Home

Friday, July 2, 2010

மதுரை மாநகராட்சி:

இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான மதுரை மாவட்டத்தின் தலைநகராக உள்ள மதுரை உள்ளாட்சி அமைப்பில் ஒரு மாநகராட்சியாகும். தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான மதுரை 1971 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியிலிருந்து மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அப்போது மொத்தம் 13 பஞ்சாயத்து பகுதிகளைச் சேர்ந்து மதுரை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. வைகை ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நகரமாகும். தமிழ் மொழியின் பிறப்பிடமாக மதுரை கூறப்படுகின்றது. தென்னிந்திய திருத்தலங்களின் நுழைவு வாயிலாகவும், உலகப்புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ள இடமாக மதுரை விளங்குகின்றது.

மதுரை (ஆங்கிலம்:Madurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரைஉள்ளாட்சி அமைப்பில் ஒரு மாநகராட்சி ஆகும். மதுரை நகரம் 2500 ஆண்டுகள் பழமையானது.மதுரை வைகை ஆற்ற்ங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாநகர், கூடல் நகர், மதுரையம்பதி, கிழக்கின் ஏதென்ஸ் என்பன மதுரையின் வேறு பல பெயர்களாகும். இந்திய துணைகண்டத்தில் ஒரு தொன்மையான வரலாறைக் கொண்ட நகரமாகும். பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாகவும் விளங்கியது. சங்க காலத்தில் தமிழ் சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடையது.

மதுரை மாநகராட்சி வரலாறு

தென்னிந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கிய இடம் மதுரைக்கு உண்டு. முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல சாதனைகளையும் சோதனைகளையும் தாண்டி வந்தது இம்மதுரை நகரம். பராசக்தியின் வடிவமான அன்னை மீனாட்சி பிறந்து, வளர்ந்து, ஆட்சிசெய்து, தெய்வமான இடமாகக் கருதப்படும் மதுரை, இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களின் மிக முக்கிய சக்திஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன. தமிழ் வளர்ச்சிக்குத் தனியே சங்கம் வைத்து வளர்த்த பெருமையும் இந்த நகரத்துக்கு உண்டு என்று பழமையான வரலாறுகள் தெரிவிக்கின்றன. மதுரை தமிழின் ஐம்ப்ருங்காப்பியங்களின் ஒன்றான சிலப்பதிகாரம் கதையின்படி அதன் நாயகி கண்ணகியால் ஒரு முறை எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
1866: மதுரை நகராட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு. அப்போதைய மக்கள் தொகை 41,601. நகரின் பரப்பளவு 2.60 சதுர கிலோமீட்டர்.
1882: நகராட்சியில் புதிதாக கமிஷனர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. முதலாவது கமிஷனர் அதே ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி பதவியேற்றார்.
1885: கமிஷனர் பதவி கவுன்சிலர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பல கவுன்சிலர்கள் நியமிக்கப்பட்டனர். கமிஷனர்களின் தலைவர் பதவி பிரசிடென்ட்என்ற பெயரிலிருந்து சேர்மன் என்று மாற்றப்பட்டது. முதலாவது சேர்மனாக ராவ் பகதூர் ராமசுப்பய்யர் என்பவர் பதவியேற்றார்.
1892: கவுன்சிலர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்த்தப்பட்டது. இவர்களில் 6 பேரை அரசே நியமிக்கும்.
1921: கவுன்சிலர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்த்தப்பட்டது.
1931: அரசியல் காரணங்களுக்காக நகராட்சி கவுன்சில் கலைக்கப்பட்டது. மாவட்ட உதவி கலெக்டர் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
1933: மீண்டும் அதே கவுன்சில் செயல்பட அரசு அனுமதித்தது.
1942: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆதரித்ததற்காக கவுன்சில் மீண்டும் கலைக்கப்பட்டது.
1943: கவுன்சில் முழுவதும் மாற்றியமைக்கப்பட்டது. கவுன்சிலர்கள் அனைவரையும் அரசே நியமிக்கும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது.
1948: சுதந்திரத்திற்குப் பின் முதல் முறையாக கவுன்சிலுக்குத் தேர்தல் நடந்தது. ஜனவரி மாதம் 3-ம் தேதி முதல் இந்த தேர்ந்தெடுக்கப்பட் நகராட்சிசெயல்படத் துவங்கியது. கவுன்சிலர்கள் அனைவரும் 1969 வரை செயல்பட்டனர்.
1969: நகராட்சிக்கு தேர்தல் நடந்தது. மொத்தம் 48 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் பெண்கள், மூன்று பேர் தாழ்த்தப்பட்டபிரிவைச் சேர்ந்தவர்கள்.
1971: மதுரை நகராட்சி, மாநகராட்சியாக மேம்பாடு செய்யப்பட்டது. நகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் மாநகராட்சி கவுன்சிலர்களாக செயல்பட அனுமதிக்கப்பட்டனர். மதுரை மாநகராட்சியின் முதல் மேயராக இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்த எஸ்.முத்து தேர்வு செய்யப்பட்டார். பி.ஆனந்தம் துணை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1974: மேலும் 13 பஞ்சாயத்துக்கள் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. நகரிலுள்ள வார்டுகள் 65 ஆக மாற்றம் செய்யப்பட்டன.
1978: மாநகராட்சிக்கு முதல் முறையாக தேர்தல் நடந்தது. 65 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 5 பேர் பெண்கள், 4 பேர்தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
1991: வார்டு சீரமைப்பு கமிட்டியின் பரிந்துரைகளின்படி மதுரை மாநகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கை 72 ஆக மாற்றப்பட்டது.
1996: மதுரை மாநகராட்சிக்கு இரண்டாவது முறையாக தேர்தல் நடந்தது. மேயராக கோனார் சமுதாயத்தைச் சேர்ந்த ப.குழந்தைவேலு (தி.மு.க) தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை மேயராக மிசா.பாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.
2001: மதுரை மாநகராட்சிக்கு மூன்றாவது முறையாக தேர்தல் நடந்தது. மேயராக திமுகவைச் சேர்ந்த செ.ராமச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2006: மதுரை மாநகராட்சிக்கு நான்காவது முறையாக தேர்தல் நடந்தது. மேயராக பிள்ளைமார் சேர்ந்த தேன்மொழி கோபிநாதன் (தி.மு.க) தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை மேயராக பி.எம்.மன்னன் தேர்வு செய்யப்பட்டார்.

மாநகராட்சி அமைப்பு
மதுரை மாநகராட்சி இரண்டு மாவட்டப் பிரிவுகளாக செயல்படுகின்றது. ஒன்று தீர்மானித்து ஆய்ந்து செயல் படுகின்ற பிரிவு (ஆய்வுக் குழு) இன்னொன்று செயலாட்சி புரிகின்ற பிரிவு என இரு பிரிவுகளாக பிரிந்து செயல்படுகின்றன. செயலாட்சியர் பிரிவில் நகராட்சி உறுப்பினர்கள், நகராட்சித் தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள் இதில் அடங்குவர்.


சுற்றுலா

மீனாட்சி அம்மன் கோயில் குளம்மதுரை மாநகரில் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம், காந்தி அருங்காட்சியகம் என்று சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அம்சங்கள் இந்நகரில் நிறைய இருக்கிறது. தூங்கா நகரமான மதுரைக்கு அருகில் அழகர்கோயில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் போன்ற இந்துமதத்தின் சிறப்புமிக்க சில தலங்கள் அமைந்துள்ள ஊர்கள் உள்ளன. இது தவிர அணடை மாவட்டங்களான [[சிவகங்கை] மாவட்டத்தில் காளையார் கோயில், ஆவுடையார்கோயில்,புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டத்தில்இராமேஸ்வரம், திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், தேனி மாவட்டத்தில் சுருளி நீர்வீழ்ச்சி,வைகை அணை,தேனி மாவட்டத்தின் அருகில் கேரளமாநில எல்லையில் உள்ள தேக்கடிமற்றும் திருநெல்வேலி,தூத்துக்குடி என்று சரித்திர மற்றும் பொழுதுபோக்கு தலங்களுக்கு செல்ல இங்கிருந்து போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

நன்றி மீண்டும் அடிப்படை அறிந்து சிந்தித்து நடப்போம் ......

No comments:

Post a Comment