Home

Saturday, July 3, 2010

ஈரோடு மாநகராட்சி:

ஈரோடு (ஆங்கிலம்:Erode)

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். ஈரோடு விசைத்தறி தொழிலுக்கும் மஞ்சள் சாகுபடிக்கும் பெயர் பெற்றது. காங்கயம் காளைகளும் ஊத்துக்குளி வெண்ணெய்யும் தமிழ் நாடு முழுவதும் புகழ் பெற்றவை. ஜவுளிப்பொருட்களான துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கிகள் ஆகியன உலகமுழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்பகுதி பருத்தி விளைச்சலுக்கு சாதகமாக உள்ளது. பஞ்சாலைகளும் மோட்டார் வாகன உதிரிபாக தொழிற்சாலைகளும் இங்குள்ள முக்கிய தொழில்களுள் ஒன்றாகும்.பெரியசேமூர், வீரப்பன்சத்திரம், காசிபாளையம், சூரம்பட்டி ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிகளும், பி.பெ.அக்ரஹாரம், சூரியம்பாளையம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளும், திண்டல், கங்காபுரம், எல்லப்பாளையம், வில்லரசம்பட்டி, முத்தம் பாளையம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளும் ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.


முக்கிய சுற்றுலாத்தலங்கள்

தந்தை பெரியார் நினைவிடம்
திண்டல் முருகன் கோயில்
கொடுமுடி மகுடேசுவரர் கோவில் (ஈரோட்டிலிருந்து 38 கீ.மீ தொலைவு)


நன்றி மீண்டும் அடிப்படை அறிந்து சிந்தித்து நடப்போம் ......

No comments:

Post a Comment