. ஜப்பானிய படைகள் கிழக்காசியாவில் வெற்றி கண்டு மணிப்பூர் வரை தாக்கினர். ஆனால் இம்பால் நகரை தம் ஆட்சிக்குள் கொண்டு வர முயலும்போது அவர்கள் தோல்வியடைந்தனர். போரின் தொடர்ச்சியில் இந்நிகழ்வு ஒரு திருப்புமுனையாய் விளங்கியது. அப்போரில் காலமான இந்திய போர்வீரர்களுக்கும் கூட்டுப்படை போர்வீரர்களுக்கும் British War Graves Commission தற்போது அங்கு இரு சுடுகாடுகளை பராமரித்து வருகின்றது.மணிப்பூர் ஒரு sensitive எல்லையோர மாநிலமாகக் கருதப்படுகிறது. இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள் இம்மாநிலத்தினுல் செல்ல டில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள வட்டார அயல்நாட்டினர் பதிவு அலுவலகத்தில் கட்டுபடுத்தப்பட்ட பகுதிக்கான நுழைவு அனுமதிச் சீட்டு பெற வேண்டும். இந்த சட்டம் மணிப்பூரில் பிறந்து பிற நாடுகளில் குடியேறிய மைத்தி மக்களுக்குங்கூட பொருந்தும். இந்த சிறப்பு அனுமதியைப் பெற்றவர்கள் பத்து நாட்களுக்கு மணிப்பூரில் தங்கலாம். அக்காலக்கட்டத்தில் அவர்கள் குறைந்தது மூன்று சக பயணிகளுடன் சேர்ந்து அரசாங்க உத்தரவு பெற்ற பயண அதிகாரி ஏற்பாடு செய்த பயண திட்டத்தைப் பின்பற்றிச் செல்ல வேண்டும். அத்துடன், வெளிநாட்டுப் பயணிகள் விமானத்தின் மூலமாய் மட்டுமே இம்பாலினுள் அனிமதிக்கப்படுவர். அவர்கள் இம்பால் நகரத்தைத் தவிர வேறு எந்த இடத்திற்கும் செல்ல அனுமதிக்கப் பட மாட்டார்கள்.

மக்கள் தொகை சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 2,166,788 100%
இந்துகள் 996,894 46.01%
இசுலாமியர் 190,939 8.81%
கிறித்தவர் 737,578 34.04%
சீக்கியர் 1,653 0.08%
பௌத்தர் 1,926 0.09%
சமணர் 1,461 0.07%
ஏனைய 235,280 10.86%
குறிப்பிடாதோர் 1,057 0.05%

நன்றி மீண்டும் பயணம் தொடரும் ..

நாகாலாந்து .

நாகாலாந்து

தலைநகரம் :கொஹீமா
மிகப்பெரிய நகரம் :திமாபூர்
ஆட்சி மொழி
ஆளுனர் :ஷ்யாமல் தத்தா
முதலமைச்சர் :நீபியூ ரியோ
ஆக்கப்பட்ட நாள் 1963-12-01
பரப்பளவு 16,579 கி.மீ² மக்கள் தொகை (2001)அடர்த்தி 1,988,636 /120/கி.மீ²
மாவட்டங்கள் 11

நாகாலாந்து (Nagaland) இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும். இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் அயல் நாடான மியன்மார் என்பன இதனோடு எல்லைகளைக் கொண்டுள்ளன. இதன் மாநிலத் தலை நகரம் கொஹீமா ஆகும். நாகாலாந்து ஏழு நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம் மாநிலத்தில் 16 முக்கிய இனக்குழுக்கள் வாழுகின்றன. இன அடிப்படையில் இவர்கள் இந்தோ-மொங்கொலொயிட் இனப்பிரிவைச் சேர்ந்தவர்களாகும்.நாகாலாந்து டிசம்பர் 1, 1963 ல் ஒரு மாநிலமாக ஆக்கப்பட்டது.

நன்றி மீண்டும் பயணம் தொடரும் ..

மேகாலயா .

மேகாலயா

தலைநகரம் :ஷில்லாங்
மிகப்பெரிய நகரம் :ஷில்லாங்
ஆட்சி மொழி காரோ, காசி, ஆங்கிலம்
ஆளுனர் :எம். எம். ஜேகப்
முதலமைச்சர் :டி. டி. லபாங்
ஆக்கப்பட்ட நாள் 25 ஜனவரி 1971
பரப்பளவு 22,429 கி.மீ² மக்கள் தொகை (2001)அடர்த்தி 2,306,069 /102/கி.மீ²
மாவட்டங்கள் 7


மேகாலயா (Meghalaya) (1991 ஜனத்தொகை. 1,774,778) இந்தியாவின் சிறிய மாநிலங்களில் ஒன்று. இது வட கிழக்கு இந்தியாவிலுள்ளது.இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்துக்கும், வங்காள தேசத்துக்கும் இடையில் மலைப்பாங்கான பிரதேசத்தில் ஒரு ஒடுங்கிய பட்டைபோன்று, 300 கிமீ நீளமும், 100 கிமீ அகலமும் உடையதாக உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 22,429 ச. கிமீ ஆகும். இதன் தெற்கெல்லையில் வங்காள தேசமும், வடக்கு எல்லையில் பிரம்மபுத்திரா ஆறும் உள்ளன. இதன் தலை நகரம் ஷில்லாங் ஆகும்.

வரலாறு

மேகாலயா ஆரம்பத்தில் அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. பின்னர் 21 ஜனவரி 1972 ல் தனியான மாகாணமாக ஆனது.

மேகாலயாவின் காலநிலை மிதமானது, ஆனால் அதிக ஈரப்பதன் கொண்டது. ஆண்டுக்கான மழை வீழ்ச்சி இம் மாநிலத்தில் சில இடங்களில் 1200 சமீ வரை காணப்படுவதால், இந்தியாவின் அதிக ஈரமான மாநிலமாக இது உள்ளது. தலை நகர் ஷில்லாங்குக்குத் தெற்கேயுள்ள நகரமான சேராப்புஞ்சி, ஒரு மாதத்தில் உலகிலேயே மிக அதிகமான மழை பெற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் அண்மையிலுள்ள மௌசின்ராம் என்னும் கிராமம் ஓராண்டில் உலகிலேயே அதிக மழை பெற்ற சிறப்பைப் பெற்றுள்ளது. மாநிலத்தின் 1/3 பகுதி காடாகும். மேற்கிலுள்ள காரோ குன்றுகளும், கிழக்கிலமைந்துள்ள காசி குன்றுகள், ஜைந்தியா குன்றுகள் போன்றனவும், உயரமானவை அல்ல. இங்கே ஷில்லாங் சிகரம், 1965 மீ உயரத்துடன் அதியுயர்ந்ததாக உள்ளது. தனித்துவமான சுண்ணாம்புக்கள் அமைப்புக்களோடு கூடிய பல குகைகள் இங்கே இருப்பதாக அறியப்பட்டுள்ளது.பண்பாட்டு அடிப்படையில், சனத்தொகையில் பெரும்பாலானவர்கள், "காசி"கள், "ஜைந்தியா"க்கள், "காரோ"க்கள் என்னும் இனத்தவர்களாவர்.மாநில அரசு சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதில் அக்கறை காட்டினாலும், தீவிரவாத இயக்கங்கள் காரோ குன்றுகளைத் தங்களது நடவடிக்கைகளுக்கான தளமாகப் பயன்படுத்துவதால் இம் முயற்சி அதிக வெற்றியடையவில்லை.

மாவட்டங்கள்
கிழக்கு காரோ குன்றுகள்
கிழக்கு காசி குன்றுகள்
ஜைந்தியா குன்றுகள்
ரி போய்
தென் காரோ குன்றுகள்
மேற்கு காரோ குன்றுகள்
மேற்கு காசி குன்றுகள்
குறிப்பிடத்தக்க பிரமுகர்கள்
அடோல்ப் லு ஹிட்லர் மராக்
டாக்டர். டி. டி. லபாங்

மக்கள் தொகை சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 2,318,822 100%
இந்துகள் 307,822 13.27%
இசுலாமியர் 99,169 4.28%
கிறித்தவர் 1,628,986 70.25%
சீக்கியர் 3,110 0.13%
பௌத்தர் 4,703 0.20%
சமணர் 772 0.03%
ஏனைய 267,245 11.53%
குறிப்பிடாதோர் 7,015 0.30%

நன்றி மீண்டும் பயணம் சரித்திரத்தை அறியபடுத்துவதற்காக தொடரும் ..

அஸ்ஸாம் .

அசாம் அல்லது அஸ்ஸாம் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்த மாநிலமாகும். இந்த மாநிலத்தின் தலைநகர் திஸ்பூர். குவஹாத்தி இம்மாநிலத்தின் முக்கிய நகரம். அசாமிய மொழியும், போடோ மொழியும் அசாமின் அதிகாரப்பூர்வ மொழிகளாகும். அசாம் மாநிலம் தெற்கு இமய மலையின் கிழக்கு பகுதியில், பிரம்மபுத்திரா மற்றும் பாரக் ஆகிய ஆறுகளின் பாயும் பள்ளத்தாக்கையும், அதனை ஒட்டி அமைந்துள்ள மலைகளையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் பரப்பளவு சுமார் 78,438 சதுர கிலோமீட்டர்கள். அசாம் மாநிலத்தை ஒட்டியுள்ள 6 மாநிலங்களையும், அசாம் மாநிலத்தையும் , ஏழு சகோதரிகள் என்று அழைப்பர். அவையாவன: அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் மேகாலயா. இவ்வேழு மாநிலங்களும் மற்ற இந்திய மாநிலங்களோடு மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஒரு சிறிய பகுதியின் மூலமாகவே நிலவழியாக இணைக்கப்படுகின்றன. இப்பகுதி சில்லிகுறி குறுவழி என்றும், கோழி கழுத்து என்றும் அழைக்கப்படுகிறது.அசாம் மாநிலம் பூட்டான் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளுடன் சர்வதேச எல்லைகளையும் கொண்டுள்ளது. அசாம் மாநிலம், 1826 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் யாண்டபோ உடன்படிக்கையால் இந்தியாவின் அங்கமானது.

தேயிலை உற்பத்தியில் சிறந்து விளங்கும் அசாம் மாநிலம், பெட்ரோலியம், பட்டு ஆகியவற்றின் உற்பத்தியிலும் சிறந்து விளங்குகிறது. உலகில் வேறெங்கிலும் காண கிடைக்காத பல அரிய விலங்கினங்களும், தாவர வகைகளும் அசாம் காடுகளில் காணப்படுகின்றன. உதாரணமாக, ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், புலி, ஆசிய யானை ஆகிய அரியவகை விலங்குகள் இம்மாநிலக் காடுகளில் வாழுகின்றன. இதன் காரணமாக, இவ்விலங்கினங்களை காண உலகமெங்கிலும் இருந்து இயற்கை ஆர்வலர்களும், சுற்றுலாப் பயணிகளும் அசாம் மாநிலத்திற்கு வருகை தருகின்றனர். குறிப்பாக, காசிரங்கா பகுதியும், மணாஸ் பகுதியும் உலக பாரம்பரியக் களங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. முன்காலத்தில் அசாம் மாநிலம் அதன் காட்டு வளத்திற்கும், காட்டில் இருந்து கிடைக்கும் பொருள்களுக்கும் புகழ்பெற்றிருந்தது. தொடர்சியான காட்டழிப்பால் இம்மாநிலத்தின் காடுகளின் நிலை பெரும் கேள்விகுள்ளாகியுள்ளது. உலகின் அதிக மழைபெய்யும் இடங்களில் ஒன்றான அசாம் மாநிலம், மாபெரும் ஆறான பிரம்மபுத்திரா ஆற்றினால் வளம் பெறுகிறது

பெயர்க்காரணம்

அசாம் மகாபாரதத்தில் பிரகியோதிசா என்ற பெயரிலும், காமரூபா அரசு என்ற பெயரிலும் அழைக்கப் படுகிறது. அசாம் என்ற பெயர் இப்பகுதியை 1228 முதல் 1826 வரை ஆண்ட அகோம் அரசுகளால் சூட்டப்பட்டதாக தெரிகிறது.ஆங்கிலேய ஆதிக்கத்தின்கீழ் 1838 ஆம் ஆண்டு வந்த அசாம் நிலப்பகுதி, அதே பெயரிலேயே அழைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 27ஆம் தியதி இன்றைய அசாம் அரசு மாநிலத்தின் பெயரை அசோம் என மாற்றியமைத்தது.இம்மாற்றம் மக்களிடையே பரவலான எதிப்பை உருவாக்கியது.

புவியியல்

பல புவியியல் ஆய்வுகளின் முடிவில் அசாம் மாநிலத்தின் வற்றாஆறான பிரம்மபுத்திரா ஆறு, இமயமலை தோன்றுவதற்கு முன்னரே தோன்றியதாகக் கண்டறிந்துள்ளனர். அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் மிகவேகமாக பாயும் பிரம்மபுத்திரா ஆறானது அசாம் மாநிலத்தில் வேகம் குறைந்து, பல கிளை ஆறுகளாக பிரிந்து, சுமார் 80 முதல் 100 கிலோமீட்டர் அகலமும், 1000 கிமீ நிளமும் கொண்ட பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கை வளம் செய்கிறது.

போடோ மக்கள்

போடோ மக்கள் (Bodos) எனப்படுவோர் வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வாழும் பழங்குடியினர் ஆவர். 1991 ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி அசாம் மாநிலத்தில் 1.2 மில்லியன் போடோ இனத்தவர்கள் வாழ்கிறார்கள். இது மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 53. விழுக்காடு ஆகும். அசாம் மாநிலத்தின் உதால்குரி, கொக்ராஜார் ஆகிய நகரங்களில் இவர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்தியாவின் ஷெடியூல் வகுப்பினரில் போடோக்கள் 8வது இடத்தை (1971) வகிக்கின்றனர். இவர்கள் போடோ மொழியைப் பேசுகின்றனர்.போடோக்கள் போடோ-கச்சாரி என்ற இனக்குழுக்களின் 18 பிரிவுகளில் ஒன்று என 19ம் நூற்றாண்டில் முதன் முதலாக வகைப்படுத்தப்பட்டது. வடகிழக்கு இந்தியாவின் பெரும் பகுதியிலும், நேபாளத்திலும் போடோக்கள் வாழ்கின்றனர். பிரம்மபுத்ரா ஆற்றுக் கரைகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையானோர்ர் போடோக்கள் ஆவர்.போடோக்கள் முன்னைய காலங்களில் தம்முடைய மூதாதையோரயே வழிபட்டு வந்தனர். இதற்கு "பாத்தூயிசம்" என்று பெயர். அண்மைக்காலங்களில் இந்து சமயத்தைப் பின்பற்றுகிறார்கள்.

போடோக்கள் இன்று
1980களின் இறுதிப் பகுதியில் இருந்து போடோக்கள் தமக்கு சுயாட்சி வழங்கக்கோரி உபேந்திரா நாத் பிரம்மா தலைமையில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இவர் இப்போது போடோக்களின் தந்தை என அழைக்கப்பட்டு வருகிறார். போடோக்களின் தனித்துவம், பண்பாடு, கலாசாரம், மொழி ஆகியவற்றைப் பேண நடத்தப்பட்ட போராட்டங்களை அடுத்து இவர்களுக்கு "போடோலாந்து பிராந்தியக் கவுன்சில்" என்ற தனியான நிர்வாக அலகு தற்போதைய கொக்ராஜார் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது. சுயாட்சிக்கான போராட்டங்கள் "அனைத்து போடோ மாணவர் அமைப்பு" மூலமாகவும், "போடோ விடுதலைப் புலிகள்" (Bodo Liberation Tigers, BLT) என்ற ஆயுத அமைப்பினாலும் முன்னெடுக்கப்பட்டது. இவர்களைவிட "போரோ பாதுகாப்பு படை", போடோலாந்து தேசிய மக்களாட்சி முன்னணி, போன்றவை ஆயுதம் தாங்கி தற்போதும் போராடி வருகின்றன.
2006 அசாம் மாநில தேர்தல்களில் போடோ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து திஸ்பூரில் போட்டியிட்டு ஆட்சியை அமைத்தனர்.


மக்கள் தொகை சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 26,655,528 100%
இந்துகள் 17,296,455 64.89%
இசுலாமியர் 8,240,611 30.92%
கிறித்தவர் 986,589 3.70%
சீக்கியர் 22,519 0.08%
பௌத்தர் 51,029 0.19%
சமணர் 23,957 0.09%
ஏனைய 22,999 0.09%
குறிப்பிடாதோர் 11,369 0.04%

நன்றி மீண்டும் பயணம் தொடரும் .. அறியாதவற்றை மீண்டும் அறியபடுத்துவதற்காக……

அருணாசலப் பிரதேசம் .

அருணாசலப் பிரதேசம் (Arunachal Pradesh) இந்தியாவின் ஒரு மாநிலமாகும். இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரும் இரண்டு முக்கிய பிரதேசங்களில் இதுவும் ஒன்று. மற்றது அக்சாய் சின்.அருணாசலப் பிரதேசம் முன்னர் NEFA (வட கிழக்கு முன்னணி ஏஜென்சி) என அழைக்கப்பட்டது. 1987 வரை அஸ்ஸாமின் ஒரு பகுதியாக விளங்கியது. நாட்டின் கிழக்குப் பகுதியின் பாதுகாப்பையுன், இந்தோ-சீன முறுகல் நிலையையும் கருத்தில் கொண்டு, இதற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது.
12 நகரங்களிலும், 3649 கிராமங்களிலும் பரவியுள்ள இம் மாநிலத்தின் சனத்தொகை, 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 1,091,117 ஆகும். இம் மாநிலம் நாட்டில் அதிகுறைந்த அடர்த்தியாக ஒரு சதுர கி.மீட்டருக்கு 13 பேரைக் கொண்டுள்ளது. தேசிய அளவில் 1991 தொடக்கம் 2001 வரையிலான பத்தாண்டு வளர்ச்சியாகிய 21.34% உடன் ஒப்பிடும்போது, மாநில சனத்தொகை வளர்ச்சி 26.21% ஆக உள்ளது. அருணாசலப் பிரதேச சனத்தொகையில் 1000 ஆண்களுக்கு 901 பெண்கள் உள்ளனர். இது தேசிய ஆளவான 933 இலும் குறைவாகும்.

மாநிலத்தின் மொத்த கல்வியறிவு 1991 இலிருந்த 41.59% இலிருந்து 54.74% ஆக அதிகரித்துள்ளது. கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 487,796 ஆகும். இப் பிரதேசத்தில் 20 முக்கிய இனக்குழுக்களும், பல துணை இனக்குழுக்களும் வாழுகின்றன. ஒரு பொதுக் குழுவிலிருந்து உருவானதால், இச் சமுதாயங்களிற் பெரும்பாலானவை இனரீதியில் ஒத்தவை, எனினும் புவியியல் ரீதியில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த காரணத்தால், மொழி, உடை மற்றும் பழக்க வழக்கங்களில் சில வேறுபட்ட சிறப்பியல்புகள் அவர்களிடையே இருப்பதைக் காணலாம்.அவர்களுடைய சமூக-சமய ஒற்றுமையின் அடிப்படையில் இவர்களை மூன்று பண்பாட்டுக் குழுக்களாகப் பிரிக்கலாம். தவாங் மற்றும் மேற்கு கமெங் மாவட்டங்களைச் சேர்ந்த, மொன்பாஸ் மற்றும் ஷெர்டுக்பென்ஸ், லாமாயிச மரபில் வந்த மகாயான பௌத்தத்தைப் பின்பற்றுகிறார்கள். இதனால் இவர்கள் வாழும் கிராமங்களில் அதிக அளவில் அழகுபடுத்தப்பட்ட "கொம்பாஸ்" எனும் பௌத்த கோயில்களைக் காண முடியும். பெரும்பாலானவர்கள், படியமைப்புப் பயிர்ச் செய்கையைக் கைக்கொள்ளும் விவசாயிகளாக இருந்த போதிலும், இவர்களிற் பலர் yak மற்றும் மலையாட்டு மந்தை வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களை ஒத்த பண்பாட்டைக் கொண்டவர்களே, வடக்கு எல்லையோரமுள்ள உயர்ந்த மலைகளில் வாழும் மெம்பாக்கள், கம்பாக்கள் போன்றவர்களாவர். மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் வாழும் கெம்ப்டி மற்றும் சிங்போ இனத்தவர்கள் தேரவாத பௌத்தர்கள். இவர்கள் தாய்லாந்து, மியன்மார் (பர்மா) ஆகிய நாடுகளிலிருந்து நீண்ட காலத்துக்கு முன் இடம் பெயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் தாயகத்தில் வழக்கிலிருந்த பண்டைய எழுத்துக்களிலிருந்து உருவான எழுத்துக்களையே இன்னும் பயன்படுத்தி வருகிறார்கள்.

இரண்டாவது குழுவினர், தொன்யி-போலோ, அபோ தானி என அழைக்கப்படும் சூரிய, சந்திரக் கடவுளர்களை வணங்கும், "அதி"கள், "அகா"க்கள், அப்தானிகள், பங்னிகள், நிஷிகள், மிஷ்மிகள், மிஜிகள், தொங்சாக்கள் போன்றவர்களாவர். இவர்களுடைய சமயக் கிரியைகள், பெரிதும் விவசாய வட்டங்களின் கட்டங்களுடன் பொருந்துகின்றன. அவர்கள் இயற்கைத் தேவதைகளுக்கு விலங்குகளைப் பலியிடுகிறார்கள். இவர்கள் பாரம்பரியமாக ஜும்மிங் அல்லது shifting பயிர்ச் செய்கையைக் கைக்கொள்ளுகிறார்கள். அதிகளும், அப்தானிகளும் ஈர நெற் செய்கையில் பெருமளவில் ஈடுபட்டு, குறிப்பிடத்தக்க விவசாயப் பொருளாதாரத்தைக் கொண்டவர்களாக உள்ளனர். அப்தானிகள் அவர்களுடைய, நெல்லுடன்கூடிய மீன்வளர்ப்புக்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள், ஒவ்வொரு நெற்பயிற் செய்கையிலும், இரண்டு முறை மீன் விளைவைப் பெறுவதில் நூற்றாண்டுகளாக அநுபவம் பெற்றவர்கள்.மூன்றாவது குழுவினர், நாகலாந்தை அண்டியுள்ள திரப் மாவட்டத்தைச் சேர்ந்த நொக்டேக்கள், மற்றும் வஞ்சோக்கள் ஆவர். பாரம்பரிய கிராமத் தலைவர்கள் இன்னும் முக்கிய பங்கு வகிக்கும் இக் குழுவினர் இறுக்கமான சமூகக் கட்டமைப்பைக் கொண்ட கிராம சமுதாயத்துக்காக, அறியப்பட்டவர்கள். நொக்டேக்கள் ஆரம்பநிலை வைஷ்ணவத்தையும் பின்பற்றி வருகிறார்கள்

மக்கள் தொகை சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 1,097,968 100%
இந்துகள் 379,935 34.60%
இசுலாமியர் 20,675 1.88%
கிறித்தவர் 205,548 18.72%
சீக்கியர் 1,865 0.17%
பௌத்தர் 143,028 13.03%
சமணர் 216 0.02%
ஏனைய 337,399 30.73
குறிப்பிடாதோர் 9,302 0.85%

நன்றி மீண்டும் பயணம் தொடரும் ..

சிக்கிம் .

சிக்கிம் இமய மலைத்தொடரில் அமைந்த இந்திய மாநிலமாகும். 1975ஆம் வருடம் இது இந்தியாவுடன் சேர்க்கப் பட்டது. அதுவரை ஒரு தனி நாடாக விளங்கியது. சிக்கிமின் தலைநகர் கேங்டாக். நேபாள மொழி அதிகாரப்பூர்வ மொழி. இந்து மதமும், வஜ்ராயன புத்த மதமும் இம்மாநில மக்களால் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. இந்திய மாநிலங்களிலேயே கோவா மாநிலம் மட்டும் தான் சிக்கிமை விட சிறிய மாநிலம். சிக்கிமின் மேற்கில் நேபாளமும், வடக்கில் சீனாவும், கிழக்கில் பூட்டானும், கிழக்கில மேற்கு வங்களாமும் உள்ளன. உலகின் மூன்றாவது உயர்ந்த சிகரமான கஞ்செஞ்சுங்கா சிக்கிமில் உள்ளது.

இந்தியாவுடன் இணைந்தது

1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது, சிக்கிம் இந்தியாவுடன் இணைய மறுத்துவிட்டது. பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, சிக்கிமிற்கு சிறப்பு அந்தஸ்து (SPECIAL PROTECTORATE STATUS) கொடுத்து இந்தியாவின் துணை மாநிலமாக இருக்க ஒப்புக் கொண்டார். அதன்படி சிக்கிமின் பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு போன்றவை இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன; மற்ற எல்லா விஷயங்களிலும் சுயாட்சி அந்தஸ்து பெற்றிருந்தது. நேப்பாளிகளின் ஊடுருவல் அதிகமாகத் தொடங்கவே, 1975-ல் சிக்கிமின் பிரதமராகப் பொறுப்பேற்ற காஜி என்பவர் சிக்கிமை இந்தியாவின் ஒரு மாநிலமாகவே இணைத்துக் கொள்ள இந்திய அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி எடுக்கப்பட்ட பொது வாக்கெடுப்பில் 97.5% சிக்கிம் மக்கள் இந்தியாவுடன் இணைவதை ஆதரிக்க, 16.05.1975-ல் சிக்கிம் இந்தியாவின் 22-ஆவது மாநிலமாக இணைந்தது.

இணைப்பு:

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பக்தோக்ரா என்கிற விமான நிலையம் 114 கிலோமீட்டர் தூரத்திலும், NJP என்று சொல்லப்படும் நியூ ஜய்பால்குரி (இதுவும் மேற்கு வங்காளமே) என்கிற ஊரின் புகைவண்டி நிலையம் 125 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன. சாலைமார்க்கமாக டார்ஜிலிங் 94 கிலோமீட்டர் தொலைவிலும், சிலிகுரி என்கிற ஊர் 114 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன. சிக்கிமில் புகைவண்டித் தடமோ, விமான நிலையமோ கிடையாது.


வித்தியாசமான மாநிலம்

சிக்கிம், 7096 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட சிறிய மாநிலம். தெற்கு வடக்காக 115 கிலோமீட்டரும், கிழக்கு மேற்காக 65 கிலோமீட்டரும் விஸ்தீரணம் கொண்டுள்ளது. நான்கே மாவட்டங்கள். கிழக்கு சிக்கிம்(தலைநகரம் காங்டாக்), மேற்கு சிக்கிம்(தலைநகரம் கைஷிங்), வடக்கு சிக்கிம்(தலைநகரம் மங்கன்), தெற்கு சிக்கிம்(தலைநகரம் நாம்ச்சி) என்பவை தான் மாவட்டங்களின் பெயர்கள். சிக்கிம் மாநிலத்தின் தலைநகரம் காங்டாக்.இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தில் எவ்வளவோ அரசியல் குழப்பங்கள், தீவிரவாத துர்நிகழ்வுகள், போதைப் பொருள் புழக்கங்கள், சமூக பொருளாதாரக் கோணங்களில் பின்தங்கிய நிலை என்று இருந்தாலும் இயற்கை அன்னையின் பூரண அரவணைப்பு இருக்கிறது. வடகிழக்கின் ஏழு மாநிலங்களில் அடிதடிப் பிரச்னை, அரசியல் குழப்பம், தீவிரவாத நடவடிக்கைகள் என்று ஏதும் ஒரு சிறிதும் இல்லாத அமைதியான ஒரே மாநிலம் சிக்கிம்.அரசியல் என்று பார்த்தால் சிக்கிம் டெமாக்ரடிக் ஃப்ரண்ட் என்கிற ஒரே கட்சி தான் பிரதானம். பெயருக்கு எதிர்க்கட்சியாக காங்கிரஸ்.2009 மே மாதம் பாராளுமன்றத்துடன் சேர்ந்து நடந்த மாநில சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 23 தொகுதிகளில் 23-ஐயும் வென்று பாராளுமன்றத் தொகுதியையும் கைப்பற்றி இருக்கிறது.சிக்கிம் டெமாக்ரடிக் ஃப்ரண்ட்.

சுற்றுச்சூழல் பராமரிப்பிலும், பொதுசுகாதாரம் மற்றும் சுத்தம் ஆகியவற்றிற்கு மிகவும் முக்கியத்துவம் தந்து நிர்வகிக்கப்படும் பகுதியாகத் திகழ்கிறது இந்தச் சிறிய மாநிலம். ஒட்டுமொத்த சிக்கிமிலும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை உள்ளது. கடைகளில் துணிப்பையில் தான் பொருட்கள் தருகிறார்கள். பயண வழியெங்கும், குறிப்பாக மலைப்பகுதிகளில் அவ்வளவு பயணிகள் வந்து செல்லும் இடத்திலும் பிளாஸ்டிக் குப்பைகள் கண்களில் படுவதில்லை.ஏழெட்டு மாதங்கள் சுற்றுலாப் பயணிகளின் வரவு நிறைய பணப்புழக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. டாக்சி வாடகையாகட்டும், அறைகளின் வாடகையாகட்டும், உணவுப் பொருட்களின் விலையாகட்டும் எல்லாமே மாநிலம் இருக்கும் உயரத்துக்குப் பொருத்தமாகவே. மூவாயிரம் அடியிலிருந்து 28208 அடி உயரம் (உலகின் மூன்றாவது உயரமான சிகரம் கஞ்ஜன் ஜங்கா இந்த மாநிலத்தின் தான் உள்ளது) வரை மாநிலத்தின் உயரம் வேறுபடுகிறது.மொத்த மாநிலத்திலும் எங்கும் தொடர்ந்து ஐநூறடி தூரம் ஏற்ற இறக்கம் இல்லாமல் இல்லை. அதனாலேயே ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறிப்பாகப் போலீஸ்காரர்களுக்கும் தொப்பை என்பது அரிதாகவே உள்ளது

மக்கள் தொகை சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 540,851 100%
இந்துகள் 329,548 60.93%
இசுலாமியர் 7,693 1.42%
கிறித்தவர் 36,115 6.68%
சீக்கியர் 1,176 0.22%
பௌத்தர் 152,042 28.11%
சமணர் 183 0.03%
ஏனைய 12,926 2.39%
குறிப்பிடாதோர் 1,168 0.22%
நன்றி மீண்டும் பயணம் சரித்திரத்தை அறியபடுத்துவதற்காக தொடரும் ..

ஜம்முகாஷ்மீர் .

சம்மு காசுமீர்
சம்மு காசுமீர் (Dogri: जम्मू और कश्मीर; உருது: جموں اور کشمیر) இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு மாநிலமாகும். இம்மாநிலம் இமயமலை தொடர்ச்சியில் அமைந்துள்ளது. சம்மு காசுமீர் மாநிலம், வடக்கிலும் கிழக்கிலும் சீனாவை எல்லையாகவும், தெற்கில் இமாச்சல் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிங்களை எல்லையாகவும், வடக்கிலும், மேற்கிலும் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஆசாத் காசுமீர் பகுதியை எல்லையாகவும் கொண்டுள்ளது. ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய மூன்று பகுதிகளை கொண்ட மாநிலமாகும். ஜம்மு பகுதியில் இந்து மதத்தினரும், காஷ்மீர் பகுதியில் இஸ்லாமியரும், லடாக்கில் பௌத்தர்களும் பெரும்பான்மையினராக உள்ளனர். ஸ்ரீநகர் இம்மாநிலத்தின் தலைநகராகும், ஜம்மு குளிர்கால தலைநகராகும். இயற்கை அழகு நிறைந்த மலைகள் இம்மாநிலத்தில் உள்ளது. முன்பு ஒரே நிலப்பகுதியாக ஆளப்பட்டு வந்த காசுமீர் மாநிலம், காசுமீர் பிரச்சனையால் சீனா, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளால் மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காசுமீர் பகுதி சம்மு காசுமீர் என்ற பெயரில் மாநிலமாக ஆளப்படுகிறது. இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தை பாக்கிஸ்தான் நாட்டவரும், சீன நாட்டவரும் இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட காசுமீர் என்றே குறிப்பிடுகின்றனர்.சம்மு காசுமீர் மாநிலத்தை புவியியல் ரீதியாக மூன்று பகுதிகளாக பிரிக்கலாம்: ஜம்மு, காசுமீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக். கோடைகாலத்தில் ஸ்ரீநகர் தலைநகராகவும், குளிர்காலத்தில் ஜம்மு நகர் தலைநகராகவும் செயல்படுகிறது. மிக அழகான மலைப்பாங்கான நிலா அமைப்பையும், ஏரிகளையும் கொண்ட காசுமீர் பள்ளத்தாக்கு, புவியின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. ஜம்மு பகுதியில் உள்ள எண்ணற்ற கோவில்களும், மசூதிகளும் ஆயிரக்கணக்கான இந்து மற்றும் இசுலாமிய சமய புனிதப் பயணிகளை ஈர்க்கிறது. லடாக், பகுதி தொலைதூர மலை அழகையும், நீண்ட பெளத்த கலாச்சாரத்தையும் கொண்டு இருப்பதால் "குட்டி திபெத்" என்று அழைக்கப்படுகிறது.

வரலாறு

சம்மு மற்றும் காசுமீர் பகுதியை முதன்முறையாக மொகலாய பேரரசர் அக்பர் 1586 ஆம் ஆண்டில், தமது படைத்தலைவர்களான பகவன் தாஸ், முதலாம் இராமசந்திரா ஆகியோரை கொண்டு வென்றார். மொகலாய படை காசுமீர் பகுதியை ஆண்டு வந்த துருக்கிய ஆட்சியாளரான யூசூப் கான் படையை வென்றது. இப்போருக்கு பின், அக்பர் முதலாம் இராமசந்திராவை ஆளுநராக நியமித்தார். முதலாம் இராமசந்திரா, அப்பகுதியில் கோயில் கொண்ட இந்து தேவதையான ஜம்வா மாதாவின் பெயரில் ஜம்மு நகரை நிறுவினார்.

1780 ஆம் ஆண்டு, முதலாம் ராமச்சந்திராவின் வழித்தோன்றலான ரஞ்சித் தியோவின் மறைவுக்கு பின், சம்மு காசுமீர் பகுதி சீக்கியரால், ரஞ்சித் சிங் என்பவரால் பிடிக்கப்பட்டது. அதன்பின் 1846 வரை சிக்கிய ஆதிக்கத்தில் இருந்து வந்தது.ரஞ்சித் தியோவின் கிளையில் தோன்றிய குலாப் சிங் சிக்கிய அரசரான ரஞ்சித் சிங்கின் அவையில் முக்கிய பங்காற்றி, பல போர்களில் வெற்றி பெற்றமையை அடுத்து ரஞ்சித் சிங், 1820 இல் குலாப் சிங்கை ஜம்மு பகுதியின் ஆட்சியாளராக அறிவித்தார். மிகத் திறமையான பல படைத்தலைவர்களை கொண்ட குலாப் சிங் மிக விரைவாக தனது செல்வாக்கை உயர்த்தினார். படைத்தலைவர் சொரோவார் சிங் மூலம் காசுமீருக்கு கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் உள்ள லடாக் பகுதியையும், பால்டிசான் பகுதியையும் கைப்பற்றினார்.1909 ஆம் ஆண்டின் ஜம்மு காசுமீர் மாகாணத்தின் வரைபடம்1845 ஆம் ஆண்டில் முதலாவது ஆங்கிலேய- சீக்கிய போர் வெடித்த போது, போரில் எவ்வித பங்கும் கொள்ளாமல் இருந்த குலாப் சிங், 1846 ஆம் ஆண்டு நடைபெற்ற சொப்ரோன் போருக்கு பின் இருதரப்புக்கும் அமைதியை கொண்டு வரும் நடுநிலையாளராகவும், ஆங்கிலேய ஆலோசராகவும் மாறினார். இதன் விளைவாக இரண்டு உடன்பாடுகள் ஒப்பு கொள்ளப் பட்டன. முதலாவது ஒப்பந்தத்தின் படி, ஆங்கிலேயர் போரால் தமக்கு ஏற்பட்ட இழப்புக்கு (1.5 கோடி ரூபாய் ) ஈடாக மேற்கு பஞ்சாப் பகுதியை தம்வசம் கொண்டனர். இதன் மூலம் பஞ்சாப் பேரரசு தனது பெருமளவு நிலப்பகுதியை இழந்தது. இரண்டாவது ஒப்பந்தத்தின் படி குலாப் சிங் முன்பு பஞ்சாப் பேரரசை சார்ந்த நிலப்பகுதியில் உள்ளடக்கிய காசுமீர் பகுதிக்கு அரசராக சுமார் 75 லட்சம் ரூபாய்க்கு ஆக்கப்பட்டார். புதிய காசுமீர் அரசு நிறுவப்பட்டது.1857 குலாப் சிங்கின் மறைவுக்கு பின் அவரது மைந்தன் ரன்பீர் சிங் மேலும் பல பகுதிகளை வென்று காசுமீர் அரசுடன் இணைத்தார்.

ரன்பீர் சிங்கின் பேரன் ஹரி சிங் 1925 ஆம் ஆண்டு அரியணை ஏற்றபோது, இந்திய விடுதலை போராட்டம் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருந்தது. 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்தியப் பிரிவினையின் போது இரு நாடுகளும் அப்போதைய இந்தியாவில் இருந்த அனைத்து சிற்றரசர்களும் தம் விருப்பப்பட்டு தாம் விரும்பும் படி இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணையவோ, அல்லது சில குறிப்பிட்ட பகுதிகளில் தனி நாடாக செயல்படவோ ஒப்புக் கொண்டன. 1947 ஆம் ஆண்டு காசுமீர் அரசின் மக்கள்தொகையில் சுமார் 77% இசுலாமியர் வாழ்ந்து வந்தனர். ஒப்பந்தத்தை மிறி அக்டோபர் 20, 1947 அன்று பாக்கிஸ்தான் ஆதரவில் செயல்பட்ட பழங்குடிகள் காசுமீரை தாக்கி கைப்பற்ற முயன்றனர்.ஆரம்பத்தில் பாக்கிஸ்தானை எதிர்த்து போராடிய காசுமீர் அரசர் ஹரி சிங், அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி இந்தியாவின் ஆளுநர்-தளபதி மவுண்ட்பேட்டன் பிரபுவின் உதவியை நாடினார். காசுமீரை இந்தியாவுடன் இணைக்க முன்வந்தால் உதவ இயலும் என்ற மவுண்ட்பேட்டன் பிரபுவின் நிபந்தனையின் பேரில், இந்தியாவுடன் இணையும் உடன்பாட்டு ஆவணம் கையெழுத்து ஆனது.ஒப்பந்தம் கையெழுத்து ஆனதும் இந்திய போர்வீரர்கள் மேற்படி பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தும் ஆணையுடன் காசுமீருக்குள் நுழைந்தனர். ஆனால், அவ்வாணைப்படி புதிய ஆக்கிரமிப்பை மட்டுமே தடுக்க வேண்டும். ஏற்கனவே பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியை திரும்பப் பெறும் முயற்சி செய்யப்பட மாட்டாது.இம்முயற்சியின் போது இந்தியா இவ்விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு சென்றது.ஐநா தீர்மானத்தில், பாக்கிஸ்தான் தாம் கைபற்றிய பகுதிகளை விட்டு வெளியேறவும், இந்தியா, மக்கள் எந்த நாட்டுடன் வாழ விரும்புகிறார்கள் என்பதை அறியும் வகையில் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் வழி கூறப்பட்டது. பாக்கிஸ்தான் தான் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேற மறுத்து விடவே, இந்தியாவும் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்த விழையவில்லை.

இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளின் அரசாங்க உறவுகள் பாதிப்படைந்த நிலையில், பல்வேறு காரணங்களால் இரு நாடுகளுக்கும் இடையே மூன்று போர்கள் காசுமீர் பகுதியில் நடந்துள்ளன. அவையாவன, இந்திய-பாகிஸ்தான் போர், 1965, வங்காளதேச விடுதலைப் போர் மற்றும் கார்கில் போர். முந்தைய காசுமீர் நிலப்பகுதியில் 60 விழுக்காடு பகுதியை இந்தியாவும், ஆசாத் காசுமீர் என்று அழைக்கப்படும் 30 விழுக்காடு பகுதியை பாக்கிஸ்தானும், 1962 ஆம் ஆண்டுக்கு பின் 10 விழுக்காடு பகுதியை சீனாவும் நிர்வகிக்கின்றன.செல்வாக்கு மிகுந்த காசுமீர தலைவர் ஷேக் அப்துல்லா ஸ்ரீநகரில் ஓர் பேரணியில் பேசும் காட்சி . திரு அப்துல்லா காசுமீரத்தில் இந்தியாவின் ஆட்சியை விரும்பினாலும், காசுமீர் மாநிலத்தில் இந்திய அரசியலமைப்புக்கு உள்ளான மாநில சுயாட்சியை நிர்பந்தித்தார்.இது போன்று கிழக்கு பகுதியும் எல்லைப் பிரச்சனையில் சிக்குண்டுள்ளது.19 ஆம் நூற்றாண்டின் கடைசியிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இங்கிலாந்து, திபெத், ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையே காசுமீர் எல்லை பற்றிய பல உடன்படிக்கைகள் ஏற்பட்டாலும், அவைகளில் எதிலும் சீனா உடன்படாமல் விலகி இருந்தது. பின் 1949 இல் சீன பொதுவுடைமை கட்சி ஆட்சியை கைப்பற்றிய பின்னரும் சீனா தம் காசுமீர் எல்லை கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை. 1950 களில் துவக்கத்தில் சீன படை லடாக் நிலப்பரப்பின் வட கிழக்கு பகுதியில் தமது ஆக்கிரமிப்பை துவக்கியது.1956–57 ஆண்டுகளுக்குள் அக்சாய் சின் பகுதியில் சிஞ்சியாங்(Xinjiang )-மேற்கு திபெத் ஆகியவற்றை இணைக்கும் முழுமையான இராணுவ சாலையை அமைத்து விட்டது. இச்சாலை அமைபபதை பற்றி எவ்வித தகவலையும் அறியாத இந்தியா, பின்னர், அதுபற்றி அறிந்த போது, அப்பகுதி தமது பகுதியாக கோரியது. இதுவே இரு நாடுகளுக்கும் இடையே அக்டோபர் 1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற சீன- இந்திய போருக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 1962 ஆம் ஆண்டுக்கு பின் அக்சாய் சின் பகுதி முழுமையான சீன கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், அதனை தொடர்ந்த சில காசுமீர் பகுதிகளை ( Trans-Karakoram Tract) பாக்கிஸ்தான் சீனாவுக்கு இலவசமாக 1963 ஆண்டு கொடுத்தது.
1957 இல் மாநிலத்தின் அரசியல் சாசனம் இயற்றப்பட்டது முதல் புகழ்பெற்ற காசுமீர தலைவர் சேக் அப்துல்லா மறைந்த 1982 வரை இடையிடையே அமைதியும், அதிருப்தியும் மாறி வந்த ஜம்மு காசுமீர் மாநிலத்தில் 1982 ஆம் ஆண்டுக்கு பின் அமைதியின்மை தலைதூக்கியது.1987 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நடந்த குளறுபடிகளும், பாக்கிஸ்தான் உளவு துறையின் மறைமுக ஆதரவும் மேலும் அமைதியின்மையை உருவாக்கியது.அதன் பின் தொடர்ச்சியாக தீவிரவாதிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையே மோதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இருதரப்புமே அதிக அளவில் மனித உரிமை மீறல் குற்றங்களை தொடர்ந்து புரிவதாக கூறப்படுகிறது. இக்குற்றங்களில் படுகொலைகள், தடுத்து வைத்தல், கற்பழிப்பு, கொள்ளையிடுதல் ஆகியவையும் அடங்கும்.இருப்பினும், தீவிரவாதிகளின் ஆதிக்கம் 1996 ஆண்டு முதல் படிப்படியாக குறைந்து வருகிறது.

புவியியல் மற்றும் காலநிலை

சம்மு காசுமீர் இயற்கை வனப்புமிக்க பல பள்ளத்தாக்குகளை கொண்டுள்ளது. அவற்றில் சிறப்புமிக்கவை காசுமீர் பள்ளத்தாக்கு, தாவி பள்ளத்தாக்கு(Tawi), செனாப் பள்ளத்தாக்கு, பூன்ஞ் பள்ளத்தாக்கு, சிந்து Valley and லிடர் பள்ளத்தாக்கு (Lidder ) ஆகியவை. காசுமீர் பள்ளத்தாக்கு சுமார் 100 km அகலத்துடன் 15520 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது. இமயமலை காசுமீர் பள்ளத்தாக்கை லடாக் நிலப்பகுதியில் இருந்து பிரிக்கிறது. பீர் பஞ்சால்(Pir Panjal ) மலைத்தொடர் இப்பள்ளத்தாக்கு பகுதியை மேற்கிலும் தெற்கிலும் சூழ்ந்து வட இந்திய சமவெளியையும் காசுமீர் பள்ளத்தாக்கையும் பிரிக்கிறது. வட கிழக்கு பகுதியில் இப்பள்ளத்தாக்கு இமயமலை வரை தொடர்கிறது. மக்கள்தொகை அடர்த்தி அதிகமான அழகிய காசுமீர் பள்ளத்தாக்கு கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1850 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்க அதன் அருகில் உள்ள பீர் பஞ்சால் மலைத்தொடர் ஏறத்தாழ 5000 மீட்டர் உயரத்தில் உள்ளது.இமயமலை ஆறுகளில் ஒன்றான ஜீலம் ஆறு மட்டுமே காசுமீர் பள்ளத்தாக்கு வழியே பாயும் பெரிய ஆறாகும். சிந்து ஆறு, தாவி ஆறு, ராவி ஆறு மற்றும் செனாப் ஆறு ஆகிய ஆறுகள் இம்மாநிலத்தில் பாயும் மற்றைய இமயமலை ஆறுகள். சம்மு காசுமீர் பல இமயமலை பனிபாறைகளை (Himalayan glaciers) தன்னகத்தே கொண்டுள்ளது.சராசரியாக கடல் மட்டத்திலிருந்து சுமார் 5753 மீட்டர் உயரத்திலிருக்கும் உலகின் நீளமான இமயமலை பனிப் பாறையான சியாசென் பனிப்பாறை சுமார் 70 கிலோமீட்டர் நீளம் உடையது.

கார்கில் மாவட்டத்தில் உள்ள சான்ஸ்கர் வட்டத்தில் உள்ள ஒரு ஆற்றில் உல்லாச படகு பயணம்.சம்மு காசுமீர் மாநிலத்தின் காலநிலை அதன் மாறுபட்ட நிலவமைப்புக்கு தகுந்தவாறு இடத்துக்கிடம் மாறுபடுகிறது.உதாரணமாக தெற்கில் ஜம்மு பகுதியில் பருவக்காற்றுக் காலநிலை நிலவுகிறது. ஜனவரி முதல் மார்ச் வரை மாதம் சராசரியாக 40 முதல்50 மில்லி மீட்டர் வரை மழை பெறுகிறது.வேனிற் காலத்தில் ஜம்மு நகரின் வெப்பம் 40 °C (104 °F) வரையும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் சில ஆண்டுகளில் பெருமழையும் பெறுகிறது (650 மில்லி மீட்டர்). செப்டம்பர் மாதத்தில் மழை குறைந்து அக்டோபர் மாதம் கடும் வெப்பத்துடன் வறண்ட வானிலை காணப்படுகிறது. இம்மாதத்தில் வெப்பம் சுமார் 29 °C ஆக இருக்கிறது.அரபிக் கடலின் அண்மையால் ஆண்டுக்கு சுமார் 635 மில்லி மீட்டர் மழை பெறும் ஸ்ரீநகர் பகுதி மார்ச் முதல் மே மாதங்களில் மட்டும் சுமார் 85 மில்லிமீட்டர் மழை பொழிவை பெறுகிறது . இமயமலை தொடரால் மழை மேகங்கள் தடுக்கப் படுவதால் லடாக் நிலப்பரப்பில் கடும் குளிரும், வரட்சியும் நிலவுகிறது.வருட மழைப்பொழிவு சொற்பமான 100 மில்லிமீட்டர்க்கும் குறைவாகவும், மிகக் குறைந்த ஈரப்பதமும் காணப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 3 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் இப்பகுதியில் குளிர்காலம் மிகக் கடுமையானது.இப்பகுதியில் இருக்கும் சான்ஸ்கர் ( Zanskar) வட்டத்தின் சராசரி ஜனவரி வெப்பநிலை சுமார் -20 °C (-4 °F) ஆகும். அதுவே, சில கடும் குளிர் ஆண்டுகளில் -40 °C (-40 °F) வரை குறையக்கூடும். கோடை காலத்தில் லடாக் மற்றும் சான்ஸ்கர் பகுதியில் சுமார் 20 °C (68 °F) வெப்பம் நிலவுகிறது. இருப்பினும் இரவு நேரம் குளிர் அதிகமாகவே உணரப் படுகிறது.

அரசியலும் அரசும்

இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலம் மட்டுமே இந்திய அரசியலமைப்பின் 370 வது குறிப்பின்படி பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது. இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் காசுமீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி சம்மு காசுமீர் மாநிலத்தில் செல்லாது. சம்மு காசுமீர் மாநிலத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ஆளுகையும் உள்ளது.மேலும் இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு. மாற்றிய மாநிலத்தை சார்ந்த மக்கள் சம்மு காசுமீர் மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

பிரிவுகள்

சம்மு காசுமீர் மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கப் படுகிறது: ஜம்மு , காசுமீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் , மேலும், இப்பகுதிகள் 22 மாவட்டங்களாக பிரிக்கப் பட்டுள்ளது.சியாசின் பனியாறு, இந்திய இராணுவ கட்டுப்பாட்டில் இருப்பினும் அப்பகுதி சம்மு காசுமீர் மாநில ஆட்சிக்குள் கொண்டு வரப்படவில்லை.

ஜம்மு பகுதி
1.Kathua மாவட்டம்
2.ஜம்மு மாவட்டம்
3.சம்பா மாவட்டம்
4.உதம்பூர் மாவட்டம்
5.ரியாசி மாவட்டம்
6.ராஜௌரி மாவட்டம்
7.பூன்ஞ் மாவட்டம்
8.தோடா மாவட்டம்
9.ரம்பன் மாவட்டம்
10.கிஷ்ட்வார் மாவட்டம்
காசுமீர் பள்ளத்தாக்கு பகுதி
11.அனந்தநாக் மாவட்டம்
12.குல்கம் மாவட்டம்
13.புல்வாமா மாவட்டம்
14.சோபியான் மாவட்டம்
15.புடகம் மாவட்டம்
16.ஸ்ரீநகர் மாவட்டம்
17.கண்டேர்பல் மாவட்டம்
18.பண்டிபோரா மாவட்டம்
19.பாரமுல்லா மாவட்டம்
20.குப்வாரா மாவட்டம்
லடாக் பகுதி
21.கார்கில் மாவட்டம்
22.லே மாவட்டம்

மக்கள் கணக்கியல்

மக்கள்தொகை வளர்ச்சி | 1951= 3254000 | 1961= 3561000 | 1971= 4617000 | 1981= 5987000| 1991= 7837000 | 2001= 10143700 | estimate= | estyear= | estref= | footnote=மூலம்:இந்திய மக்கள்தொகை கணக்கீடு 1991 ஆண்டு மக்கள் தொகை கணக்கீடு ஜம்மு காசுமீர் மாநிலத்தில் நடத்தப் படவில்லை.1991 மொத்த மக்கள்தொகை இடைக்கணிப்பு முறையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலத்தில் மட்டுமே இசுலாமியர் பெரும்பான்மையினராக உள்ளனர். மாநிலத்தில் இசுலாம் சமயத்தை பின்பற்றுவோர் சுமார் 67% சதவிகிதமானோர். காசுமீர் பள்ளத்தாக்கு பகுதியில் வாழும் 97% மக்கள் இசுலாமியர் ஆவர்.மற்ற பல சமயத்தவரும் இங்கு வாழுகின்றனர். ஜம்மு பகுதி இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியாக உள்ளது. இங்கு 65% மக்கள் இந்துக்களாகவும் 31% மக்கள் இசுலாமியராகவும், 4% மக்கள் சீக்கியராகவும் உள்ளனர்.லடாக் நிலப்பகுதியில் பௌத்த சமயத்தை சார்ந்தோர் 46% ஆவர். லடாக் பகுதியில் உள்ள மக்கள் இந்தோ-திபெத்திய இனத்தில் வழிவந்தோர் ஆவர். ஆனால் ஜம்முவின் தெற்கு பகுதியில் உள்ளோர் பெரும்பாலும் இந்தியாவின் மற்றைய அண்டைய மாநிலங்களான ஹரியானா பஞ்சாப், டெல்லி ஆகிய பகுதிகளில் இருந்து குடியேறியவர்கள். மொத்தத்தில் இசுலாமியர் 67%, இந்துக்கள் 30%, பௌத்தர் 1%, சீக்கியர் 2% சம்மு காசுமீர் மாநிலத்தில் வாழுகின்றனர்.
புகழ்பெற்ற அரசியல் நிபுணர் அலெக்சாண்டர் எவன்ஸ் அவர்களின் படி, தோராயமாக 95% சதவிகித (160,000-170,000 ) காசுமீர் பண்டிட் என்று அழைக்கப்படும் காசுமீர் பிராமணர் சமுதாயம் காசுமீர் பள்ளத்தாக்கு பகுதியை விட்டு 1990 வருடங்களில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களால் வெளியேறி விட்டனர்.அமெரிக்க உளவு அமைப்பான சென்டிரல் இன்டலிஜன்ஸ் ஏஜென்சி (சிஐஎ)அறிக்கையின் படி, சுமார் 300,000 காசுமீர் பிராமணர் இசுலாமிய குறிவைத்த தாக்குதல்களால் சம்மு காசுமீர் மாநிலத்தை விட்டு கட்டாய இடப்பெயர்ச்சியால் வெளியேறி உள்ளனர்.சம்மு காசுமீர் மாநிலத்தின் முதன்மை மொழிகளாவன : காஷ்மீரி மொழி உருது மொழி, தோர்கி மொழி, பகாரி மொழி, பால்டி மொழி, லடாக் மொழி, பஞ்சாபி, கோஜ்ரி மொழி and தாத்ரி மொழி ஆகியன ஆகும். பாரசீக-அரபி எழுத்துக்களால் எழுதப்படும் உருது மொழி மாநிலத்தின் அலுவல் மொழியாகும். இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டாவது மொழிகளாக உள்ளன.

நன்றி மீண்டும் பயணம் சரித்திரத்தை அறியபடுத்துவதற்காக தொடரும் ..

பஞ்சாப் .

பஞ்சாப் (இந்தியா)

தலைநகரம் :சண்டிகர்
மிகப்பெரிய நகரம் :லூதியானா
ஆட்சி மொழி :பஞ்சாபி
ஆளுனர் :சுனித் பிரான்சிஸ்
முதலமைச்சர் :பிரகாஷ் சிங் பாதல்
ஆக்கப்பட்ட நாள் 1966-11-01
பரப்பளவு 50362 கி.மீ² மக்கள் தொகை (2000)அடர்த்தி 24,358,999 /482/கி.மீ²
மாவட்டங்கள் 20

பஞ்சாப் என்பது பாரசீக மொழியில் "ஐந்து ஆறுகள்".இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். இம்மாநிலத்தின் மேற்கில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபும், வடக்கில் ஜம்மு காஷ்மீரும், வட கிழக்கில் இமாசல பிரதேசமும், தென் கிழக்கில் அரியானாவும், தென் மேற்கில் ராஜஸ்தானும் உள்ளன. லூதியானா, ஜலந்தர், பாட்டியாலா, அம்ரித்சர் ஆகியவை இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள். பஞ்சாபின் எல்லைக்கு வெளியே உள்ள சண்டிகர் பஞ்சாபின் தலைநகராகும். பஞ்சாபி மொழி அதிகாரப்பூர்வ மொழி. சீக்கிய மக்களே இங்கு பெருமளவில் வசிக்கின்றனர். கோதுமை பஞ்சாபில் அதி்கமாக விளையும் பயிராகும். பஞ்சாபில் ராவி, பியாஸ், சத்லஜ் ஆகிய மூன்று ஆறுகள் பாய்வதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது. ஜீலம், செனாப் ஆகியவை பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தி்ல் பாய்கின்றன.


பண்டைய காலத்தில், பஞ்சாப் பகுதி என்று அழைக்கப்பட்ட நிலப்பரப்பு, இன்றைய இந்திய பஞ்சாப் மாநிலம், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம், அரியானா மாநிலம், இமாச்சல பிரதேசம், டெல்லி , ஆப்கானிஸ்தானின் சில பகுதிகள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இன்றைய பஞ்சாப் மாநிலம் 1966 ஆம் ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாநிலத்தை பிரித்து உருவாக்கப்பட்டது. பஞ்சாப்பின் அண்டை மாநிலங்களான அரியானா மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இப்பிரிவின் மூலம் உருவாக்கப்பட்டவனயே.வேளாண்மை பஞ்சாப் மாநிலத்தின் முதன்மை தொழிலாக இருந்துவருகிறது. பஞ்சாப், இந்தியாவின் மிகச் சிறந்த அடிப்படை கட்டமைப்பை கொண்ட மாநி்லங்களில் ஒன்றாக விளங்குகிறது.பஞ்சாபில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை மற்ற இந்திய மாநிலங்களைவிட மிகக்குறைவாக இருந்துவருகிறது. 1999-2000 கணக்கெடுப்பின்படி, சுமார் 6.16 விழுக்காடு மக்கள் மட்டுமே வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.

தோற்றம்

"பஞ்சாப்" என்ற பாரசீக மொழி சொல், 'பஞ்' (پنج) = 'ஐந்து', 'ஆப்' (آب) = நீர், என்று பிரிக்கப்பட்டு ஐந்து ஆறுகள் பாயும் பகுதி என்று பொருள் தரும். இவ் ஐந்து ஆறுகளாவன : ஜீலம், செனாப், ராவி, பியாஸ் மற்றும் சத்லஜ்

புவியியல்

பஞ்சாபின் பெரும்பகுதி வளமிக்க வண்டல் மண் கொண்டுள்ளது. பொதுவாக வரண்ட வானிலையை கொண்டிருப்பினும், மிகச் சிறந்த நீர்பாசன கட்டமைப்பினை கொண்டிருப்பதாலும், வளமிக்க மூன்று ஆறுகள் பாய்வதாலும், வேளாண்மையில் சிறந்து விளங்குகிறது.பஞ்சாப் பகுதியின் தட்பவெட்பம், பருவ நிலைக்கு தக்கவாறு, -5 °C இருந்து 47 °C வரை நிலவுகிறது.

கல்வி

பஞ்சாப் ஜலந்தர் NITJ முதன்மை கட்டடம்பஞ்சாப் மாநிலத்தில் 11 உயர் கல்வி அரசு பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. கலை, அறிவியல், உளவியல், பொறியியல், சட்டம், மருத்துவம், கால்நடை மருத்துவம், வணிகம், ஆகிய பல்வேறு துறைகளில், உயர் கல்வி அளிக்கப்பட்டுவருகிறது. பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம் உலக புகழ் பெற்றது. அதுவே, 1960- 19970 களில் நடந்த பஞ்சாப்பின் பசுமை புரட்சிக்கு பெரும் பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப்பின் பல்கலைக்கழகங்கள்
1.குருநானக் தேவ் பல்கலைக்கழகம் , அம்ரித்சர் .
2.பஞ்சாபி பல்கலைக்கழகம் , பாட்டியாலா.
3.பஞ்சாப் பல்கலைக்கழகம் , சண்டிகர் .
4.பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம் , லூர்தியானா .
5.பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் , சலண்தர்.
6.பாபா பரிது பல்கலைக்கழகம், பரிதுகோட்.
7.பஞ்சாப் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், தால்வாண்டி
8.குரு அங்கது தேவ் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம்
9.தேசிய மருந்து கல்வி & ஆராட்சி கழகம் , மௌகலி
10.தேசிய தொழில்நுட்ப கழகம் , சலண்தர்.
11.தாபர் பல்கலைக்கழகம் , பாட்டியாலா.

வணிகம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு

பஞ்சாப் இந்தியாவின் மிகச்சிறந்த அடிப்படை கட்டமைப்பினை கொண்ட மாநிலங்களில் ஒன்று[11]. இந்திய தேசிய பொருளாதார ஆராய்ட்சி குழு (Indian National Council of Applied Economic Research NCAER) தனது தரவரிசையில் இந்தியாவின் சிறந்த அடிப்படை கட்டமைப்பை கொண்ட மாநிலமாக பஞ்சாப் மாநிலத்தை தேர்ந்தெடுத்துள்ளது. [12]. நாட்டில் மின்சார உற்பத்தி/ தனிநபர் யில் மற்ற இந்திய மாநிலங்களை விட சுமார் 2.5 மடங்கு அதிகம்பெற்று பஞ்சாப் முதன்மை வகிக்கிறது. இதன் காரணமாக, பஞ்சாப்பின் எல்லா முக்கிய நகரங்களிலும், மின் கட்டணம் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
சாலைகளின் மொத்த நீளம் 47,605 கிலோமீட்டர்.
அனைத்து நகரங்களும் தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலை நீளம்: 1000 கிலோமீட்டர்.
மாநிலம் நெடுஞ்சாலை நீளம்: 2166 கிலோமீட்டர்
முக்கிய மாவட்ட சாலைகள்: 1799 கிலோமீட்டர்.
ஏனைய மாவட்டம் சாலைகள்: 3340 கிலோமீட்டர்.
இணைப்பு சாலைகள்: 31657 கிலோமீட்டர்.

சுற்றுலா

புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் மௌகின்தரா கல்லூரி, பாட்டியாலா.
இலக்கியம்
நடனம்
பங்கரா
நாடகம்
ஓவியம்
சினிமா
உணவு
உடை
கட்டிடக்கலை
சிற்பம்
விளையாட்டு
பாதுகாப்பு கலை
பஞ்சாப்பின் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் சுற்றுலாத்துறையும் ஒன்று. பஞ்சாப் பஞ்சாப்பின் சுற்றுலாத்துறை அம்மாநிலத்தின் கலாச்சாரம், பண்பாடு, பழம்பெருமை, வரலாறு ஆகியவற்றை பறைசாற்றும் சின்னங்களை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது.
புகழ்பெற்ற பஞ்சாப் குடிமக்கள்.தற்போதய இந்திய பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சார்ந்தவர். முன்னாள் இந்திய பிரதமர்களாக பதவிவகித்த திரு.ஐ. கே. குஜரால் மற்றும் திரு. நந்தா ஆகியோரும் பஞ்சாப் மாநிலத்தை சார்ந்தவர்களே. இவர்கள் மூவர் பிறந்த இடமும் தற்போது பாகிஸ்தானில் உள்ளது.

மக்கள்

சீக்கியம் பஞ்சாபில் பின்பற்றபடும் முக்கிய மதமாகும். சுமார், 59.91 விழுக்காடு மக்கள் இம்மதத்தினை சார்ந்தவர்கள். [2] . சுமார் 36.94 விழுக்காட்டினர், இந்து சமயத்தையும், ஏனையோர் மற்ற சமயங்களையும் சார்ந்தவர்களாவர். சீக்கியர்களின் புனிதத்தலமான பொற்கோவில், பஞ்சாப்பில் உள்ள அம்ரித்சர் நகரில் அமைந்துள்ளது. சீக்கியம் பஞ்சாபின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளமையால், சீக்கிய குருத்துவாராக்களை பஞ்சாப்பில் எங்கும் காணலாம். பண்டைய பஞ்சாப்பில், மதபேதமின்றி அனைவரும் தலைப்பாகை அணிந்து வந்திருந்தாலும், காலப்போக்கில், இவ்வழக்கம் மறைந்து, தற்காலத்தில், சீக்கியர்கள் மட்டுமே தலைப்பாகை அணிகின்றனர்.குருமூகி முறையில் எழுதப்படும் பஞ்சாபி மாநிலத்தின் அலுவல் மொழியாக உள்ளது.

பஞ்சாப் (பாகிஸ்தான்)
பஞ்சாப்

தலைநகரம் • அமைவிடம் லாகூர்
மக்கள் தொகை (2003) • மக்களடர்த்தி 79,429,701 • 386.8/km²
பரப்பளவு 205344 கிமீ²
நேர வலயம் PST (UTC+5)
மொழிகள் பஞ்சாபி (ஆட்சி)
ஆங்கிலம்
உருது (தேசிய)
சராயிக்கி
ஹிந்த்கோ
பாஷ்தூ
பலூச்சி
பிரிவு மாகாணம்
• மாவட்டங்கள் • 35
• ஊர்கள் •
• ஒன்றியச் சபைகள் •
தொடக்கம்
• ஆளுனர்/ஆணையர்
• முதலமைச்சர்
• நாடாளுமன்றம்
(உறுப்பினர்கள்) 1 ஜூலை 1970
• சல்மான் தசீர்
• மியான் ஷபாஸ் ஷரீஃப்
• மாகாணச் சபை (371)

பஞ்சாப் (Punjab) பாகிஸ்தான் நாட்டின் மக்கள் தொகை மிகுந்த மாகாணம் ஆகும். கிழக்கு பாகிஸ்தானில் அமைந்த இம்மாகாணத்தின் தலைநகரம் லாகூர் ஆகும்.

அரியானா.

அரியானா
தலைநகரம் :சண்டிகர்
மிகப்பெரிய நகரம் :பரிதாபாத்
ஆட்சி மொழி இந்தி, அரியான்வி
ஆளுனர் :A.R.கிடுவாய்
முதலமைச்சர் :போபின்தர் சிங் கூடா
ஆக்கப்பட்ட நாள் 1966-11-01
பரப்பளவு 44212 கி.மீ² மக்கள் தொகை (2001)அடர்த்தி 21082989 /477/கி.மீ²
மாவட்டங்கள் 20

அரியானா (இந்தி : हरियाणा, பஞ்சாபி: ਹਰਿਆਣਾ, IPA: [hərɪjaːɳaː]) ஒரு வட இந்திய மாநிலம். அரியானா என்ற சொல் (ஹரி – இந்து கடவுள்) “கடவுளின் வசிப்பிடம்” என்று பொருள்படும். அரியானா 1966ம் ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாகாணத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது. தனது எல்லைகளாக வடக்கில் பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களையும், மேற்கிலும், தெற்கிலும், ராஜஸ்தான் மாநிலத்தையும், கிழக்கில் உத்திரப் பிரதேசம் மாநிலத்தையும் கொண்டுள்ளது. அரியானா மாநிலம், டெல்லி நகரை வடக்கு, மேற்கு, தெற்கு திசைகளில் சூழ்ந்துள்ளமையால், அரியானாவின் சில பகுதிகள், நாட்டுத் தலைநகர் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அரியானாவின் தலைநகர் சண்டிகர் நகரம் ஆகும். அதுவே, பஞ்சாப் மாநில தலைநகராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அரியானாவில் தனிநபர் வருமானம் ரூ 29,887 என்ற அளவில் தரவரிசை பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.அரியானா ஒரு தொழில்வளம் மிக்க மாநிலமாக வளர்ந்து வருகிறது. குர்காவன் நகரம் தகவல் தொழில்நுட்பம் வண்டி உற்பத்தியிலும் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வண்டி தயாரிப்பாளரான மாருதி உத்யோக் நிறுவனம், குர்காவன் நகரத்தை தனது தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர மோட்டார் வண்டி தயாரிப்பாளரான ஹிரோ ஹோண்டா நிறுவனமும் குர்காவன் நகரத்தை தனது தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பானிபட், பஞ்சகுளா, பரிதாபாத் ஆகியனவும் முக்கிய தொழில்துறை வளர்ச்சியுற்ற நகரங்கள். பானிபட் நகரத்தில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகறிப்பாலை தெற்கு ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிது என்பது குறிப்பிடத்தக்கது.

புவியியல்

நான்கு திசைகளிலும் நிலத்தால் சூழப்பட்ட வட இந்திய மாநிலம். இது அட்சரேகை 27°37' இருந்து 30°35' வரை வடக்கிலும், தீர்க்க ரேகை 74°28' இருந்து 77°36' வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. அரியானா கடல் மட்டத்தில் இருந்து 700 அடியிலிருந்து 3600 அடிவரை உயரத்தில் அமைந்துள்ளது. காடுகள் சுமார் 1,553 சதுர கிலோமீட்டர்களை கொண்டுள்ளன. அரியானாவின் நான்கு முக்கிய புவியியல் அம்சங்களாவன:
யமுனை -காகர் சமவெளி.
வடகிழக்கில் அமைந்துள்ள சிவாலிக் மலைகள்
தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாலைவனம்.
தெற்கே ஆரவல்லி மலைத்தொடர்.
அரியானாவின் ஆறுகள் : யமுனை ஆறு அரியானாவின் கிழக்கு எல்லையில் பாய்கிறது. பண்டைய இதிகாசஙகளில் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ள சரஸ்வதி ஆறு அரியானாவின் ஊடே பாய்ந்ததாக நம்பப்படுகிறது. அரியானாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றான காகர் ஆறு, பருவகால ஆறு. இது, இமய மலையில் தோன்றி, யமுனை மற்றும் சட்லஜ் ஆறுகளுகிடையான சமவெளியில் பாய்ந்து, அரியானாவின் பின்ஜோர் மாவட்டம், பஞ்குளா என்ற இடத்தில் நுழைந்து, அம்பாலா, ஹிசர் போன்ற பகுதிகளை வளப்படுத்தி, பய்கன்னர் என்னும் இடத்தில், ராஜஸ்தான் பாலைவனத்தில் நுழைகிறது. அரியானாவின் மற்ற முக்கிய ஆறுகளாக கருதப்படுபவன: மார்கண்டா, தன்கரி, மற்றும் ஸாகிபி.

அரியானாவின் காலநிலை மற்ற வட இந்திய மாநிலங்களின் காலநிலையை ஒத்துள்ளது. காலநிலை, கோடைகாலத்தில், மிக வெப்பமாகவும் (கூடியபட்சம் 50 டிகிரி செல்சியஸ் வரை), குளிர் காலத்தில் மிகக் குளிர்ச்சியாகவும் (குறைந்தபட்சம் 1 டிகிரி செல்சியஸ் வரை) காணப்டுகிறது. மே மற்றும் ஜுன் மாதங்கள் வெப்பமானதாகவும், டிசம்பர், ஜனவரி மாதங்கள் குளிரான பதிவு செய்ய பட்டுள்ளன. பொதுவாக மழைகாலங்களை கணிக்க இயலாவிடினும், 80 விழுக்காடு மழை காலமழையின் (ஜூலை –செப்டம்பர்) மூலமே பெறப்படுகிறது.முள்செறிந்த , வரண்ட, முட்புதர்கள் மாநிலம் எங்கும் காண்ப்படுகின்றன. பருவ மழைகாலங்களில், புல்வெளிகள் உருவாகின்றன. மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதிகள், காலமழையை சார்ந்து இருப்பன. மல்பெரி, யூக்காலிப்டஸ், தேவதாரு, பாபுல் போன்ற மரங்களை பொதுவாக எங்கும் காணலாம். அரியானா மாநிலத்தில் காணப்படும் விலங்கினகளாவன: கலைமான், சிறுத்தை, நரி, மங்கூஸ், ஓநாய் மற்றும் காட்டுநாய்.

பண்பாடு

ஹரியானாவின் பண்பாடு், நீடிய வரலாற்றை கொண்டது. கிராமிய கலைகள் இன்றும் பெரிதும் போற்றப்படுகின்றன. இம்மாநில நடனம் கோமர் எனப்படும் நடனமாகும். இந்தி மொழியும், அரியான்வி மொழியும் பெரும்பாலும் பேசப்படுகினறன. சில வட்டாரப் பேச்சுமொழிகளும் வழக்கில் உள்ளன. சமஸ்கிருதம் பல பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகிறது. நகரங்களில் ஆங்கிலம் கலந்த இந்தி பேசப்படுகிறது.மற்ற இந்திய மாநிலங்களை போன்றே, முதல் மந்திரி பதவி, ஆளுநர் பதவியைவிட அதிக அதிகாரங்களை பெற்றது. அரியானாவின் சட்டசபை 90 உறுப்பினர்களைக் கொண்டது. அரியானாவுக்கு மாநிலங்களவை 5 இடங்களும், மக்களவையில் 10 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது . அரியானாவின் அரசியல் களத்தில் இருக்கும் மூன்று முக்கிய கட்சிகளாவன : இந்திய லோக் தளம், பாரதிய ஜனதா மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ். தற்போதய அரசு பூபின்தர் சிங் கூடா தலைமையின் கீழ் நிலையான ஆட்சி நடத்திவருகிறது.

பொருளாதாரம்

அரியானா நிலையான பொருளாதார முன்னேற்றம் அடைந்து வரும் மாநிலம். கடந்த 2006-2007ம் ஆண்டுகளில், நிதி பற்றாக்குறை 0.6 விழுக்காடாக இருந்தது.அரியானா கடந்த 2007 ம் ஆண்டு, தனிநபர் முதலிட்டில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக விளங்கியது. கடந்த ஆண்டில் மட்டும் ரூ 1,86,045 கோடி அரியானாவில் முதலிடு செய்யப்பட்டுள்ளது. அரியானா மாநிலம் 2006-07 ஆண்டில் மட்டும் ரூ 11,000 கோடி நேரடி அன்னிய முதலிட்டை ஈர்த்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நிறுவன்ங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குழும நிறுவனம், அரியானாவின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் சுமார் ரூ 40,000 கோடி செலவில், தனது தொழிலகங்களை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது.இம்மாநிலம் 4500 வங்கி கிளைகளுடன், வங்கிதுறையில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.

தொழில்துறை
குர்காவுன் நகரம் , அரியானாவின் தொழில்நுட்ப நகரம்தயாரிப்பு மற்றும் சேவை துறைகளில் முன்னேற்றம் கண்ட குர்காவுன், பஞ்குளா, பரிதாபாத் ஆகிய நகரங்களில் மட்டும் சுமார் $ 40.4 பில்லியன் முதலிட்டில் ஆயிரத்துகுமதிகமான மத்திய மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களுள், இந்துஸ்தான் கண்ணாடிகள் நிறுவனம், மாருதி உத்யோக் நிறுவனம், எச்காட் நிறுவனம், ஹேரோ ஹோண்டா, அல்கேடல், சோனி, வீர்பூல், பாரதி தொலைதொடர்பு ஆகியவை குறிப்பிடதக்கவை. இது தவிர சுமார் 80,000 சிறு தொழிலகங்கள் இயங்கி வருகின்றன. யமுனாநகர் மாவட்டம் BILT காகித தொழில்சாலை செயல்பட்டு வருகிறது. பரிதாபாத் நகரம், அரியானாவின் மற்றுமொரு பெரிய தொழில்துறை நகராகும்.இங்கு புகழ்பெற்ற நிறுவனங்களான ஓரியன் காற்றாடிகள் (பிர்லா குழுமம்), JCB இந்தியா, யமகா விசைப்பொறி இந்தியா Pvt. Ltd., வீர்பூல் , குட் ஈயர் உருளிப்பட்டை நிறுவனம் ஆகியன செயல்பட்டு வருகின்றன. பானிபட் நகரம் ஆடை தயாரிப்புக்கும், கம்பள தயாரிப்புக்கும் பெயர் பெற்றது. இங்கு தயாராகும் கைத்தறி ஆடைகள், உலகப் புகழ் பெற்றவை. மேலும், பானிபட் நகரில் இந்திய எண்ணெய் கழகத்திற்கு சொந்தமான ஒரு கல்நெய் சுத்திகரிப்பாலை செயல்பட்டு வருகிறது.
குர்காவுன் நகரம்,கடந்த சில வருடங்களில் மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்ப மையமாக உருவெடுத்து வந்துள்ளது. கணிணித்துறையில் புகழ்பெற்று விளங்கும் பல நிறுவனங்கள் தங்கள் கிளை அலுவலகங்களை குர்காவுன் நகரில் அமைத்துள்ளனர்.மாருதி தொழிலகம்- குர்காவுன் நகரம்கீழ்காணும் வரைபடம் இம்மாநிலத்தின் மொத்த உற்பத்தியினை சந்தை விலையில் குறிக்கிறது. எண்கள் ரூபாய் கோடிகளில்.

வேளாண்மை
தற்காலத்தில் அரியானா தொழில்துறையில் முன்னேற்றம் கண்டிருப்பினும், அரியானா மக்களின் முக்கிய தொழில் வேளாண்மையே. சுமார் 70% மக்கள் விவசாய தொழிலிலேயே ஈடுபட்டுள்ளனர். கோதுமையும் அரிசியும் முக்கிய விளைபொருள்கள். இவை தவிர, கரும்பு, பருத்தி, எண்ணெய் வித்துக்கள் , பருப்பு, பார்லி , சோளம், தினை ஆகியனவும் விளைகின்றன. சுமார் 86 விழுக்காடு நிலப்பரப்பு விவசாயத்திற்குகந்த நிலமாகவும், அதில் 96 விழுக்காடு விவசாய நிலமாகவும் பயன்படுத்தபடுகிறது. சுமார் 75% விவசாய நிலங்கள் ஆழ்குழாய் நீர்பாசனத்தையும் கால்வாய் நீர்பாசனத்தையும் நம்பியுள்ளவை. வேளாண்மை துறைக்கு பெரும் பங்காற்றியுள்ள சவுத்திரி சரண் சிங் அரியானா வேளாண்மை பல்கலைக்கழகம் இம்மாநிலத்திலுள்ள கீசார் நகரில் அமைந்துள்ளது.

மக்கள்தொகை

2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, அரியானாவின் மக்கள்தொகை சுமார் 21,144,564. இதில், 11,364,000 பேர் ஆண்கள், 9,781,000 பேர் பெண்கள். மக்கள் நெருக்கம் 477 பேர்/ சதுர கிலோமீட்டர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அரியானாவும் அதன் அண்டை மாநிலமான பஞ்சாப் மாநிலமும், ஆண்-பெண் விகிதாச்சாரத்தில், 861 பெண்களுக்கு, 1000 ஆண்கள் என்ற நிலையில் இருப்பதின் முலம், இங்குள்ள மக்கள் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளை விரும்புகிறார்கள் என்பதும், சிசு படுகொலை பரவலாக நடைபெறுகிறது என்பதும் தெரியவருகிறது.கிராமபுர பொருளாதாரம் வேளாண்மை சார்ந்ததாகவே இருந்து வருகிறது. தற்போதய பொருளாதர வளர்ச்சியினால், பல மாநிலங்களிலிருந்து மக்கள் அரியானாவுக்கு குடிபெயர்ந்து வருதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பீகார் , மேற்கு வங்கம் , நேபாளம் ஆகியன இதில் முதன்மை பெறுகின்றன.

நன்றி மீண்டும் பயணம் தொடரும் .. அறிந்தவற்றை மீண்டும் தெளிவுபடுத்துவதற்காக……

உத்தராஞ்சல் .

உத்தராகண்டம்


உத்தரகண்ட் (உத்தராஞ்சல்), இந்தியாவின் வட பகுதியில் அமைந்த மாநிலங்களுள் ஒன்று. இம்மாநிலம், 2000ம் வருடம் நவம்பர் 9ம் நாள், உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரித்தெடுக்கப் பட்டது. 2000 லிருந்து 2006 வரைக்கும் உத்தராஞ்சல் என அழைக்கப்பட்டது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு முழுவதும் இமய மலையில் அமைந்துள்ளது. தேஹ்ராதுன்் உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகராகும். எனினும், இம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம் நைனிடால் நகரில் உள்ளது. முசூரி, அல்மோரா, ராணிக்கெட் ,ரூர்க்கி ஆகியவை பிற முக்கிய ஊர்களாகும். இந்து சமய திருத் தலங்களான ரிஷிகேஷ், ஹரித்வார், கேதர்நாத், பத்ரிநாத் ஆகியவையும் உத்தராஞ்சல் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.

மாவட்டங்கள்

உத்தராஞ்சல் மாநிலம், 13 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சமோலி, தேஹ்ராதுன், ஹரித்வார், பௌரி, ருத்ரப்பிரயாக், தெஹ்ரி, உத்தரகாசி ஆகிய மேற்குப் பகுதி மாவட்டங்கள் கர்வால் ஆட்சிப் பிரிவிலும், அல்மோரா, பாகேஷ்வர், சம்பாவத், நைனிடால், பித்தோராகர், உதம் சிங் நகர் ஆகிய கிழக்கு மாவட்டங்கள் குமான் ஆட்சிப் பிரிவிலும் அடங்கும்

மக்கள் தொகை சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 8,489,349 100%
இந்துகள் 7,212,260 84.96%
இசுலாமியர் 1,012,141 11.92%
கிறித்தவர் 27,116 0.32%
சீக்கியர் 212,025 2.50%
பௌத்தர் 12,434 0.15%
சமணர் 9,249 0.11%
ஏனைய 770 0.01%
குறிப்பிடாதோர் 3,354 0.04%

நன்றி மீண்டும் பயணம் தொடரும் ..

இமாசலப் பிரதேசம் .

இமாசலப் பிரதேசம்
தலைநகரம் :சிம்லா
மிகப்பெரிய நகரம் :சிம்லா
ஆட்சி மொழி
ஆளுனர் :விஷ்ணு சதாசிவ்கோக்ஜே
முதலமைச்சர் :விர்பர்தா சிங்
ஆக்கப்பட்ட நாள் 1971-01-25
பரப்பளவு 55,673 கி.மீ² மக்கள் தொகை (2001)அடர்த்தி 6,077,248 /109/கி.மீ²
மாவட்டங்கள் 12

இமாசலப் பிரதேசம் இந்தியாவில் உள்ள மாநிலங்களுள் ஒன்று. 1948 முதல் இந்தியாவின் ஒரு ஆட்சிப் பிரதேசமாக விளங்கி வந்த இமாசலப் பிரதேசம், இந்தியாவின் 18ஆவது மாநிலமாக 25 ஜனவரி 1971ல் அறிவிக்கப் பட்டது. இந்த மாநிலத்தின் தலைநகர் சிம்லா. குல்லு, மனாலி, தர்மசாலா ஆகியவை மற்ற பெரிய ஊர்கள். காங்கிரி, பஹாரி, பஞ்சாபி, ஹிந்தி, மண்டியாலி ஆகிய மொழிகள் இம்மாநிலத்தில் பேசப்படுகிறது. இந்து சமயம், புத்த சமயம், சீக்கியம் ஆகிய மதங்கள் பெரும்பான்மையாக பின்பற்றப் படுகிறது. தலாய் லாமாவும் மற்ற திபேத்திய அகதிகளும் இமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் வசிக்கின்றனர்.

புவியியல்

இமாசல பிரதேசம் இமய மலையில் அமைந்துள்ளதால் இம்மாநிலம் மலையும் மலை சார்ந்த பகுதிகளாகவுமே காணப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தராஞ்சல் ஆகியவை இமாசலப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள். இமாசலப் பிரதேசத்தின் கிழக்கில் திபெத் உள்ளது. கக்கர், சட்லெஜ், பீஸ் ஆகியவை இங்கு பாயும் நதிகளாகும். இமாசலப் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பு 55658 சதுர கி.மீ.

மாவட்டங்கள்
இமாசலப் பிரதேசம் 12 மாவட்டங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அவை காங்ரா, ஹமீர்பூர், மண்டி, பிலாஸ்பூர், உணா, சம்பா, லாஹௌல் - ஸ்பிதி, சிரமௌர், கின்னௌர், குல்லு, சோலன், மற்றும் சிம்லா.

மக்கள் தொகை சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 6,077,900 100%
இந்துகள் 5,800,222 95.43%
இசுலாமியர் 119,512 1.97%
கிறித்தவர் 7,687 0.13%
சீக்கியர் 72,355 1.19%
பௌத்தர் 75,859 1.25%
சமணர் 1,408 0.02%
ஏனைய 425 0.01%
குறிப்பிடாதோர் 432 0.01%

நன்றி மீண்டும் பயணம் தொடரும் .. தெரிந்தவற்றை மீண்டும் அறிவதற்காக…

மேற்கு வங்காளம் .

மேற்கு வங்காளம்

தலைநகரம் :கொல்கத்தா
மிகப்பெரிய நகரம் :கொல்கத்தா
ஆட்சி மொழி
ஆளுனர் கோபால் கிருஷ்ண காந்தி
முதலமைச்சர் புத்ததேப் பட்டாச்சாரியா
ஆக்கப்பட்ட நாள் 1 மே 1960
பரப்பளவு 88,752 கி.மீ² மக்கள் தொகை (2001)அடர்த்தி 80,221,171 /904/கி.மீ²
மாவட்டங்கள் 18

மேற்கு வங்காளம், இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்த மாநிலமாகும். கொல்கத்தா இம்மாநிலத்தின் தலைநகர். வங்காள மொழியே இங்கு பெரும்பான்மையாக பேசப்படும் மொழி.

வரலாறு

1947ஆம் வருடம் அன்றைய வங்காளம், இந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்த பகுதி மேற்கு வங்காளம் என்றும், இஸ்லாமியரின் பகுதி கிழக்கு வங்காளம் என்றும் பிரிக்கப்பட்டது. இன்றைய வங்கதேசமே அந்த கிழக்கு வங்காளமாகும்.புகழ் பெற்ற மனிதர்கள்
சுபாஷ் சந்திர போஸ், எஸ். என். போஸ், ஜகதீஷ் சந்திரபோஸ், சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ணர், அமார்த்ய சென்ஆகியோர் இம்மாநிலத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற மனிதர்களாவர்.

புவியியல்

மேற்கு வங்காள மாநிலத்தின் அண்டைய பகுதிகள் பின்வருவன
வடமேற்கில் நேபாளம், சிக்கிம்
வடக்கில் பூட்டான்
வடகிழக்கில் அஸ்ஸாம்
கிழக்கில் வங்கதேசம்
தெற்கில் வங்காள விரிகுடா
தென்மேற்கில் ஒரிஸா
மேற்கில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட்
மேற்கு வங்காள மாநிலம் 18 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

அரசியல்
1977ஆம் ஆண்டிலிருந்து மேற்கு வங்காளம், இடது சாரி கட்சிகளால் ஆளப்பட்டு வருகிறது. இம்மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் புத்ததேப் பட்டாச்சார்யா.

சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 80,176,197 100%
இந்துகள் 58,104,835 72.47%
இசுலாமியர் 20,240,543 25.25%
கிறித்தவர் 515,150 0.64%
சீக்கியர் 66,391 0.08%
பௌத்தர் 243,364 0.30%
சமணர் 55,223 0.07%
ஏனைய 895,796 1.12%
குறிப்பிடாதோர் 54,895 0.07%

நன்றி மீண்டும் பயணம் தொடரும் .. தெரிந்தவற்றை மீண்டும் அறிவதற்காக…

பீகார்.

தலைநகரம் :பாட்னா
மிகப்பெரிய நகரம் :பாட்னா
ஆளுனர் பூட்டா சிங்
முதலமைச்சர் நிதிஷ் குமார்
ஆக்கப்பட்ட நாள் 1912
பரப்பளவு 94,164 கி.மீ² மக்கள் தொகை (2001)அடர்த்தி 82,878,796 /880/கி.மீ²
மாவட்டங்கள் 37

பீகார்.இந்திய நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலம் பீகார். இம்மாநிலத்தின் தலைநகர் பாட்னா. வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பகுதியில் இம்மாநிலம் அமைந்துள்ளது.

வரலாறு

பீகார் முற்காலத்தில் மகத நாடு என்றழைக்கப்பட்டது. இதன் தலைநகரம் பாடலிபுத்திரம் தற்போது பாட்னா என்றழைக்கப்படுகிறது. புத்த மதமும் சமண மதமும் இங்குதான் தோன்றின.

கல்வி

பண்டைய பீகார் கல்வியில் சிறந்து விளங்கியது. அப்போது நாளந்தா, விக்கிரமசீலா போன்ற பல்கலைக்கழகங்கள் இங்குதான் இருந்தன. ஆனால் தற்காலத்தில் கல்வியில் பீகார் மிகவும் பின்தங்கியிருக்கிறது.

மக்கள் தொகை சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 82,998,509 100%
இந்துகள் 69,076,919 83.23%
இசுலாமியர் 13,722,048 16.53%
கிறித்தவர் 53,137 0.06%
சீக்கியர் 20,780 0.02%
பௌத்தர் 18,818 0.02%
சமணர் 16,085 0.02%
ஏனைய 52,905 0.06%
குறிப்பிடாதோர் 37,817 0.05%


நன்றி மீண்டும் பயணம் தொடரும் ..

ஜார்க்கண்ட்.

சார்க்கண்ட்

ஜார்க்கண்ட் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று. 2000ஆம் வருடம் பீகார் மாநிலத்திலிருந்து ஒரு பகுதி பிரித்தெடுக்கப் பட்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப் பட்டது. ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகராகும். ஜாம்ஷெட்பூர், பொகாரோ மற்ற முக்கிய நகரங்கள். ஜார்க்கண்டின் அருகாமையில் பீகார், மேற்கு வங்காளம், ஒரிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. ஜார்க்கண்ட கனிம வளம் நிறைந்த மாநிலமாகும்.

மக்கள் தொகை சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 26,945,829 100%
இந்துகள் 18,475,681 68.57%
இசுலாமியர் 3,731,308 13.85%
கிறித்தவர் 1,093,382 4.06%
சீக்கியர் 83,358 0.31%
பௌத்தர் 5,940 0.02%
சமணர் 16,301 0.06%
ஏனைய 3,514,472 13.04%
குறிப்பிடாதோர் 25,387 0.09%


நன்றி மீண்டும் பயணம் தொடரும் ..

உத்தரப் பிரதேசம்.

தலைநகரம் :லக்னௌ
மிகப்பெரிய நகரம் :கான்பூர்
ஆட்சி மொழி இந்தி, உருது
ஆளுனர் டி. வி. ராஜேஸ்வர்
முதலமைச்சர் மாயாவதி குமாரி
ஆக்கப்பட்ட நாள் 2 பிப்ரவரி 1950
பரப்பளவு 238,566 கி.மீ² மக்கள் தொகை (2001)அடர்த்தி 166,052,859 /314.42/கி.மீ²
மாவட்டங்கள் 70

இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்று உத்தரப் பிரதேசம் (Uttar Pradesh). இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் இதுவே. லக்னௌ இம்மாநிலத்தின் தலைநகராகும். அலகாபாத், கான்பூர், வாரணாசி, ஆக்ரா ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள். இந்தி, உருது ஆகியவை இம்மாநிலத்தில் பெரும்பான்மையாக பேசப்படும் மொழிகள். இந்தியாவின் ஆறு பிரதமர்கள் (ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வி. பி. சிங், சந்திரசேகர், சரண் சிங், லால் பகதூர் சாஸ்திரி ) இம்மாநிலத்தில் பிறந்தவர்கள்.

புவியமைப்பு

இந்தியாவின் வட பகுதியில் அமைந்த மாநிலமான உத்தரப் பிரதேசம், இந்தியாவில் அதிக பரப்பளவு கொண்ட மாநிலங்களில் ஐந்தாம் இடம் வகிக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள் உத்தராகண்டம், இமாசலப் பிரதேசம், அரியானா, தில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், மற்றும் பீகார் ஆகியவை. உத்திரப் பிரதேசத்தின் வடக்கில் நேபாள நாடு அமைந்துள்ளது. கங்கை, யமுனை ஆகிய பெரு நதிகள் உத்தரப் பிரதேசத்தின் வழியாக ஓடுவதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது. 2000ஆம் ஆண்டு உத்தராகண்டம் மாநிலம் உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

மாவட்டங்களும் ஆட்சிப் பிரிவுகளும்

உத்தரப் பிரதேசம் 70 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 70 மாவட்டங்கள் 17 ஆட்சிப் பிரிவுகளுள் அடங்கும். இப்பிரிவுகள் பின்வருவன.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் மாயாதேவி.
ஆக்ரா
அஸம்கர்
அலகாபாத்
கான்பூர்
கோராக்பூர்
சித்ரகூட்
ஜான்சி
தேவிபதான்
பைஸாபாத்
பரைச்
பரேலி
பஸ்தி
மிர்ஸாபூர்
மொராதாபாத்
மீரட்
லக்னௌ
வாரணாசி
சஹரன்பூர்

மக்கள் தொகை சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 166,197,921 100%
இந்துகள் 133,979,263 80.61%
இசுலாமியர் 30,740,158 18.50%
கிறித்தவர் 212,578 0.13%
சீக்கியர் 678,059 0.41%
பௌத்தர் 302,031 0.18%
சமணர் 207,111 0.12%
ஏனைய 9,281 0.01%
குறிப்பிடாதோர் 69,440 0.04%

நன்றி மீண்டும் பயணம் தொடரும் ..

ராஜஸ்தான்.

இராசத்தான் அல்லது இராஜஸ்தான் (Rājasthān, தேவநாகரி: राजस्थान,[ˈrɑːʤʌstʰɑːn]) இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்று. ஜெய்ப்பூர் இராசத்தானின் தலைநகராகும். உதயப்பூர், ஜோத்பூர் மற்ற முக்கிய நகரங்கள். இராசத்தானி, இந்தி ஆகியன இங்கு பெரும்பான்மையானவர்களால் பேசப்படும் மொழிகள்.

புவியியல்

இந்தியாவின் மேற்குப் பகுதியல் உள்ள ராஜஸ்தான், பாகிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ளது. குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், தில்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ராஜஸ்தானுக்கு அண்மையில் உள்ளன. ராஜஸ்தானின் வடமேற்கு பகுதியில் தார் பாலைவனம் அமைந்துள்ளது.உலகின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடர் இம்மாநிலத்தின் தென்மேற்கில் இருந்து வடகிழக்காக செல்கிறது. அபு சிகரம் இம்மலை மீதே அமைந்துள்ளது.

மாவட்டங்கள்

ஜெய்சல்மரில் உள்ள ஒரு பழைய கட்டிடம்ராஜஸ்தானில் 32 மாவட்டங்கள் உள்ளன. இவையனைத்தும் ஏழு பிரிவுகளுள் அடங்கும். அவை பின்வருவன.
அஜ்மெர்
பரத்பூர்
பிக்கானெர்
ஜெய்ப்பூர்
ஜோத்பூர்
கோட்டா
உதய்ப்பூர்

மக்கள் தொகை சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 56,507,188 100%
இந்துகள் 50,151,452 88.75%
இசுலாமியர் 4,788,227 8.47%
கிறித்தவர் 72,660 0.13%
சீக்கியர் 818,420 1.45%
பௌத்தர் 10,335 0.02%
சமணர் 650,493 1.15%
ஏனைய 5,253 0.01%
குறிப்பிடாதோர் 10,348 0.02%

நன்றி மீண்டும் பயணம் தொடரும் .. தெரிந்தவற்றை மீண்டும் அறிவதற்காக…

குஜராத்.

மொழி :குஜராத்தி
தலை நகரம் :காந்தி நகர்
ஆளுனர் :நவல் கிஷோர் சர்மா
முதலமைச்சர் :நரேந்திர மோடி
பரப்பளவு 196,024 கிமீ²
மக்கள்தொகை - மொத்தம் (2001) - அடர்த்தி 50,596,992 /258/கிமீ²

குஜராத் (Gujarat) இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இது இந்தியாவில் மகாராஷ்டிரத்திற்கு அடுத்து நன்கு தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலமாகும். இதன் வடமேற்கில் பாகிஸ்தானும் வடக்கில் ராஜஸ்தானும் எல்லைகளாக அமைந்துள்ளன.காந்தி நகர் இதன் தலைநகராகும். இது மாநிலத்தின் முன்னாள் தலைநகரும் பொருளாதாரத் தலைநகருமான அகமதாபாத்தின் அருகில் அமைந்துள்ளது.
மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லப்பாய் படேல் ஆகியோர் இம்மாநிலத்தில் பிறந்தவர்களாவர்.

வரலாறு

விலங்கு ஆசிய சிங்கம்
பறவை செந்நாரை
நடனம் கர்பா நடனம்
மொழி குஜராத்தி
பாடல் ஜெய ஜெய கராவி குஜராத்
குஜராத் என்னும் பெயர் மத்திய ஆசியாவில் இருந்து இன்றைய குஜராத்துக்கு குடிபெயர்ந்த குர்ஜ் இன மக்களிடம் இருந்து தோன்றியதாக வரலாறு. குர்ஜ் இன மக்கள் இன்றைய ஜார்ஜியா (பண்டைய காலத்தில் குர்ஜிஸ்தான் என்று அழைக்கப்பட்டது) நாட்டிலிருந்து கிமு முதலாம் நூற்றாண்டு வாக்கில் குடிபெயர்ந்தனர். கிபி 35 முதல் 405 வரை ஈரானிய சாகஸ் இன மக்களின் ஆட்சியின்கீழ் இருந்தது. பின்னர், சில காலம் இந்திய-கிரேக்க அரசாட்சியின்கீழ் இருந்தது. குஜராத்தின் துறைமுகங்கள் குப்த பேரரசாலும், மௌரிய பேரரசாலும் பெரிதும் பயன்படுத்தபட்டன. ஆறாம் நூற்றாண்டுவாக்கில், குப்தர்களின் வீழ்சசிக்குபின், குஜராத் தனனிலை பெற்ற இந்து அரசாக விளங்கியது. குப்த பேரரசின் சேனாதிபதியான மைதிரேகாவின் குலவழிகள், ஆறாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை வல்லாபியை தலைநகராக கொண்டு குஜராத்தை அரசாண்டனர். கிபி 770களில் அரேபிய படையெடுப்பார்களின் முயற்சியால் வல்லாபி ஆட்சி முடிவுக்கு வந்தது. கிபி 775ல், பார்சி இன மக்கள் ஈரானிலிருந்து, குஜராத்தில் குடியெறத் துவங்கினர். பின்னர், எட்டாம் நூற்றாண்டில் பிரத்திகா குல அரசர்களாலும், ஒன்பதாம் நூற்றாண்டில் சோலன்கி குல அரசர்களாலும் அரசாளப்பட்டது. பல இசுலாமிய படையெடுப்புகளையும் தாண்டி சோலன்கி ஆட்சி 13ம் நூற்றாண்டின் கடைசி வரை தொடர்ந்தது.

கிபி 1297 – கிபி 1850
கிபி 1297- 1298 ல் அலாவுதீன் கீல்ஜி, தில்லி சுல்தான் , அன்கில்வாரா நகரை அழித்து குஜராத்தை தில்லி சுல்தானியத்துடன் இணைத்தான். 14ம் நூற்றாண்டின் கடைசியில், தில்லி சுல்தானியம் பலவீனம் அடைந்த நிலையில், தில்லி சுல்தானியத்தின் மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்த ஜபர்கான் முஷாப்பர் தன்னை முழு ஆட்சியாளராக அறிவித்துகொண்டான். அவனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அவனது மகன் அகமது ஷா, அகமதாபாத் நகரை நிறுமானம் செய்து, அந்நகரை தன் தலைநகராய் கொண்டு கிபி 1411 முதல் 1442 வரை ஆட்சி செய்தான். குஜராத் சுல்தானியத்தின் கிபி 1576 ஆம் ஆண்டு, பேரரசர் அக்பரின் படையெடுப்பின் முலம் முடிவுக்கு வ்ந்தது. மொகலாயர்களுக்கு பின் மராட்டிய மன்னர்களாலும், குறுநில மன்னர்களாலும் ஆட்சிசெய்யப் பட்டது.

1614 AD - 1947 AD
போர்த்துகீசர்கள் தமது ஏகாதிபத்தியத்தை குஜராத்தின் துறைமுக நகர்களான தாமன், தியு ஆகிய இடங்களிலும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய இடங்களிலும் நிறுவினர். பிரித்தானியாவின் கிழக்கிந்திய கம்பெனி, 1614ல், தனது முதல் தொழில்சாலையை சூரத் நகரில் நிறுவியது. மராட்டிய அரசுகளுடன் நடந்த இரண்டாம் ஆங்கிலேய- மராட்டிய போரின் முலம் பெரும்பான்மையான பகுதிகளை ஆங்கிலேயர் கைப்பற்றினர். குறுநில ஆட்சியாளர்களிடம் பல அமைதி ஓப்பந்தங்களை உருவாக்கி, அவர்களுக்கு குறைந்த சுயாட்சி வழங்கி, அனைத்து பகுதிகளையும் தம் ஆட்சியின்கீழ் கொண்டு வந்தனர்.

இந்திய விடுதலை போராட்டம்
இந்திய விடுதலை போராட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, வல்லபாய் படேல, மௌராஜி தேசாய் ஆகியோர் குஜராத்தை சேர்ந்தவர்கள். மேலும் பாக்கிஸ்தானின் முதல் கவனர் ஜெனரலான முகமது அலி ஜின்னா குஜராத்தை சார்ந்தவர்.

விடுதலைக்குப் பின்
இந்திய விடுதலைக்குப்பின், இந்திய அரசு, பல சிறிய அரசுகளாக இருந்த குஜராத்தை பம்பாய் மாகாணம் அமைக்கப்பட்டது. 1960 ம் ஆண்டு மே மாதம் முதலாம் நாள், பம்பாய் மாகாணத்தை மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு மகராஷ்டிரா மாநிலமும், குஜராத் மாநிலமும் அமைக்கப்பட்டன. குஜராத் மாநிலத்தின் தலைநகராக அகமதாபாத் நகர் தேர்வு செய்யப்ப்ட்டது. பின், 1970ல் காந்திநகருக்கு மாற்றப்பட்டது.

2001 குஜராத் நிலநடுக்கம்
2001 ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் காலை 08:46 மணிக்கு நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கதிற்கு சுமார் 12,000 பேர் பலியாயினர். சுமார் 55,000 பேர் படுகாயமுற்றனர்.

2000 குஜராத் வன்முறை
குஜராத் பல ஆண்டு காலமாகவே இந்து–முஸ்லிம் பகைமை உணர்வின் மையமாய் இருந்து வந்திருக்கிறது. பிப்ரவரி 2002 ம் ஆண்டு இவ்வுணர்வு மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதில், 790 முஸ்லிம்களும், 254 இந்துகளும் கொல்லப்பட்டனர். சுமார் 2500 பேர் காயம் அடைந்தனர். [1] இக்கலவரம் சம்மந்தப்பட்ட வழக்குகளில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் பங்கு இருப்பது தெரிய வந்துள்ளது.[2]. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மையையும், அத்துமீறல்களையும் மனித உரிமைகள் கழகம் கடுமையாக கண்டித்துள்ளது.

மக்கள் தொகை சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 50,671,017 100%
இந்துகள் 45,143,074 89.09%
இசுலாமியர் 4,592,854 9.06%
கிறித்தவர் 284,092 0.56%
சீக்கியர் 45,587 0.09%
பௌத்தர் 17,829 0.04%
சமணர் 525,305 1.04%
ஏனைய 28,698 0.06%
குறிப்பிடாதோர் 33,578 0.07%

நன்றி மீண்டும் பயணம் தொடரும் ..

மத்திய பிரதேசம் .

மத்தியப் பிரதேசம் இந்தியாவில் உள்ள மாநிலமாகும். மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபால். இந்தூர், உஜ்ஜயினி, குவாலியர் ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள். ஹிந்தி இங்கு பெரும்பான்மையாக பேசப்படும் மொழி.

புவியியல்
இந்தியாவின் மத்தியப் பகுதியில் அமைந்ததால் இம்மாநிலம் மத்தியப் பிரதேசம் எனப் பெயர் பெற்றது. மத்தியப் பிரதேசம் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமாக விளங்கி வந்தது. 2000ஆம் ஆண்டில் சட்டிஸ்கர் இம்மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப் பட்டதால் இச்சிறப்பை இழந்தது. மத்தியப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள் குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், சட்டிஸ்கர், மகாராஷ்டிரம் ஆகியவை. விந்திய மலைத்தொடர் மத்தியப் பிரதேசத்தின் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கிறது. நர்மதை நதி மத்தியப் பிரதேசத்தின் வழியாகப் பாய்கிறது.

மாவட்டங்கள்
இமாசலப் பிரதேசம் 48 மாவட்டங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. இந்த 48 மாவட்டங்கள் போபால், சம்பல், குவாலியர், ஹோச்ஙகாபாத், இந்தூர், ஜபல்பூர், ரேவா, சாகர், உஜ்ஜயின் ஆகிய ஒன்பது ஆட்சிப் பிரிவுகளுள் அடங்கும்.

மக்கள் தொகை சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 60,348,023 100%
இந்துகள் 55,004,675 91.15%
இசுலாமியர் 3,841,449 6.37%
கிறித்தவர் 170,381 0.28%
சீக்கியர் 150,772 0.25%
பௌத்தர் 209,322 0.35%
சமணர் 545,446 0.90%
ஏனைய 409,285 0.68%
குறிப்பிடாதோர் 16,693 0.03%

நன்றி மீண்டும் பயணம் தொடரும் ..

Friday, September 3, 2010

கோவா .

கோவா (Goa; கொங்கனி: गोंय) பரப்பளவில் இந்தியாவின் மிகச்சிறிய மாநிலம் மற்றும் நான்காவது மிகக்குறைந்த மக்கள்தொகை உடைய மாநிலமாகவும் திகழ்கின்றது.இந்தியாவில் உள்ள மேற்கு கடற்கரை பகுதியான கொங்கனில் அமைந்துள்ளது. இது வடக்கு திசையில் மகாராஷ்டிரா மாநிலத்தையும், கிழக்கில் கர்நாடகா மாநிலத்தையும் மற்றும் தெற்கு திசையில் அரபிக்கடலையும் எல்லைகளாகக் கொண்டு மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.பனாஜி என்பது மாநிலத் தலைநகரம் ஆகும். வாஸ்கோடகாமா இங்குள்ள மிகப்பெரிய நகரமாகும்.இதன் வரலாற்று புகழ் வாய்ந்த நகரமாகத் திகழ்கின்ற மார்கோ 16 ஆம் நூற்றாண்டில் வியாபாரிகளாக குடிபுகுந்து விரைவில் நாட்டையே வெற்றி பெற்ற போர்ச்சுகீசியர்களின் கலாச்சாரம் செல்வாக்கு பெற்றிருந்ததை தற்பொழுதும் வெளிப்படுத்துவதாக உள்ளது. இது 1961 இல் இந்தியாவோடு இணைக்கப்படும் வரை போர்ச்சுகீசியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக 450 ஆண்டுகளாக நீடித்தது.
இங்குள்ள புகழ்வாய்ந்த கடற்கரைகள், இறைவழிபாட்டுத் தலங்கள் மற்றும் உலகப் புகழ் வாய்ந்த கட்டடக்கலைகள் ஆகியவை கோவாவிற்கு ஒவ்வொரு வருடமும் அயல்நாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை வரவழைக்கிறது. இது தாவரம் மற்றும் விலங்கு சார்ந்த வளங்களை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை சார்ந்து இருப்பதால் பெற்றுள்ளது. இது பல்லுயிரியம் சார்ந்த முக்கியத்தலமாக வகைபடுத்தப்பட்டுள்ளது.

கோவா இந்தியாவிலுள்ள ஒரு மாநிலமாகும். பரப்பளவில் இது இந்தியாவிலேயே மிகச்சிறிய மாநிலமாகும். பனாஜி இதன் தலைநகராகும். இது மகாராஷ்டிரா மாநிலத்தை எல்லை பகுதியாக கொண்டுள்ளது. கோவா மாநிலம் போர்ச்சுகீசியர்கள் காலனி பகுதியாக விளங்கியது. எனவே இதன் நகர்ப்புறம் போர்ச்சுகீசியர் கட்டிடக்கலையை கொண்டு அமைந்துள்ளது. இந்த நகரம், அதன் அழகிய தேவாலயங்கள், மற்றும் கடற்கரை பகுதிகளுக்காக சுற்றுலா பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. கோவாவில் பொதுவாக கொங்கணி மொழி பேசப்படுகிறது.

பெயர்வரலாறு

இதன் பெயர் கோவா என்பது போர்ச்சுகீசிய மொழியிலிருந்து ஐரோப்பிய மொழிக்கு வந்த சொல்லாகும், ஆனால் இதன் சரியான மூலம் எம்மொழியிலிருந்து தோன்றியது என்பது தெளிவின்றி காணப்படுகின்றது.பழமையான இலக்கியங்களில கோமண்டா, கோமான்சலா, கோபகபட்டம், கோபகபுரி, கோவெம் மற்றும் கோமண்டக் என பல பெயர்களில் வழங்கப்படுகின்றன.தற்பொழுது கோவா எனப்படும் பகுதியை இந்திய இதிகாசமான மகாபாரதம் கோபராஷ்ட்ரா அல்லது கோவராஷ்ட்ரா என குறிப்பிடுகிறது. இதற்கு மாட்டிடையர்களின் தேசம் என்பது பொருளாகும். கோபகபுரி அல்லது கோபகபட்டினம் என பழமையான சமஸ்கிருத உரைகளில் பயனபடுத்தப்பட்டுள்ளது. இதே பெயர்கள் இந்து சமய உரை நூல்களான ஹரிவன்சா மற்றும் ஸ்கந்தபுராணம் ஆகியவற்றிலும் குறிப்பிடப்படுகிறது. இதற்கு பிறகு கோவா கோமன்ச்சலா எனவும் அறியப்பட்டது. இந்த பகுதியே பரசுராம்பூமி என வழங்கப்பட்டது என்பதை சில கல்வெட்டுக்கள் மற்றும் புராணங்களின் உரைகள் உறுதியாக குறிப்பிடுகின்றன.கி.மு மூன்றாம் நூற்றாண்டில் கோவா, அபரன்ந்தா என அழைக்கப்பட்டது என்பதை கிரேக்க புவியியல் ஆய்வாளர் தாலமி குறிப்பிட்டுள்ளார். கோவாவை கிரேக்கர்கள் 13 ஆம் நூற்றாண்டில் நெல்கிண்டா என குறிப்பிட்டுள்ளனர்.கோவாவுக்கு சிந்தாபூர், சந்தாபர் மற்றும் மஹாசப்தம் என வேறு சில வரலாற்றுப் பெயர்களும் வழங்கப்படுகிறது.

வரலாறு

கோவாவின் பரந்த வரலாற்றை நோக்குகையில், கி.மு மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசின் ஒரு பகுதியாக திகழ்கையில் மகதநாட்டினைச் சார்ந்த புத்தமத மன்னன் அசோகரால் ஆட்சி செய்யப்பட்டதை அறியலாம்.புத்த துறவிகள் கோவாவில் புத்த மதத்தை வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டார்கள். கி.மு இரண்டாம் நூற்றாண்டுக்கும் கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கோவாவில் கர்வார்களை சார்ந்த சூதர்களும், கோல்ஹாபூரைச் சார்ந்த சதவாகன நிலக்கிழார்களும் (கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலும்) மேற்கத்திய கஷ்ரபஸ்களும்(கி.பி 150 ஆண்டுகளில்), மேற்கு மகாராஷ்டிராவைச் சார்ந்த அபிராக்களும், குஜராத்தின் யாதவ இன போஜர்களும் மற்றும் கலச்சூரி நிலக்கிழார்களாகிய கொங்கன் மௌரியர்களும் ஆட்சி செலுத்தினர்.இவர்களுக்கு பிறகு 578 க்கும் 753 க்கும் இடைபட்ட காலத்தில் பாடமியை சார்ந்த சாளுக்கியர்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களுக்கு பிறகு மால்கேதுவைச் சார்ந்த இராஷ்டிரகூடர்கள் 753 முதல் 963 வரை ஆட்சி புரிந்தனர். ஒருவாறாக 765 முதல் 1015 வரையிலான காலகட்டத்தில் கோவாவை கொங்கனைச் சார்ந்த தெற்கு சில்ஹரர்களாலும், சாளுக்கிய மற்றும் இராஷ்டிரகூட நிலக்கிழார்களும் ஆட்சிசெய்தனர்.அதற்கடுத்த சில நூற்றாண்டுகளாக கோவாவை கடம்பர்களும்,கல்யாணியைச் சேர்ந்த சாளுக்கிய நிலக்கிழார்களும் வெற்றிகரமாக ஆட்சி புரிந்தனர். அவர்கள் கோவாவில் ஜைன மதத்தை ஆதரித்தனர்.1312 இல் கோவா டெல்லி சுல்தான்களின் ஆட்சியின் கீழ் வந்தது. இப்பகுதியில் இவர்களது அரசாட்சி திறன் குறைவு காரணமாக வலுவிழந்து காணப்பட்டதால் 1370 இல் விஜயநகர பேரரசின் முதலாம் ஹரிஹரரிடம் இவர்கள் சரணடையும் கட்டாயத்திற்கு உள்ளாகினர்.இது குல்பர்காவைச் சார்ந்த பாமினி சுல்தான்களால் 1469 இல் கைபற்றப்படும் வரை விஜயநகர முடியாட்சி பிரதேசமாகவே இருந்தது. இந்த மன்னர் பரம்பரை தகர்த்தெறியப்பட்ட பிறகு, இப்பகுதி பிஜப்பூரைச் சார்ந்த அதில் ஷாய் அவர்களின் ஆளுகையின் கீழ் வந்தது. இவர் துணைத் தலைநகரமாக அப்பொழுது நிறுவிய நகரமே போர்ச்சுகீசியர்கள் காலத்தில் வெல்ஹா கோவா என்றழைக்கப்பட்டது.1510 இல் போர்ச்சுகீசியர்கள் அப்பொழுது ஆட்சியிலிருந்த பிஜப்பூர் அரசர்களை அப்பகுதி முன்னிலையாளர்களான அலி, திம்மையா ஆகியோர்களின் உதவியுடன் போராடி வெல்ஹா கோவாவில்(அல்லது பழைய கோவா) நிலையாக குடியமர்ந்தனர்.

போர்ச்சுகீயர்கள் ஆட்சியின் கீழ் கோவா இருந்தபொழுது கைகளில் அணியும் மேலுறை(1675)போர்ச்சுகீசியர்கள் தங்கள் கீழுள்ள கோவாவின் பெரும்பகுதியினரை கிறித்துவர்களாக மாற்றினர். போர்ச்சுகீசியர்கள் மராத்தியர்கள் மற்றும் தக்காண சுல்தான்களுடன் மேற்கொண்ட தொடர் போர்கள் காரணமாகவும், அவர்களது கடுமையான மதக் கொள்கைகள் காரணமாகவும் பெரும்பாலான கோவா மக்கள் பக்கத்து நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். நெப்போலியன் போர்கள் நடந்து கொண்டிருந்த 1812 மற்றும் 1815 க்கு இடைபட்ட காலத்தில் கோவா பிரிட்டிஷாரால் கைபற்றப்பட்டது.1843 இல் இதன் தலைநகரம் பனாஜிம்மிலிருந்து வெல்ஹா கோவாக்கு மாற்றப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஆக்கிரமப்பின் மூலம் தற்பொழுது உள்ள கோவா மாநில எல்லை போல பெரும்பான்மையாக விரிவடைந்தது. இஸ்டடோ டா இந்திய போர்ச்சுகிசியம் என்கிற கோவாவின் மிகப்பெரிய பிரதேசத்தின் எல்லைகளை நிலைநிறுத்தி உருவாக்குகின்ற வரையிலான அதே சமயத்தில் போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் உள்ள பிற இடங்களை இழந்தனர்.1947 இல் இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, போர்ச்சுக்கல் இந்தியாவில் உள்ள தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியின் ஆட்சியுரிமையை திரும்பபெறுவதற்கான இந்தியாவுடனான உடன்படிக்கையை மறுத்தது. இந்திய இராணுவம் 1961 டிசம்பர் 12 இல் மேற்கொண்ட ஆப்ரேஷன் விஜய் என்னும் போர் நடவடிக்கை மூலம் கோவா, டாமன் மற்றும் டையூ ஆகிய இடங்களை கைப்பற்றி இந்தியாவுடன் ஒருங்கிணைத்தது. கோவா உள்ளிட்ட டாமன் மற்றும் டையூ ஆகியவை மத்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட இந்திய யூனியன் பிரதேசங்களாகும். 1987 ஆம் ஆண்டு மே 30 ந்தேதி யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டு கோவா இந்தியாவின் 25 வது மாநிலமாக மாற்றப்பட்டது. டாமன் மற்றும் டையூ ஆகியவை யூனியன் பிரதேசங்களாகவே தொடர்கின்றன.

புவியியல் மற்றும் தட்பவெப்ப நிலை

கோவா கடலோர பகுதி கோவாவின் மிகுதியான கடற்கரைகள்கோவாவின் சுற்றுவட்ட பரப்பளவு 3,702 கிமீ²(1,430 சதுர மைல்கள்)ஆகும். இது நிலநேர்கோடுகள் 14°53'54" N மற்றும் 15°40'00" மற்றும் நிலநிரைகோடுகள் 73°40'33" E மற்றும் 74°20'13" E ஆகியவற்றின் இடைபட்ட பகுதிகளில் அமைந்துள்ளது.கோவாவின் பெரும்பான்மையான பகுதி கொங்கன் எனப்படும் கடலோரப் பிரதேசம் ஆகும். இங்குள்ள நேர்செங்குத்தான மலைச்சரிவு மேற்கு தொடர்ச்சி மலைகள் வரை நீடிக்கிறது. இது தக்காண பீடபூமியிலிருந்து தனித்து காணப்படுகிறது. இதில் 1,167 மீட்டர்கள்(3,827அடிகள்)உயரம் உடைய சோன்சோகர் மலையே மிக உயரமானது ஆகும். கோவா 101 கி.மீ(63 மைல்கள்) கடலோர பகுதியைக் கொண்டுள்ளது.கோவாவில் மண்டோவி,சுஹாரி, தெர்கோல்,சோப்ரா ஆறு மற்றும் சல் ஆகிய முக்கிய ஆறுகள் ஒடுகின்றன. மர்மகோவா துறைமுகம் சுஹாரி ஆற்றின் வாய்பகுதியில் அமைந்துள்ளது. இது தெற்கு ஆசியாவின் மிகச் சிறந்த இயற்கை துறைமுகங்களுள் ஒன்றாகும். சுஹாரி மற்றும் மண்டோவி ஆகியன கோவாவின் பாதுகாப்பு அரண்களாக திகழ்கின்றன.இவற்றின் கிளையாறுகள் இவற்றின் புவிநிலப்பரப்பில் 69% பகுதியை சுத்தப்படுத்துகின்றன. கோவா நாற்பதுக்கும் மேற்பட்ட கழிமுகங்களையும், எட்டு கடல் மற்றும் தொண்ணூறு ஆற்றிடை துருத்திகளையும் கொண்டுள்ளது. கோவா ஆறுகளின் மொத்த பயணத்தொலைவு 253 கி.மீ(157 மைல்கள்) ஆகும். கோவாவில் கடம்பா அரச மரபினரால் கட்டப்பட்ட முந்நூற்றுக்கும் மேற்பட்ட பழமையான குளங்களும் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவகுணம் வாய்ந்த நீரூற்றுக்களும் உள்ளன.

கோவாவின் பெரும்பகுதி மண்ணானது இரும்பு அலுமினியம் கலந்த கூட்டுப்பொருளால் ஆன சிவந்த நிறமுடைய களிமண்ணாகும். எஞ்சியுள்ள நிலப்பகுதி மற்றும் ஆற்றங்கரை பகுதிகளில் பெரும்பாலும் வண்டல் மண் மற்றும் செம்மண் ஆகியவை உள்ளன. இந்த மண்வகைகள் மிகுந்த கனிமங்கள் மற்றும் மக்கிய இலைதழைகள் நிறைந்தவையாகும். இவை தோட்டத்திற்கு உகந்தவையாகும். இந்திய துணைக்கண்டத்தின் மிகப்பழமையான பாறைகள் சில கர்நாடகாவுடன் இணைந்த கோவாவின் எல்லை பகுதிகளான மோலெம் மற்றும் அன்மோட் இடையே கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாறைகள் 3,600 மில்லியன்கள் பழமை வாய்ந்த டிராண்ட்ஜெமிடிக் கடினப்பாறைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.இவை ரூபிடியம் ஐசோடோப்பு காலத்திற்கு இணையானதாகும். இந்த பாறையின் மாதிரி கோவா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது.கோவா ஆண்டின் பெரும்பாலான காலங்களில் வெப்பம் மற்றும் ஈரத்தன்மை வாய்ந்த அரபிக்கடல் அருகமைந்த வெப்பமண்டல பகுதியாக உள்ளது. மே மாதமே மிக அதிக வெப்பமுடையதாகும்,அச்சமயம் பகல் நேர வெப்பநிலை 35 °C (95 °F) ஆனது மிகுந்த ஈரப்பதத்துடன் இணைந்து காணப்படும். ஒவ்வொரு வருடமும் ஜீன் மாதத்தில் வரும் பருவகாற்றால் வரும் மழைகள் வெப்பம் தரும் அவதிகளை நீக்க மிகவும் அவசியமாகிறது. பெரும்பாலும் வருடந்தோறும் பருவகாற்றால் ஏற்படும் மழைபொழிவினை கோவா செப்டம்பர் இறுதி வரை பெறுகிறது.கோவா டிசம்பர் மத்தியில் மற்றும் பிப்ரவரி வரையிலான இடைப்பட்ட குறுகிய காலத்தையே குளிர்காலமாகக் கொண்டுள்ளது. இம்மாதங்களில் இரவு நேர வெப்பநிலை 20 °C (68 °F) வரையிலும் மற்றும் பகல் நேர வெப்பநிலை 29 °C (84 °F) வரையிலும் மிதமான அளவு ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. இவை மட்டுமின்றி பிற உள்நாடுகளில், அவற்றின் உயரம் சார்ந்து மேலும் சில டிகிரிகள் குளிர்ச்சியாக இருக்கும். மார்ச் 2008 இல் கோவா வெள்ளத்துடன் கூடிய பெருமழை மற்றும் கடுங்காற்றை சந்தித்தது. இதுவே 29 ஆண்டுகாலத்தில் கோவா மார்ச் மாதத்தில் பெற்ற முதல் மழையாகும்.


உட்பிரிவுகள்

கோவாவின் வட்டாரங்கள் கருஞ்சிவப்பு வண்ணமுள்ளவை வடக்கு கோவா மாவட்டத்திலுள்ள வட்டங்களையும், ஆரஞ்சு வண்ணம் தெற்கு கோவாவின் வட்டங்களையும் சுட்டுகிறது.இந்த மாநிலம் வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு கோவாவின் தலைநகரமாக பனாஜியும் தெற்கு கோவாவின் தலைநகரமாக மார்கோவாவும் உள்ளது. ஒவ்வொரு மாவட்டமும் இந்திய அரசாங்கத்தின் ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியாளரால் ஆட்சிசெய்யப்படுகிறது.
இந்த மாவட்டங்கள் மேலும் பதினோரு வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. வடகோவாவின் வட்டங்களாவன பார்டெஸ்,பிகோலிம், பெர்னெம்,போண்டா,சட்டாரி மற்றும் திஸ்வடி ஆகியனவாகும். தெற்கு கோவாவைச் சார்ந்த வட்டங்களாவன கேன்கோனா,மர்மகோவா,கியூபெம்,சல்சிட்டெ மற்றும் சங்குயெம் ஆகியனவாகும். இந்த வட்டங்களின் தலைமையிடங்கள் முறையே மாப்யுசா,பிகோலிம், பெர்னெம்,போண்டா,வால்பாய்,பனஜிம்,சௌதி, வாஸ்கோ,கியூபெம்,மார்கோவா மற்றும் சங்குயெம் ஆகியனவாகும்.கோவாவின் முக்கிய நகரங்களாவன வாஸ்கோ,மார்கோவா, மர்மகோவா,பனஜிம் மற்றும் மாப்யுசா ஆகியனவாகும். முதல் நான்கு நகரங்களையும் இணைத்து மெய்யான நகரக்கூட்டம் அல்லது அதிக அல்லது குறைந்த தொடர் நகர்புறம் என கருதப்படுகிறது

பொருளாதாரம்

மர்மகோவா துறைமுகம், வாஸ்கோவுக்கு இரும்பு தாதைக் கொண்டு செல்லும் இரயில்2007 ஆம் ஆண்டில் கோவாவின் மொத்த உற்பத்தி திறன் மதிப்பு நடைமுறை விலையில் $3 பில்லியன்களாக மதிப்பிடப்பட்டது. மொத்த தனி நபர் தலா உற்பத்தி மிக அதிகமாக உடைய வளம் வாய்ந்த இந்திய மாநிலங்களில் கோவாவும் ஒன்றாகும் மற்றும் நாட்டின் மொத்த தனிநபர் தலா உற்பத்தியை விட இது இரண்டரை மடங்கு அதிக வளர்ச்சியாகும்.மேலும் இதன் அதிவேகமான வளர்ச்சிவீதத்தில் ஒன்று 8.23% ஆகும்(1990-2000 ஆண்டுகளுக்கான சராசரி).பனாஜிமில் உள்ள வணிகச்சந்தைசுற்றுலாவே கோவாவின் முதல்நிலை தொழிலாகும். இந்தியாவுக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளில் 12% பேரை தன்னகத்தே கொண்டுள்ளது.கோவா இரண்டு விதமான சுற்றுலாவுக்கு உகந்த காலங்களைக் கொண்டுள்ளது: அவையாவன கோடை மற்றும் குளிர் காலங்களாகும்.குளிர் காலங்களில் அயல்நாட்டைச் சார்ந்த(குறிப்பாக ஐரோப்பா)சுற்றுலா பயணிகள் இதன் சிறப்புவாய்ந்த காலநிலையை அனுபவிக்க வருகின்றனர். கோடை காலங்களில்(கோவாவில் மழைக்காலம்) இந்தியாவைச் சார்ந்த சுற்றுலாவினர் தங்கள் விடுமுறையைக் கழிக்க வருகின்றனர். கோவாவின் கடற்கரை பகுதிகளை மையமாக வைத்தே சுற்றுலா நடைபெறுகிறது.இச்சமயம் உள்நாட்டு சுற்றுலாவினர் வருகை குறைவாக இருக்கும். 2004 இல் 2 மில்லியனனுக்கும் மேற்பட்ட சுற்றுலாவினர் கோவாவிற்கு வருகை புரிந்தனர். இவர்களில் 400,000 பேர் அயல்நாட்டினர் ஆவார்கள்.

கடற்கரை நீங்கிய பிற நிலப்பரப்பில் கிடைக்கும் வளம் வாய்ந்த கனிமங்கள் மற்றும் தாதுக்கள் மற்றும் சுரங்கங்கள் ஆகியன இரண்டாவது பெரிய தொழிலாகும். கோவாவின் சுரங்கங்கள் இரும்பு தாதுக்கள், பாக்சைட், மாங்கனிசு, களிமண், சுண்ணாம்புக்கல் மற்றும் சிலிக்கா ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன. மர்மகோவா துறைமுகம் கடந்த ஆண்டில் 31.69 மில்லியன் டன்கள் சரக்குகளை கையாண்டது. இதில் 39% இந்தியாவின் இரும்புதாதுக்கள் ஏற்றுமதி குறித்ததாகும். கோவாவின் இரும்பு தாது தொழிற்சாலையில் முதன்மையானவற்றுள் செசா கோவா(இப்பொழுது வேதாந்தாக்கு சொந்தமானது) மற்றும் டெம்போ ஆகியன அடங்கும். இங்குள்ள ஏராளமான சுரங்கங்களில் உள்ள வளமான இரும்பு தாது மற்றும் பிற கனிமங்கள் தற்பொழுது இங்குள்ள காடுகள் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் அபாயம் உள்ளது. சுரங்க நிறுவனங்களுள் சில உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக சுரங்கங்கள் அமைத்து தங்கள் விருப்பப்படி செயல்படுகின்றன.கடந்த நாற்பது ஆண்டுகளாக பொருளாதாரத்தில் விவசாயத்தின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது. இது பெரும்பகுதியான பொதுமக்களுக்கு பகுதி நேர பணியை அளிக்கிறது. அரிசி முக்கிய விவசாயப் பயிராக உள்ளது.இதைத் தொடர்ந்து பாக்கு,முந்திரி மற்றும் தேங்காய் போன்ற பிற விவசாயமும் நடைபெறுகிறது. மீன்பிடி தொழிலானது நாற்பதாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது. இதுகுறித்த சமீபத்திய அலுவலக விளக்கப்படமானது இயந்திரமயமாக்கப்பட்ட பெருவலைவீசும் கப்பல் மூலம் மீன்பிடித்தல் மற்றும் பாரம்பரிய வலைவீசி மீன்பிடித்தல் இரண்டும் ஒரே சமயம் நடைபெறுவதால் வலைகள் கிழிபடுதல் முதலிய காரணத்தால் இத்தொழிலின் முக்கியத்துவம் குறைந்து நலிவுற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது.

நடுத்தர தொழில்களாக பூச்சிக்கொல்லி,உரங்கள்,டயர்கள்,டியூப்கள்,காலணிகள்,இரசாயனங்கள்,கோதுமை பொருள்கள்,எஃகு உருட்டுதல்,பழங்கள் மற்றும் மீன் பதப்படுத்தல்,முந்திரிகள்,துணி நெசவு,மது வடித்தல் ஆகிய தொழில்கள் அமைந்துள்ளன.சுஹாரி தொழிற்சாலை(2005 இன் மொத்த வருமானம் ரூ.36,302 மில்லியன்)மற்றும் செசா கோவா(2005 இன் மொத்த வருமானம் ரூ.17,265 மில்லியன்)இந்த இரண்டு கோவாவின் கூட்டாண்மைக்குரிய அலுவலகங்களின் ஒருங்கிணைந்த நிறுவனம் S&P CNX 500 ஆகும்.[சான்று தேவை] கோவா அரசாங்கம் சமீபத்தில் கோவாவில் வேறு புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்களை (SEZs) அனுமதிக்கக் கூடாதென முடிவெடுத்தது. இந்த கடுமையான கொள்கை இந்தியாவின் பிற மாநிலங்களின் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அரசுக்கு வருமான வரிகளை பெற்றுத் தந்தன மற்றும் பிற பகுதிகளைக் காட்டிலும் குறைவான வரிவீதம் உடையதால் இங்கு தோன்றிய மிகுதியான தொழிற்சாலைகள் உள்ளூர் மக்களுக்கான பணி வாய்ப்புகளை நல்கின. கோவாவில் தற்பொழுது 16 திட்டமிடப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. மாநில அரசின் இந்த முடிவானது சிறப்பு பொருளாதார மண்டலங்கள் குறித்து அரசியல் கட்சியனர் மற்றும் கோவா கத்தோலிக்க சர்ச்சினர் ஆகியோரின் கடும் எதிர்ப்புக்கு பிறகு எடுக்கப்பட்டது.கோவாவில் ஆல்கஹால் மீது விதிக்கப்படும் குறைந்த சுங்கவரி காரணமாக குறைவான விலையில் கிடைக்கும் மதுபானத்திற்கும் சிறப்புடையதாக அறியப்படுகிறது. கோவாவின் அநேக மக்கள் அயல்நாடுகளில் பணியாற்றுவதால், அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு அனுப்பும் பணமும் மாநிலத்தின் உள்நாட்டு வருவாயை அதிகரிக்க வழிவகுக்கிறது.

தாவரவளம் மற்றும் விலங்குவளம்

பூமத்தியரேகை காடுகள் கோவாவின் ஆதிக்கத்தில் உள்ளது.1,424 km2 (549.81 sq mi)[3]பெரும்பான்மையானவை அரசுக்கு சொந்தமானவையாகும். அரசுக்கு சொந்தமான காடுகள் மதிப்பிடப்பட்டு1,224.38 km2 (472.74 sq mi) தனியாரிடம் இருந்து பெறப்பட்டதாகும்.200 km2 (77.22 sq mi) மாநிலத்தின் பெரும்பானமையான காடுகள் மாநிலத்தின் கிழக்கு பிரதேசங்களின் உட்பகுதியில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெரும்பான்மையானவை கிழக்கு கோவாவில் அமைந்துள்ளது.இவை சர்வதேச நாடுகளால் உலகின் பல்லுயிரியம் சார்ந்த முக்கியத்தலமாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது. 1999 பிப்ரவரி மாத நேஷனல் ஜாகிரஃபிக் மேகஸின் இதழானது கோவாவை அதன் சிறப்பான வெப்பமண்டல பல்லுயிரியம் சார்ந்த வளத்திற்காக அமேசான் மற்றும் காங்கோ பள்ளத்தாக்குகளுடன் ஒப்பிட்டிருந்தது.கோவாவின் வனவிலங்கு சரணாலயங்கள் 1512 க்கும் மேற்பட்ட ஆவணபடுத்தப்பட்ட தாவர இனங்களும்,275 க்கும் மேற்பட்ட பறவையினங்களும், 48க்கும் மேற்பட்ட வகையான விலங்குகள் மற்றும் 60 க்கும் மேற்பட்ட ஊர்வன இனங்கள் உள்ளன என்ற பெருமையைக் கொண்டுள்ளன.அரிசி முக்கிய உணவுப் பயிராகும்.இதனுடன் பருப்புவகைகள்,கேழ்வரகு மற்றும் பிற உணவுப்பயிர்களும் விளைகின்றன. முக்கிய பணப்பயிர்களாக தேங்காய்,முந்திரி,பாக்கு,கரும்பு ஆகியனவும் மற்றும் அன்னாசி,மாம்பழம் மற்றும் வாழை ஆகிய பழங்களும் உள்ளன. இந்த மாநிலம் 1,424 கி.மீ² தொலைவுக்கும் மேற்பட்ட பரந்த வளம் வாய்ந்த காடுகளைப் பெற்றுள்ளது.

கோவாவின் தேசிய விலங்கு கோர்(எருமையினம்),தேசிய பறவை செங்கழுத்து மஞ்சள் புல்புல்(கொண்டலாட்டி) ஆகும்.இது கருப்பு கொண்டை புல்புல் பறவையிலிருந்து வேறுபட்டதாகும். மாநிலத்தின் தேசிய மரம் அசன் ஆகும்.கோவாவின் கிராமப்புறங்களில் பொதுவாக அரிசி பயிர் உள்ளது.மூங்கில் பிரம்புகள், மரத்தா பார்க்ஸ்,சில்லர் பார்க்ஸ் மற்றும் பிஹிரண்ட் ஆகியன காட்டில் கிடைக்கக் கூடிய முக்கியப்பொருள்களாகும். கோவாவின் உயரமான பகுதிகள் தவிர்த்து அனைத்து இடங்களிலும் நீக்கமறக் காணப்படக்கூடியது தென்னை மரங்கள் ஆகும். மிகுந்த அளவில் இலையுதிர்க்கும் தாவரவகைகளான தேக்கு,சல்,முந்திரி மற்றும் மாம்பழ மரங்களும் இங்கு காணப்படுகிறது. பலாப்பழம்,மாம்பழம், அன்னாசிபழம் மற்றும் மேற்கத்திய நாவல்பழம் ஆகிய பழங்களும் கிடைக்கின்றன.நரிகள்,காட்டு பன்றிகள் மற்றும் இடம்பெயர்ந்து வரும் பறவைகள் முதலியவைகள் கோவாவின் வனங்களில் காணப்படும்.

வட்டார பறவைகளில் மீன்கொத்திகள்,மைனா மற்றும் கிளிகள் ஆகியனவும் அடங்கும். கோவாவின் கடல் மற்றும் ஆறுகளில் ஏராளமான மீன் வகைகளும் காணப்படுகிறது. நண்டு,கடல் நண்டு, கூனி இறால்கள், ஜெல்லிமீன்,சிப்பிகள் மற்றும் கெளுத்திமீன்கள் ஆகியன இங்கு பிடிபடும் மீன்வகைகளாகும். கோவா மிகுதியான பாம்புகளை உடைய பகுதியாதலால் இங்கு கொறித்துண்ணும் பிராணிகளின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவா சலிம் அலி பறவை சரணாலயம் உள்ளிட்ட பல தேசிய பூங்காக்களை உடையது. வனவிலங்கு சரணாலயங்களில், போண்டிலா வனவிலங்கு சரணாலயம், மொலம் வனவிலங்கு சரணாலயம், கோட்டிகோ வனவிலங்கு சரணாலயம், மேடி வனவிலங்கு சரணாலயம்,நேட்ராவலி வனவிலங்கு சரணாலயம்,மஹாவீர் வனவிலங்கு சரணாலயம் ஆகியனவும் அடங்கும் மற்றும் சலிம் அலி பறவைகள் சரணாலயம் சோரோ தீவில் அமைந்துள்ளது.கோவா தன் புவிப்பரப்பில் 33% க்கும் மேற்பட்ட பகுதியில் அரசாங்க காடுகளைக் கொண்டுள்ளது(1224.38 கி.மீ²). இவற்றில் ஏறத்தாழ 62% பகுதிகள் வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களை உடைய பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்ட பகுதியாகும். இவை தவிர்த்த கணிசமான நிலப்பரப்பில் தனியாருக்கு சொந்தமான காடுகள் மற்றும் முந்திரி,மாம்பழம்,தென்னை போன்ற மரங்கள் அடங்கிய பரந்த நிலப்பரப்பும் உள்ளது.மொத்த புவிப்பரப்பில் 56.6% பகுதிகள் காடுகள் மற்றும் மரங்கள் அமைந்துள்ளது.


போக்குவரத்து

பெரும்பான்மையான கோவா சாலைகளால் இணைக்கப் பெற்றுள்ளன.
தேசிய நெடுஞ்சாலை 17 கோவாவை கடக்குமிடம்.
பிரின்சியஸ் நதி கண்டோலிம் கடற்கரைகோவாவின் ஒரே விமானநிலையம், இங்குள்ள தபோலிம் விமானநிலையம் ஆகும். இது இராணுவம் மற்றும் குடிமுறை சார்ந்தவர்களுக்கான விமானநிலையம் ஆகும்.இங்கிருந்து செல்லும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமானங்கள் இடைவழியில் நிறுத்தங்களைக் கொண்டு பிற இந்திய பகுதிகளுக்கு போய் சேருகிறது. இந்த விமான நிலையம் மிகுந்த அளவில் வரைமுறைபடுத்தப்பட்ட விமானங்களை கையாள்கிறது. கோவாவிற்கு துபாய்,ஷார்ஜா மற்றும் மத்திய கிழக்கு நாடான குவைத் மற்றும் ஐக்கிய பேரரசு,ஜெர்மனி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் பன்னாட்டு விமானங்களும் சுற்றுலா காலங்களில் ஒப்பந்த அடிப்படையிலான விமானங்களும் வருகின்றன.

தபோலிம் விமான நிலையத்தில் ஏர் இந்தியா, இந்தியன் ஏர் லைன்ஸ், கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ், கோ ஏர், ஸ்பேஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ் போன்ற விமான போக்குவரத்துகளும், இவை தவிர்த்து ஐக்கிய பேரரசு, ரஷ்யா, ஜெர்மனியிலிருந்து இயக்கப்படும் தாமஸ்குக்,கண்டோர் மற்றும் மோனார்க் ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவனங்களும் தங்கள் சேவைகளை வழங்கி வருகின்றன.கோவாவின் மக்கள் போக்குவரத்து, நகரங்களையும் கிராமப்புறங்களையும் இணைக்கும் தனியார் பேருந்துகளை மிகுதியான அளவில் கொண்டுள்ளது. அரசு இயக்கும் பேருந்துகள் கடம்பா போக்குவரத்து கழகத்தால் பராமரிக்கப்பட்டு இரு முக்கிய வழித்தடங்கள்(பனாஜிம்-மார்கோவா போன்றவை) மற்றும் மாநிலத்தின் பிற தொலைதூர வழித்தடங்களையும் இணைக்கின்றன. பெரிய நகரங்களான பனாஜிம் மற்றும் மார்கோவா நகரங்களில் உள்ளூர் பேருந்துகளும் இயங்குகின்றன. கோவாவின் மக்கள் கோக்குவரத்தானது குறைந்த அளவே வளர்ச்சியுற்றிருப்பதால், கோவா மக்கள் பெரும்பாலும் தங்களுக்கு சொந்தமான மோட்டார் இருச்சக்கர வாகனங்களையே சார்ந்துள்ளனர். கோவாவில் இரு தேசிய நெடுஞ்சாலைகள் கடந்து செல்கின்றன. NH-17 இந்தியாவின் மேற்கு கடற்கரைபகுதி மற்றும் கோவாவையும், வடக்கில் மும்பை மற்றும் தெற்கில் மங்களூரையும் இணைக்கிறது. NH-4A மாநிலத்தின் குறுக்குவாட்டில் சென்று தலைநகர் பனாஜிமிலிருந்து கிழக்கில் உள்ள பெல்காமையும், கோவாவிலிருந்து தக்காணத்தின் பிற நகரங்களையும் இணைக்கிறது. NH-17A ஆனது NH-17 உடன் சேர்ந்து கோர்டலிமை மர்மகோவா துறைமுகத்துடன் இணைக்கிறது மேலும் புதிய் NH-17B என்கிற நான்குவழி தேசிய நெடுஞ்சாலையானது மர்மகோவா துறைமுகத்தை NH-17 இன் மற்றொரு இடத்தில் இணைத்து வெர்னா வழியாக தபோலிம் விமானநிலையத்துடன் இணைகிறது.

கோவா மொத்தத்தில்224 km (139 mi) தேசிய நெடுஞ்சாலைகளையும்,232 km (144 mi) மாநில நெடுஞ்சாலைகளையும் மற்றும் 815 கி.மீ மாவட்ட நெடுஞ்சாலைகளையும் கொண்டுள்ளது.வாடகைக்கு பயணிக்கும் போக்குவரத்தில் மீட்டர் இல்லாத கார்கள் மற்றும் நகர்புறங்களில் இயக்கப்படும் ஆட்டோரிக்‌ஷாக்களும் அடங்கும். கோவா போக்குவரத்தில் தனித்துவம் வாய்ந்தது வட்டார வழக்கில் பைலட்ஸ் என அழைக்கப்படுபவர்களால் இயக்கப்படும் மோட்டார் சைக்கிள் கார் ஆகும். இந்த வாகனங்களில் ஒரு பின்னிருக்கை பயணி மட்டுமே பயணிக்கலாம், செல்லும் இடத்திற்கேற்ப பொதுவாக பேரம் பேசி விலை நிர்ணயிக்கலாம். கோவாவில் ஆற்றைக் கடப்பதற்கு ஆற்று போக்குவரத்துறையால் இயக்கப்படும் தட்டையான அடிப்பாகமுடைய பயணப் படகுகள் உள்ளன. கோவாவின் இரண்டு இரயில் வழித்தடங்களில் ஒன்று தென்மேற்கு இரயில்வேயினாலும் மற்றொன்று கொங்கன் இரயில்வேயினாலும் இயக்கப்படுகிறது. காலனிய காலத்தோடு தொடர்புடைய துறைமுக நகரமான வாஸ்கோட காமாவில் அமைக்கப்பட்ட தென்மேற்கு இரயில்வே வழித்தடமானது கோவாவுடன் ஹூப்ளி,கர்நாடகாவை, மார்கோவா வழியாக இணைக்கிறது. 1990 இல் உருவாக்கப்பட்ட கொங்கன் இரயில்வேயின் வழித்தடம் கடற்கரைக்கு இணையாகச் சென்று மேற்கு கடற்கரை பகுதியிலுள்ள முக்கிய நகரங்களை இணைக்கிறது.வாஸ்கோ நகரத்துக்கு அருகிலுள்ள மர்மகோவா துறைமுகம் கனிம தாதுக்கள்,பெட்ரோலியம்,நிலக்கரி மற்றும் பன்னாட்டு சரக்குகளை கையாள்கிறது. பெரும்பாலான கப்பல்கள் கோவாவின் கடற்கரைப் பகுதிகளிலிருந்து கிடைக்கும் கனிமங்கள் மற்றும் தாதுக்கள் அடங்கிய சரக்குகளை கொண்டுள்ளன. மண்டோவி நதிக்கரையில் அமைந்துள்ள பனாஜிம் என்ற சிறிய துறைமுகம்,1980 இலிருந்து கோவா மற்றும் மும்பைக்கு இடையே பயணிகளுக்கான நீராவிப் படகுகளை இயக்கி வருகிறது. மேலும் 1990 இலிருந்து டமானியா ஷிப்பிங் என்ற நிறுவனம் மும்பை மற்றும் பனாஜியை இணைக்கும் குறுகிய கால கட்டுமரச்சேவையை வழங்கி வருகிறது.

சுற்றுலா

கோவா உணவகம்
கோவாவின் சூரிய அஸ்தமனம்கோவாவின் சுற்றுலா பொதுவாக கடற்கரை பகுதிகளை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இங்கு உள்நாட்டு சுற்றுலா செயல்பாடுகள் குறைந்து காணப்படுகிறது. 2004 இல் 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர். அவர்களில் 400,000 பேர் அயல்நாட்டினர்.கோவா இரண்டு விதமான சுற்றுலா பயணிகளுக்கு உகந்த காலங்களைக் கொண்டுள்ளது. ஒன்று குளிர்காலம் மற்றது கோடைக்காலம். குளிர்காலத்தில் அயல்நாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள்(குறிப்பாக ஐரோப்பாவினர்) அதன் சிறப்பான தட்பவெப்ப சூழலை அனுபவித்து மகிழ வருகின்றனர். கோடைகாலத்தில் (அச்சமயம் கோவாவின் மழைக்காலம்) இந்தியாவைச் சார்ந்த சுற்றுலாவினர் தங்கள் விடுமுறையை கழிக்க வருகின்றனர்.இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடாகா எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ள மிகச்சிறிய மாநிலமாக கோவா இருந்தாலும், உலகத்தார் இதனை இந்திய மண்ணில் உள்ள பண்டைய போர்ச்சுகீசிய ஆதிக்கத்திற்குரிய பகுதியாகவே கருதுகின்றனர். போர்ச்சுகீசியரின் 450 ஆண்டுகால ஆதிக்கத்தின் விளைவாக கோவா இலத்தீன் கலாச்சாரத்தின் தாக்கத்தை பெற்று,தனது வேறுபட்ட வடிவங்களை காட்டி நாட்டின் பிற பாகங்களை விட அதிகமாக அயல்நாட்டினரை ஈர்க்கிறது. கோவா மாநிலம் அதன் சிறப்பு வாய்ந்த கடற்கரைகள், தேவாலயங்கள் மற்றும் கோவில்களால் புகழ்பெற்றதாக விளங்குகிறது. இங்குள்ள மற்றொரு சிறப்பு வாய்ந்த இடம் பாம் ஜீசஸ் தேவாலயம் ஆகும்.இங்குள்ள அகுடா கோட்டையும் முக்கிய சுற்றுலாத் தலம் ஆகும். சமீபத்தில் இந்திய வரலாறு,கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த மெழுகுச்சிலை காட்சியம் பழைய கோவாவில் திறக்கப்பட்டுள்ளது.

கடற்கரைகள்
ஒருவர் கோவாவிற்கு வருகை புரிவதற்கான ஒரே காரணம் அதன் கடற்கரைகள் ஆகும். சுமார் 77 மைல்களுடைய(125 கி.மீ) கரையோரப் பகுதியில் ஆங்காங்கோ கடற்கரைகள் உள்ளன. இந்த கடற்கரைகள் வடக்கு கோவா கடற்கரைகள் மற்றும் தெற்கு கோவா கடற்கரைகள் என பகுக்கப்பட்டுள்ளன. நாம் வடக்கு அல்லது தெற்கு எங்கு சென்றாலும், அதிக அளவிலான தனித்த கடற்கரைகளை காணலாம். இங்கு தன்னை காண வரும் மக்களை ஈர்க்கக் கூடிய வகையில் உள்ள பாகா மற்றும் அன்ஜூனா போன்ற பல கடற்கரைகள் உள்ளன. இந்தக் கடற்கரைகளில் வரிசையாக அமைக்கப்பெற்ற குடில்களில் புதிதாக சமைக்கப்பட்ட மீன் உணவு வகைகள் மற்றும் மதுபானங்கள் கிடைக்கின்றன. சில குடில்கள் அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு சிறப்பு கேளிக்கைகளையும் நடத்துகின்றன. தெற்கு கோவாவில் அமைந்துள்ள கோல்வா கடற்கரையானது வெண்மணல் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது.

வரலாற்றுத் தலங்கள் மற்றும் சுற்றுப்புறம்
கோவா உலகப்புகழ் வாய்ந்த தலங்கள் இரண்டினைக் கொண்டுள்ளது. அவையாவன பாம் ஜீசஸ் பசிலிக்கா மற்றும் சில குறிப்பிடத்தக்க கன்னி மாடங்கள் ஆகும். பசிலிக்காவில் கோவாவின் புனித இரட்சகர் என பல கத்தோலிக்கர்களால் மதிக்கப்படும் புனித பிரான்சிஸ் சேவியரின் உடலானது உள்ளது(உண்மையில் ஆசிர்வதிக்கப்பட்ட ஜோசப் வாஸ் என்பவர் தான் கோவாவின் மறைமகாணத்தின் இரட்சகர் ஆவார்). பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் இவரது உடல் வெளியே எடுக்கப்பட்டு மக்களின் வழிபாட்டுக்கும்,பார்வைக்கும் வைக்கப்படுகிறது. இந்நிகழ்வு கடைசியாக 2004 இல் நடந்ததேறியது. இங்குள்ள வெல்காஸ் கான்குயிஸ்டாஸ் என்கிற பகுதி போர்ச்சுகீசிய-கோவா கால கட்டிடக்கலைக்கு சான்றாகும். டிரக்கால்,சோப்ரா,கோர்ஜியம்,அகுடா,காஸ்பர் டயஸ் மற்றும் கபோ-டி-ரமா போன்ற பல கோட்டைகள் இங்குள்ளன.கோவாவின் பல பகுதிகளில்,இந்தோ-போர்ச்சுகீசிய கால கட்டிடக்கலைக்கு சான்றாக இன்றும் பல மாளிகைகள் நிலைத்து இருக்கின்றன. இருப்பினும் சில கிராமங்களில், பெரும்பாலும் அவை சிதைந்து பாழடைந்த நிலையில் உள்ளன. பனாஜியில் உள்ள போன்டைன்ஹஸ் என்னுமிடம் கோவா மக்களின் வாழக்கையையும்,கட்டிடக் கலை மற்றும் கலாச்சாரத்தையும் காட்டும் கலாச்சார பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.கோவாவின் மங்குய்ஷி கோவில் மற்றும் மஹலசா கோவில் போன்ற சில கோவில்களில் போர்ச்சுகீசியக் கால தாக்கம் கண்கூடாக காணப்பட்டது, எனினும் 1961 ஆம் ஆண்டிற்கு பிறகு இவற்றில் பெரும்பான்மையானவை இடிக்கப்பட்டு உள்நாட்டு மரபான இந்திய முறைப்படி புதுப்பிக்கப்பட்டது.

அருங்காட்சியங்கள் மற்றும் அறிவியல் மையங்கள்
கோவாவில் சில அருங்காட்சியகங்கள் இருந்த போதிலும் அவற்றில் இரண்டு மட்டும் மிக முக்கியமானவையாகும். ஒன்று கோவா மாநில அருங்காட்சியகம் மற்றொன்று கடற்படைத் தள அருங்காட்சியகம் ஆகும். பனாஜிம்மில் உள்ள கோவா மாநில அருங்காட்சியகத்தை பார்வையிட நுழைவுக்கட்டணம் எதுவுமில்லை. வாஸ்கோவில் அமைந்துள்ள கடற்படைத் தள அருங்க்காட்சியகத்தை பார்வையிட நுழைவுக்கட்டணமாக ரூ.6 வசூலிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே கோவாவில் மட்டும் தான் இது போன்ற கடற்படைத் தள அருங்காட்சியகம் உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளால் அதிகம் அறியப்படாத இடமாக கோவா அறிவியல் மையம் ஒன்று பனாஜிம்மில் உள்ளது.

அரசு மற்றும் அரசியல்

இந்திய பாராளுமன்றத்தில் கோவா இரண்டு இடங்களைக் கொண்டுள்ளது. மாவட்டங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட மக்களவையில் ஓரிடமும்,மாநிலங்களவையில் ஓரிடமும் பெற்றுள்ளது. கோவாவின் தலைநகரம் பனாஜி ஆகும். இது பனாஜிம் என ஆங்கிலத்திலும் பான்கிம் என போர்ச்சுகீசிய காலத்திலும் வட்டார மொழியில் பொன்ஜி என்றும் அழைக்கப்படுகிறது. கோவாவின் நிர்வாக தலைநகர் பனாஜி மண்டோவி நதியின் இடதுகரையோரம் அமைந்துள்ளது. கோவாவின் சட்டமன்ற கட்டிடம் பொர்வோரிமில் அமைந்துள்ளது. கோவா சட்டசபையின் இருப்பிடம் மண்டோவி நதியின் குறுக்காக உள்ளது. கோவா மாநிலத்தின் நீதித்துறை நடவடிக்கைகள் மும்பையைச்(கோவாவின் அருகமைந்த மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரமாகவும் முன்பு பம்பாய் என அழைக்கப்பட்டதும் ஆகும்) சார்ந்ததாகும். கோவா மாநிலத்தின் நீதித்துறை பம்பாய் உயர்நீதி மன்றத்தின் கீழ் வருகிறது. இதன் உயர்நீதிமன்ற கிளையானது பனாஜியில் அமைந்துள்ளது. மற்ற மாநிலங்களைப் போலில்லாமல் கோவா மாநிலமானது,பிரிட்டிஷ் இந்திய சட்டத்தை மாதிரியாகக் கொண்டு தனிநபர் சமயம் சார்ந்த குடியுரிமை சட்டங்களை பின்பற்றி வருகிறது,நெப்போலியனியக் குறியீடுகளை அடிப்படையாகக் கொண்ட போர்ச்சுக்கீசிய சீரான குடியுரிமை குறியீடுகளை கோவா அரசு தொடர்கிறது. கோவா முக்கிய நிர்வாக அதிகாரங்களைக் கொண்ட முதலமைச்சரின் தலைமையில், நாற்பது சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரே அமைப்பு முறையிலான சட்ட சபையை பெற்றுள்ளது. தற்போது கோவாவின் முதலமைச்சராக திரு.திகம்பர் காமத் அவர்களும்,எதிர்கட்சித் தலைவராக திரு.மனோகர் பாரிக்கர் அவர்களும் உள்ளனர். இங்குள்ள ஆளுங்கட்சியானது தங்கள் கட்சி அல்லது கூட்டணிகளோடு ஒருங்கிணைந்து மாநிலத் தேர்தலில் பெற்ற பெரும்பான்மையான இடங்களில் உள்ள தங்கள் ஆதரவாளர்கள் துணையுடன்,சபையில் எளிமையாக பெரும்பான்மையை பெற்று ஆட்சி செய்து வருகிறது. இதன் ஆளுநர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இங்கு ஆளுநரின் பங்களிப்பு பெரும்பான்மையாக சம்பிரதாயமானதாக உள்ளது,ஆனால் அடுத்த ஆட்சியை யார் நிர்வகிப்பது என்று முடிவெடுக்கும் சூழலிலும் அல்லது சமீபத்தில் நடந்தது போன்று சட்டசபையை கலைக்கும் பொழுதும் முக்கிய பங்காற்ற கூடியவராகவும் இருக்கிறார். 1990 வரையிலான முப்பதாண்டு காலம் நிலையான ஆட்சியாளர்களை சந்தித்த பிறகு, கோவா அதன் அரசியல் நிலையின்மை காரணமாகவும் பெயர்பெற்றதாக விளங்குகிறது.1990 மற்றும் 2005 க்கான பதினைந்து ஆண்டுகளில் பதினான்கு ஆட்சியாளர்களை சந்தித்து அரசியல் நிலையின்மையைப் புலப்படுத்தியுள்ளது.மார்ச் 2005 இல் இதன் சட்டசபை ஆளுநரால் கலைக்கப்பட்டது மற்றும் இதன் சட்டசபை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு குடியரசுத் தலைவரின் ஆட்சி அறிவிக்க்ப்பட்டது. 2005 இல் நடந்த இடைத்தேர்தலில் தான் நின்ற ஐந்து இடங்களில் மூன்றில் வெற்றி பெற்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ் கட்சி மற்றும் பி.ஜே.பி ஆகிய இரண்டு கட்சிகளும் மாநிலத்தின் பெரிய கட்சிகளாகும். 2007 இல் நடைபெற்ற சட்டசபை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கூட்டணி முன்னணியில் வெற்றி பெற்று மாநிலத்தின் ஆட்சிக்கு வந்தது. பிற கூட்டணி கட்சிகளாவன ஐக்கிய கோயன்ஸ் ஜனநாயகக் கட்சி,இந்திய நேஷனலைஸ்டு காங்கிரஸ் கட்சி, மஹாராஷ்டிரவதி கோமண்டக் கட்சி ஆகியனவாகும்.

கல்வி

கோவா பல்கலைக்கழகம் 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி கோவாவில் கல்வி கற்றோர் சதவீதம் 82% ஆகும். இதில் ஆண்களில் 89% பேரும்,பெண்களில் 76% பேரும் கல்வி கற்றவர்கள் ஆவார்கள்.ஒவ்வொரு வட்டமும் கிராமங்களைக் கொண்டுள்ளன,ஒவ்வொரு வட்டமும் அரசால் நடத்தப்படும் பள்ளிக்கூடத்தைப் பெற்றுள்ளது. நாட்டின் பிற பகுதிகளோடு ஒப்பிடுகையில் குறைந்த அளவிலான முறைகேடுடைய அரசு பள்ளிகளின் தரம் காரணமாக,தனியார் பள்ளிகளின் தேவை குறைந்துள்ளது. அனைத்து பள்ளிகளும் மாநிலத்தின் SSC யின் கீழ் இயங்குகிறது. இதன் பாடத்திட்டங்கள் மாநில கல்வித்துறையால் பரிந்துரைக்கப்படுகிறது. இங்குள்ளவற்றில் சில பள்ளிகள் அனைத்து இந்திய ICSEவாரியத்தால் இயக்கப்படுகிறது. கோவாவின் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் உயர்நிலை பள்ளி படிப்பை ஆங்கில வழியில் படிக்கின்றனர். மற்றொரு நிலையில் தொடக்கப்பள்ளிகளில் பெரும்பாலும் கொங்கனி மற்றும் மராத்தி மொழியில்(தனியார்,ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகள்)இயங்குகின்றன. இவ்வகையில் இந்தியாவில் பெரும்பாலும் தாய்மொழியில் கல்வி கற்பவர்களை விட அதிகமானோர் ஆங்கில வழியில் கல்வி பயில்கின்றனர். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான அறிக்கை, 84% கோவா பள்ளிகள் நிர்வாக தலைமை இன்றி இயங்குகின்றன எனத் தெரிவிக்கிறது.பத்து ஆண்டுகள் பள்ளி படிப்புக்கு பிறகு,மாணவர்கள் சிறந்த படிப்புகளான அறிவியல்,கலையியல்,சட்டம் மற்றும் வணிகவியல் போன்றவற்றை நல்கும் மேல்நிலை பள்ளியில் சேருகின்றனர். ஒரு மாணவன் தொழில்முறை கல்வியையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். கூடுதலாக பலரும் மூன்றாண்டு பட்டயப் படிப்புகளில் சேருகின்றனர். இதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கல்லூரி தொழில்முறை பட்ட படிப்பும் உள்ளது. மாநிலத்தின் ஒரே பல்கலைக்கழகமாக டேலிகோவாவில் அமைந்துள்ள கோவா பல்கலைக்கழகம் உள்ளது.

இந்த மாநிலத்தில் நான்கு பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஒரு மருத்துவ கல்லூரி உள்ளது. கோவா பொறியியல் கல்லூரி மற்றும் கோவா மருத்துவ கல்லூரி ஆகியவை மாநில அரசாலும் இவை தவிர்த்த பிற மூன்று பொறியியல் கல்லூரிகள் தனியார் நிறுவனங்களாலும் நடத்தப் பெறுகின்றன.கோவாவிலுள்ள டான் பாஸ்கோ உயர்நிலை பள்ளி, ஏ.ஜெ.டி அல்மிடியா உயர்நிலை பள்ளி, பீப்பிள்ஸ் உயர்நிலை பள்ளி, மனோவிகாஸ்,முஸ்டிஃபண்ட் உயர்நிலை பள்ளி போன்ற பள்ளிகள் மாநிலத்தின் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க பள்ளிகளாகும்.குறிப்பிடத்தக்க சிறந்த கல்லூரிகளாக,ஜி.வி.எம் இன்,எஸ்.என்.ஜெ.ஏ மேல்நிலை பள்ளி, டான் பாஸ்கோ கல்லூரி, டி.எம். இன் கல்லூரி, புனித சேவியர் கல்லூரி, கார்மல் கல்லூரி,சௌகுலே கல்லூரி,டெம்பே கல்லூரி,தமோதர் கல்லூரி,எம்.ஈ.எஸ் கல்லூரி போன்றவைகள் உள்ளன.தனியார் பொறியியல் கல்லூரிகளாவன, ஸ்ரீ ராயேஷ்வர் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்,சிரோடா மற்றும் பட்ரே கான்சிகோ பொறியியல் கல்லூரி போன்றவையாகும்.

மருந்தியல்,கட்டிடக்கலை மற்றும் பல்மருத்துவம் சார்ந்த படிப்புகளைத் தரும் கல்லூரிகளுடன் சட்டம், கலையியல், வணிகவியல் மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளை வழங்கும் ஏராளமான தனியார் கல்லூரிகளும் உள்ளன. இங்கு இரண்டு தேசிய கடலியல் அறிவியல் சார்ந்த மையங்கள் உள்ளன,NCAOR மற்றும் தேசிய கடலியல் நிறுவனம்(NIO) இவை முறையே வாஸ்கோ மற்றும் பனாஜிம்மில் உள்ளன. 2004 இல் பிட்ஸ் பிலானி பல்கலைக்கழகம் தன் முதல் செயற்கைக்கோளை துவக்கியது. பிட்ஸ் பிலானி கோவா வளாகமானது தபோலிம் அருகிலுள்ளது.மிகுதியான பொறியியல் கல்லூரிகளை அடுத்து,அதிக அளவிலான தொழில்நுட்ப கல்விநிறுவனங்களும் உள்ளன, அவற்றில் சில ஃபாதர் ஏக்னல் தொழில்நுட்பக்கல்லூரி, வெர்னா மற்றும் கப்பல்கட்டுமான தொழில்கல்வி நிறுவனம்,தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை பயிற்சி தரும் வாஸ்கோடாமா நிறுவனம் போன்றவைகளாகும்.பிற மாநிலங்களைச் சார்ந்த பெரும்பான்மையினர் தாங்கள் தேர்ந்தெடுக்க விரும்பி கிடைக்காத படிப்புகளுக்கான வாய்ப்புகள் கோவாவில் இருப்பதால், இங்கு இப்படிப்புகளின் தேவை அதிகரித்துள்ளது. கோவா மேலும் கடல்சார் பொறியியல், மீன்வளம்,ஹோட்டல் நிர்வாகம் மற்றும் சமையற்கலை சார்ந்த படிப்புகளாலும் நன்கு அறியப்படுகிறது. இம்மாநிலம் 1993 இல் ரோமுலட் டிசோசா என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட கோவா இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் என்ற வணிகப்பள்ளியையும் கொண்டுள்ளது. சில பள்ளிகள் தங்கள் பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக போர்ச்சுகீசிய மொழியை மூன்றாவது மொழியாக கற்பிக்கிறது. கோவா பல்கலைக்கழகம் போர்ச்சுகீசிய மொழியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட படிப்புகளையும் வழங்குகிறது.

தகவல் பரிமாற்றம்

கோவா பெரும்பாலும் இந்தியாவின் அனைத்து தொலைகாட்சி அலைவரிசைகளையும் வழங்கி வருகிறது. கோவாவின் பெரும்பகுதிகளில் அலைவரிசைகள் மின் இணைப்பான்களால் பெறப்படுகின்றன. உள்ளூர் பகுதிகளில் அலைவரிசைகளானது செயற்கைக்கோள் அலைவாங்கி வழியாகப் பெறப்படுகிறது. தேசிய தொலைக்காட்சி ஒலிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் இரண்டு இலவச அலைவரிசைகளை காற்றில் மக்களுக்காக வழங்குகிறது.DTH (டைரக்ட் டு ஹோம்) சேவைகளை டிஷ் டிவி,டாடா ஸ்கை மற்றும் டி.டி. டைரக்ட் ப்ளஸ் நிறுவனங்கள் மூலம் வழங்குகிறது. மாநிலத்தின் ஒரே வானொலி நிறுவனமான அகில இந்திய வானொலியானது,பண்பலை(FM) மற்றும் அதிர்வலை(AM)ஆகிய இரண்டு அலைவரிசைகளையும் ஒலிபரப்புகிறது. இரண்டு அதிர்வலை ஒலிபரப்பில் முதல்நிலை அலைவரிசை 1287 kHz லும் மற்றும் விவித் பாரதியானது 1539 kHz லும் ஒலிபரப்பாகும். அகில இந்திய வானொலியின் பண்பலை வரிசை ஒலிபரப்பு எஃப்.எம்.ரெயின்போ என அழைக்கப்படுகிறது. இது 105.4 MHz இல் ஒலிபரப்படுகிறது. தனியார் பண்பலை வானொலிகளான பிக் எஃப்.எம் 92.7 MHz லும்,ரேடியோ மிர்ச்சி 98.3 MHz லும்,ரேடியோ இண்டிகோ 91.9 MHz லும் ஒலிபரப்பாகின்றன. இங்கு இக்னோ(IGNOU) நிறுவனத்தால் பனாஜியிலிருந்து ஒலிபரப்பப்படும் கேயன் வாணி என்கிற கல்வி ஒலிபரப்பு 107.8 MHz இல் ஒலி பரப்பப்படுகிறது. மாநிலத்திலேயே முதல் முறையாக 2006 இல் மாப்யூசா விலுள்ள புனித சேவியர் கல்லூரி வாய்ஸ் ஆஃப் சேவியர் என்ற பெயரில் வளாக சமுதாய வானொலி நிலையத்தை தோற்றுவித்தது.கோவாவில் ரிலையன்ஸ் இன்ஃபோகாம்,டாடா இண்டிகாம்,வோடோஃபோன்(முன்பு ஹட்ச்),பாரதி ஏர்டெல்,பி.எஸ்.என்.எல் மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற முக்கிய செல்லுலார் சேவை நிறுவனங்கள் தங்கள் சேவைகளை வழங்கி வருகின்றன.உள்ளூர் செய்தித்தாள் பதிப்பு நிறுவனங்களில், ஆங்கில மொழியில் வருபவை தி ஹெரால்ட்(கோவாவின் மிகப்பழமையான போர்ச்சுகீசிய மொழி தாளானது ஓ ஹெரால்டோ எனப்படுகிறது), தி கோமண்டக் டைம்ஸ் மற்றும் நவ்ஹிந்த் டைம்ஸ் என்பனவாகும். இத்துடன் கூடுதலாக பாம்பே மற்றும் பெங்களூர் போன்ற நகர்புறங்களில் இருந்து வரவழைக்கப்படும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகியவையும் கிடைக்கின்றன.தி டைம்ஸ் ஆஃப் இந்தியா சமீபத்தில் மாநிலத் தலைநகரிலிரிந்து உள்ளூர் மக்களுக்கான செய்தி சேவைகளை வழங்க கோவாவில் தனது பதிப்பை துவங்கியுள்ளது. இவற்றில் அலுவலகரீதியாக-அங்கீகரிக்கப்பட்டவைகளாக,கொங்கனியில் வரும் சுனாபரண்ட் (தேவநாகரி எழுத்திலும்), தி நவ்ஹிந்த் டைம்ஸ் ,தி ஹெரால்ட் டைம்ஸ் ,தி கோமண்டக் டைம்ஸ் ஆகியவை ஆங்கிலத்திலும்; மற்றும் கோமண்டக் ,தருண் பாரத் ,நவபிரபா ,கோவா டைம்ஸ் ,சனதன் பிரபாத் ,கோவ தூத் (அனைத்தும் மராத்தியிலும்)ஆகியவைகள் உள்ளன. இவை அனைத்தும் நாளிதழ்களாகும். மாநிலத்தின் பிற பதிப்பு நிறுவனங்களில், கோவா டுடே (ஆங்கில மாத இதழ்),கோயன் அப்சர்வர் (ஆங்கில வார இதழ்),வாவ்ர்ட்டினாச்சோ இக்சட் (ரோமன் எழுத்து கொங்கனி வார இதழ்),கோவா மெஸன்ஜர் ,குலாப் (கொங்கனி மாத இதழ்),பிம்ப் (தேவநாகரி எழுத்திலான கொங்கனி) ஆகியனவும் அடங்கும்.

கட்டிடக் கலை

கோவாவின் கட்டிடக்கலையானது இந்திய,முகலாய மற்றும் போர்ச்சுகீசிய முறைகளின் ஒருங்கிணைந்த கலையாகும். நான்கு நூற்றாண்டுகள் ஆட்சி செலுத்திய போர்ச்சுகீசியர்களுக்கு பிறகு,பெரும்பான்மையான தேவாலயங்கள் மற்றும் வீடுகளில் இருந்த போர்ச்சுகீசிய கட்டிடக்கலை முறை நீக்கப்பட்டன. முகலாயர்களும் கோவாவை ஆட்சி செலுத்தியதன் காரணமாக, முகலாயக் கட்டிடக்கலை முறையில் கட்டப்பட்ட மாடங்கள் நிறைந்த நினைவுச்சின்னங்கள் கோவாவில் காணப்படுகின்றன. கோவாவின் கட்டிடக்கலை முறையானது மிகவும் எளிமையான மற்றும் மேம்போக்கான கட்டிடங்களைக் கொண்டு நவீனமயமாகக் காட்சியளிக்கிறது.

18 ஆம் நூற்றாண்டில் இறுதியில் கோவாவின் கட்டிட முறைகளில் மாற்றம் ஏற்பட்டது. போர்ச்சுகீசிய கட்டிடக்கலையின் விளைவாக, அதிக வீரியமுள்ள வண்ணங்கள் மற்றும் கூரை ஓடுகள் ஆகியவற்றினை பயன்படுத்துவது மிகுதியானது. நீலம் மற்றும் சிவப்பு ஆகியவை விரும்பத்தக்க வண்ணங்களாக மாறின, பெரும்பாலான வீடுகளில் அடர் நீல நிற வண்ணங்கள் பூசப்பெற்றன அதன் கூரைகள் சிவப்பு நிற ஓடுகளால் மூடப்பட்டிருந்தது. பொதுவாக வீடுகள் பெரியதாகவும் மற்றும் காற்றோட்டத்திற்காக சன்னல்கள் அமைக்கப்பெற்று விசாலமான அறைகளைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் கடவுளின் படங்கள் மற்றும் சிலைகளை வைப்பதற்கென தனி அறை அல்லது இடத்தை கொண்டுள்ளன.கோவாவின் இந்த உயர்ந்த புகழானது போர்ச்சிகீசியத்துக்கு இணையானத் தன்மையைப் பெற்றுள்ளது. ஆனால் இதன் கம்பீரம் போர்ச்சிகீசியத்திடமிருந்து கைவரப்பெற்றதாகும். இந்திய மன்னர்குலத்தை சார்ந்த அநேகத் தளபதிகள்,மன்னர்கள் ஆகியோர் தங்கள் அரசகுல ஆடம்பரத்தைக் காட்ட மின்னுகின்ற சிறிய அணிகலன்களை உருவாக்கினர்.

கோவாவை பாட்புரர்கள்,பஹீஜாஸ்கள்,அசோகர்,மௌரியர்கள் மற்றும் சாதவாகனர்கள் ஆகியோர் ஆட்சி புரிந்தனர். கி.பி 1000 ஐ சார்ந்த கல்வெட்டானது (கோவாவில் கடம்ப வம்சத்தை சார்ந்த சாஷ்டதேவா சிம்மாசனத்தில் இருந்த பொழுது)அக்கால தலைநகர் கோவாவை பற்றி விவரிப்பதாவது: ’எல்லா பக்கங்களிலும் தோட்டங்கள், வெள்ளை மிலாறுகளாலான வீடுகள்,குறுகிய சந்துகள், குதிரை லாயங்கள், பூந்தோட்டங்கள்,சந்தைகள், தேவதாசிகளின் காலனிகள் மற்றும் குளங்கள் ஆகியன இருந்தன.’ அவரது மகனது காலத்தில் கோவா பதினான்கு அயல் நாடுகளில் வர்த்தகம் செய்யும் உரிமையைக் கொண்ட சக்தியுடைய நாடக விளங்கியது. இதன் விளைவாக பெற்ற ஆக்கிரமிப்பு நிலங்களுடன் கூடிய மிகவும் விரும்பப் பெறும் இந்திய துறைமுக நகரமாக கோவா விளங்கியது. இத்தகைய புகழ் பரவுவதற்கு,அதன் சட்டதிட்டமும் ஒரு காரணமாய் அமைந்தது. இங்கிருந்து நட்புசார்ந்த நாடுகளின் துறைமுகங்களுக்கு பொங்குகின்ற நீலக்கடலலைகள் வழியாக உலகம் முழுவதும் நடந்த வணிகம், காலனிய ஆதிக்கம் ஏற்படவும் மற்றும் பிற நாடுகளை வெற்றி கொள்ளவும் வழியமைத்தது.

1497 ஜீலை 4 இல் லிஸ்பனில் உள்ள தாகூஸ் நதியிலிருந்து சோ கேபிரியல் என்ற கொடிமர கப்பலுடன் வாஸ்கோடகாமா புறப்பட்ட பொழுது, இந்த பயணத்தின் விளைவுகளை யாரும் கறபனை கூட செய்திருக்க முடியாது. அந்த சமயத்தில் கிழக்கில் உள்ள சுதேசிகள் மேற்கில் பொருளாதார நெருக்கடிக்குள்ளான அரசர்களைக் காட்டிலும் செல்வந்தர்களாக விளங்கினார்கள். கோவாவின் கடற்கரை நகரமான வாஸ்கோ(கோவாவின் பெரிய நகரம்), வாஸ்கோடகாமா பெயரில் இருந்த போதிலும் அவர் ஒருபோதும் கோவாவிற்கு வந்ததில்லை. நகரத்தின் இப்பெயர் போர்ச்சுக்கல் நினைவாக வைக்கப்பட்டது. போர்ச்சிகீசிய பேரரசு இந்தியாவில் முதலில் அழியவும் பிறகு வேரூன்றி வளரவும் காரணமாக அமைந்தவர் அஃபோன்சா டி அல்புகியர்கியூ ஆவார். கோவா தன்முகத்தை மாற்றும் என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். தற்பொழுது புதிதாக ஆட்சிக்கட்டிலில் ஏறியிருப்பவர்கள் பழையவற்றை மறுவடிவமைத்தும், புதியவற்றை உருவாக்கியும் எதிர்கால மாறுதலுக்கேற்ப கோவா மக்களை மாற்றும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

போர்ச்சுகீசியர்கள் கோவாவை மேற்குபகுதியில் அமைந்த கம்பீரமான வலிமையுடைய நாடாக மாற்றி புகழின் உச்சத்தில் வைக்க முனைந்தனர். அவர்களது இந்த எண்ணம் உயர்ந்ததாகவும் வானுயர்ந்த குறிக்கோளாகவும் இருந்தது, ஆனால் இது குறுகிய காலம் மட்டுமே ஒளிவீசும் எரி நட்சத்திரம் போல் ஆனது. ’போர்ச்சுக்கல் வீரயுக மக்களைக் கொண்ட மிகச்சிறிய தேசம்’ என வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கோவாவின் சிறப்பைப் பொறுத்து அது உலகஅதியங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. அதே நேரத்தில் லண்டன் மற்றும் லிஸ்பானை விட சிறப்புடைய அதிசயமாக இது விளங்குகிறது. 300,000 மக்கள் இங்கு வீடுகளை அமைத்துள்ளனர். டச்சுக்காரராகிய லின்சோடென் எழுதிய ’மீட்டிங் அபான் தி பர்ஸ் இன் அண்ட்வெர்பி’ என்ற நூல் கோவாவை ’ஆசியாவின் ரோம்’ மற்றும் கிழக்கு நாடுகளின் பவளம் என்ற அடை மொழிகளால் வர்ணிக்கிறது. `கோவா டோரடா’ அல்லது `தங்க கோவா’கடற்கரை என்ற வாசகங்கள் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக சொல்லப்பட்டாலும், இங்குள்ள தேவாலயங்களில் மிகவும் நுணுக்கமான முறையில் தங்க முலாம் பூசப்பெற்ற பலிபீடம் மற்றும் அதன் பின்பக்க திரை ஆகியவை போர்ச்சுகீசியர் ஆப்பிரிக்காவில் கண்டுபிடித்த சுத்தமான தங்கத் தகடுகளால் அமைந்துள்ளது.

இது குறித்து சமகாலத்தவரால் வரும் விமர்சனங்கள் பெரிதுபடுத்தப்படுவதில்லை. `கியூம் வியு கோவா எஸ்கியுசா டி வெர் லிசோபா’' என்ற வாக்கியம் `கோவாவைக் கண்டவர்கள் லிஸ்பனைக் காண வேண்டியதில்லை’ என்பதை குறிக்கிறது. 1606 இல் கோவாவின் கிழக்கில், சண்டா மோனிகா என்ற முதல் கன்னியாஸ்திரி மடம் உருவாக்கப்பெற்றது. இங்குள்ள பாம் ஜீசஸ் மண்டபம் கிறித்துவர்கள் விரும்பக்கூடியதாகவும் பிற மதத்தினர்க்கு விரும்பத்தகாததாகவும் இருந்தது. நகரத்தை சுற்றிலும் பரவலாக பெருமை வாய்ந்த இத்தாலிய கட்டிடக்கலையினை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட தேவாலயங்கள் உள்ளன. வருடந்தோறும் மழைக்காலம் முடிந்த பிறகு இங்குள்ள மாளிகைகளில் வண்ணம் பூசவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. கட்டடக்கலையை வரைமுறை படுத்தும் விதத்தில் கட்டடங்களின் வெளிமூலை மற்றும் சுவர்களில் வெள்ளை வண்ணமும்,சன்னல் விளிம்புகள் மற்றும் மாடி கைப்பிடிசுவர் தாங்கும் சிறுதூண்கள் ஆகியவற்றை சுவர் பரப்பிலிருந்து வேறுபடுத்தி காட்ட மஞ்சள் காவி,இந்திய சிகப்பு அல்லது இளம்பச்சை போன்ற வண்ணமும் பூசப்பட வேண்டும் என்ற விதிகள் வகுக்கப்பட்டன.

கட்டடங்களை தவிர்த்து தேவாலயங்கள் முழுமையாக வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டது. 1839 இல் கேப்டன் மரியத் என்பவர் தான் எழுதிய தி பாண்டம் ஷிப் என்ற நாவலில் கோவாவை பின்வருமாறு குறிப்பிடுகிறார்: அரண்மனையை சுற்றியுள்ள சதுக்கங்கள் மற்றும் அகலமான தெருக்களில் பகட்டான சேணைகளுடைய யானைகள்,மூடப்பெற்ற அல்லது சட்டமிடப்பட்ட சிறப்பான கொட்டகைகளில் உள்ள குதிரைகள் போன்ற பல்வேறு உயிரினங்கள் இருந்தன: உள்ளூர்வாசிகள் தூக்கும் பல்லக்குகளில் நிறைய பேர் சவாரி செய்தனர்;ஒடிக்கொண்டிருக்கும் பாதசாரிகள்;குசினிக்காரர்கள்;பெருமை மிகு போர்ச்சுகீசியர்கள் முதல் அரையாடை அணிந்த உள்ளூர்வாசி வரை தேசத்தின் பல்வேறு மனிதர்களும் இருந்தனர்;முஸ்லிம்கள்,அரபியர்கள், இந்துக்கள், ஆர்மேனியர்கள்;அதிகாரிகள்,சீருடையணிந்த படைவீரர்கள் ஆகியோர் கூட்டம் மற்றும் குழுக்களில் ஒரேநேரத்தில் காணப்பட்டனர்.அனைவரும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தனர். இதுவே செல்வ வளம், பகட்டு மற்றும் பெருமை மிகு ஆடம்பரம் கொண்ட, கிழக்கின் மகாராணி எனப்படும் கோவா நகரின் சிறப்பாகும். என வர்ணிக்கப்பட்டுள்ளது.


கலாச்சாரம்

காவ்லெமில் உள்ள சாந்தா துர்க்கா கோவில்கோவா பற்றிய காட்சி அரங்கமானது, மத நல்லிணக்கத்தை மையப்படுத்தி தீபஸ்தம்பம்,சிலுவை,பொய்கால் குதிரைகளை தொடர்ந்து வரும் ரதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறுபட்ட மதங்கள் மற்றும் கலாச்சாரங்களின் ஒருங்கிணைவாக அரசர்களின் மேற்கத்திய பாரம்பரிய உடைகளோடு உள்ளூர் நடனங்கள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தப்படுகின்றன. சிக்மோ மெல் என்னும் இசை மற்றும் நடனம் சார்ந்த விழா வேற்றுமையில் ஒற்றுமை என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.சிக்மோவைத் தவிர கொங்குனியில் சாவோத் எனப்படும் கணேஷ் சதுர்த்தி , தீபாவளி ,கிறிஸ்துமஸ் ,ஈஸ்டர்,சம்ஸார் பட்வோ மற்றும் சாம்பல் புதன் களியாட்டம் போன்ற விழாக்களும் கோவா மக்களால் கொண்டாடப்படுகின்றன. கோவா புத்தாண்டு கொண்டாட்டங்களிலும் சிறந்து விளங்குகிறது. கோவாவின் சாம்பல் புதன் களியாட்டங்கள் பெருமளவு சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

நடனம் மற்றும் இசை
மண்டோ மற்றும் டல்பாட் ஆகியவை கோவாவின் பாரம்பரிய இசை வடிவங்கள் ஆகும். கோவாவில் உள்ள இந்துக்கள் நாடகங்கள்,பஜனைகள் மற்றும் கீர்த்தனைகளில் மிகுந்த விருப்பமுடையவர்கள். லதா மங்கேஷ்கர்,ஆஷா போஸ்லே,கிஷோரி அமோன்கர்,கேசர்பாய் கேர்கர்,ஜிதேந்திரா அபிஷேகி, பண்டிட் பிரபாகர் கேர்கர் போன்ற பல புகழ்பெற்ற இந்திய பாரம்பரிய இசைப் பாடகர்கள் கோவாவிலிருந்து தோன்றியுள்ளனர். டேக்னி,பக்டி மற்றும் கொரிடின்கோ ஆகியவை கோவாவின் சில பாரம்பரிய நடனங்கள் ஆகும். இவையே கோவா டிரான்ஸின் பிறப்பிடமாகவும் இருக்கிறது.

திரையரங்கு
நாடகம், தியேடர் மற்றும் சோகர் ஆகியவை கோவாவின் முதன்மையான பாரம்பரிய நிகழ்த்துக்கலை வடிவங்கள் ஆகும். ரன்மலே,தசாவதாரி,கலோ,கொலன்கலா,லலித்,கலா மற்றும் ரத்கலா ஆகியவை பிற கலை வடிவங்களாகும். இராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகள் சமூக நிலைக்கேற்ப நவீனமயமாக்கப்பட்டு பாடல் மற்றும் நடனத்துடன் காட்டப்படுகிறது.மேளக்கலைஞர்கள் மற்றும் கீபோர்டு கலைஞர்கள் மற்றும் கிதார் கலைஞர்கள் காட்சியின் பகுதியாக இருந்து பின்ணனி இசையை வழங்குகின்றனர்.

உணவு
அரிசி சோறுடன் கூடிய மீன் குழம்பு வகைகளே(கொங்கனியில் சிட் கோடி ) கோவா மக்களின் முக்கிய உணவாகும். கோவாவின் சமையற்கலை புகழடைந்திருப்பதற்கு காரணம் பல்வேறுபட்ட உயர்ந்த மீன் வகை உணவுகள் நேர்த்தியான முறையில் சமைக்கப்படுவதே ஆகும். கோவா மக்கள் தங்கள் சமையலில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணையை பரவலாக பயன்படுத்துவதோடு மிளகாய் மிளகுத்தூள்,மசாலாக்கள் மற்றும் வினிகர் ஆகியவற்றையும் சேர்த்து சமைப்பதால் உணவு தனித்தன்மை வாய்ந்த நறுமணம் பெற்றதாக உள்ளது. பன்றி இறைச்சி உணவு வகைகளான விண்டலோ,சக்யூடி மற்றும் சார்பொடெல் ஆகியவை கோவா கத்தோலிக்கர்களின் பெரிய விழாக்களில் சமைக்கப்படும். கோவாவிற்கு அயல்நாட்டிலிருந்து வரப்பெற்ற காத்கட்டே என அறியப்படும் காய்கறி ஸ்டீவ் ஆகும். இதுவே இந்து மற்றும் கிறித்துவர்களின் விரும்பத்தக்க விழாக் கொண்டாட்டங்களில் சமைக்கப்படும் மிகப்பிரபலமான உணவாகும். காத்கட்டேயில் குறைந்தது ஐந்து காய்கறிகளாவது அடங்கியிருக்கும். சுத்தமான தேங்காய் மற்றும் கோவாவின் சிறப்பான மசாலாக்கள் நறுமணத்திற்காக சேர்க்கப்படும். சன்னாஸ் என்னும் வித்தியாசமான இட்லியும் மற்றும் கோய்லோரி என்னும் வித்தியாசமான தோசையும் கோவாவில் தோன்றியவையாகும். தரமான முட்டையை பல அடுக்குகளாக அடிப்பாகத்தில் கொண்டு செய்யப்படும் பிபின்கா என்னும் இனிப்பு வகை கிறிஸ்துமஸ் காலத்தில் சிறப்புடையதாகும். கோவாவின் மிகப் பிரபலமான மது பானம் ஃபென்னி ஆகும்.முந்திரி ஃபென்னி முந்திரி மரத்தின் பழங்களை புளிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது,அது போல தேங்காய் ஃபென்னி தென்னைமரச் சாறின் கள்ளிலிருந்து தயாரிக்கப்படுகிறது

மொழிகள்

1987 இன் கோவா,டாமன் மற்றும் டையூ ஆட்சி மொழி சட்டமானது தேவநாகரி எழுத்துமுறையில் அமைந்த கொங்கனி மொழியே கோவாவின் ஒரே ஆட்சி மொழி என்றது, மேலும் மராத்திமொழியையும் "அனைத்து அல்லது ஏதேனும் அலுவல் காரியங்களுக்கு" பயன்படுத்தலாம் என்பதையும் குறிப்பிட்டுள்ளது. அரசாங்கமும் மராத்தியில் வரும் தகவல் பரிமாற்றங்களுக்கு மராத்தியில் பதில் அளிப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளது. ரோமன் எழுத்துமுறையில் மாநில தேவைகள் சார்ந்து கொங்கனி மற்றும் மராத்திக்கு சமமான மதிப்பு இருந்த போதிலும்,அக்டோபர் 2008[update] கொங்கனியே ஒரே ஆட்சி மொழியாக நீடிக்கிறது.மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் மொழிகள் கொங்கனி,மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகும். கொங்கனி முதன்மையாகப் பேசப்படும் மொழியாகவும்,மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவை இலக்கியம்,கல்வி மற்றும் அலுவலகம் சார்ந்த மொழியாகவும் பயன்படுத்தப்படுகிறது. பரவலாக பயன்படுத்ப்படும் பிற மொழிகளில் இந்தி மற்றும் போர்ச்சுகீசியமும் அடங்க்கும். போர்ச்சுகீசிய மொழி காலனி காலத்திய உயர்ந்தோர் மொழியாக இருந்தது,குறைந்த எண்ணிக்கையிலான பேச்சாளர்களே இதனை பயன்படுத்தினர். இதனை பேசுபவர்கள் குறைவாக இருப்பினும் மக்கள் தற்பொழுதும் இதனை வீட்டில் பேச விரும்புகின்றனர். சமீப ஆண்டுகளில் சில போர்ச்சுகீசிய புத்தகங்களும் பதிப்பிக்கப் பெறுகின்றன.

மக்கள் கணக்கியல்

மிராமர் கடற்கரையிலுள்ள இந்தோ-கிறித்துவ ஒருங்கமை நினைவிடம்கோவாவின் பூர்வீக மக்கள் ஆங்கிலத்தில் கோயன் எனவும்,கொங்கனியில் கோயங்கர் எனவும்,போர்ச்சுகீசிய மொழியில் கோயஸ் (ஆண்கள்) அல்லது கோயிசா (பெண்கள்) எனவும் மற்றும் மராத்தியில் கோவேக்கர் எனவும் அழைக்கப்படுகின்றனர். கோவா 1.3444 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டு இந்தியாவின் நான்காவது மிகக்குறைந்த(சிக்கிம்,மிசோராம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை அடுத்து) மக்கள் தொகையைக் கொண்ட மாநிலமாகத் திகழ்கின்றது. ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் இதன் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் 14.9% ஆகும்.ஒவ்வொரு சதுர கிலோமீட்டர் நிலப்பகுதிக்கும் 363 பேரைக் கொண்டுள்ளது.நகர்புறங்களில் வாழும் 49.76% மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு ,அதிக விழுக்காடு உடைய நகர்புற மக்கள் தொகை கொண்ட மாநிலமாக கோவா உள்ளது.கோவா 82% க்கும் மேற்பட்ட கல்விகற்றோரைக் கொண்டுள்ளது.1000 ஆண்களுக்கு 960 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் கொண்டுள்ளது. 2007 இல் பிறப்பு விகிதம் 1000 நபர்களுக்கு 15.70 சதவிகிதம் ஆகும்.இந்தியாவில் மிகக்குறைந்த பழங்குடியின மக்களை கொண்ட மாநிலமாகவும் கோவா உள்ளது.

Religion in Goa
Religion Percent
Hinduism   65%
Christianity   26%
Islam   6%
Others†   3%
Distribution of regions
†Includes Sikhs (0.07%), Buddhists (0.04%), Jains (0.06%) and Others (0.24%).
2001 இல் எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கோவாவின் மக்கள் தொகை 1,343,998 ஆகும். அதில் 886,551 (65%)பேர் இந்துக்கள்,359,568 (26%) பேர் கிறித்துவர்கள், 92,210 (6%) பேர் முஸ்லீம்கள்,970 (0.07%) பேர் சீக்கியர்கள்,649 (0.04%) பேர் பௌத்தர்கள்,820 (0.06%) பேர் ஜைனர்கள் மற்றும் 3530 (0.24%) பேர் பிற மதங்களை சார்ந்தவர்கள் ஆவார்கள்.கிழக்கிந்தியர்கள்: கத்தோலிக்க கம்யூனிட்டி ஆஃப் பாம்பே சால்சேட் அண்ட் பேசீன் என்ற புத்தகத்தை எழுதிய எல்ஸீ வில்ஹெல்மினா பப்டிஸ்டா என்பவரின் கூற்றுப்படி கொங்கனில் கிறித்துவமதம் நம்பும் இயேசுவின் 12 திருத்தூதர்களில் ஒருவராகிய புனித பார்தலோமிவ் என்பவர் கிறித்துவ மத மார்க்கத்தை உபதேசித்து கொங்கனியர்கள் சிலரை கிறித்துவர்களாக மாற்றினார்.ஆனால் 16 ஆம் நூற்றாண்டிற்கு முன் கோவாவில் பூர்வீக கிறித்துவர்கள் இருந்ததாற்கான எந்த உறுதியான ஆதாரமும் இல்லை. போர்ச்சுகீசிய கடற்பயணியாகிய அஃபோன்சா டி அல்புகியர்கியூ 1510 பிப்ரவரி 15 இல் பான்கோவாவைக் கண்டுபிடித்து தனது கட்டுப்பாட்டுக்குள் வந்தார். அவர் வருகைக்கு பின் ரோமன் கத்தோலிக்க கிறித்துவ மதம் கோவாவில் பரவத்தொடங்கியது.1560 இல் நடந்த கோவாவின் நீதி விசாரணையில், பெரும்பாலான கொங்கனி பேசும் பூர்வீக மக்கள் கோயன் கத்தோலிக்கர்கள் என பரவலாக அழைக்கப்படும் ரோமன் கத்தோலிக்கர்களாக மதம் மாறி கோவாவின் கிறித்துவ மதத்தினரின் எண்ணிக்கையை உயர்த்தினர் என்பது உறுதிபடுத்தப்பட்டது.

நன்றி மீண்டும் பயணம் தொடரும் .. தெரிந்தவற்றை மீண்டும் அறிந்தவற்றை தெளிவுபடுத்துவதற்காக……