Home

Saturday, July 10, 2010

நான் என்பது முதலில் :

என்னை சரி பார்த்த பின்னரே மற்றவற்றை சரிசெய்ய முற்பட வேண்டும்.முதலில் நான் (என்பது ஒவ்வொரு மனித மனசாட்சியை குறிப்பதாகும்) என்(நமது) வீட்டை(நம்முடைய) சரி செய்ய வேண்டும்.தெருவை (நம்முடைய)சரி செய்ய வேண்டும்,ஊரை (நம்முடைய)சரி செய்ய வேண்டும்.
பிறகு,வட்டம்,மாவட்டம்,மாநிலம்,நாடு என்பதை சரி செய்ய வேண்டும்.


மாற்றம் என்பது சட்டத்தில் மட்டுமா,இல்லை நம்முடைய மனசாட்சியிலும் இருக்க வேண்டுமா? விடை தெரியா கேள்விகளோடு பயணம் தொடரும்,


நன்றி

இறைநம்பிக்கை:

இறைநம்பிக்கை என்பது ஒவ்வொரு மனதிற்கும் வெவ்வேறு மதநம்பிக்கைகள் அது ஆண் பெண் பேதமில்லாதது.

மனித இனம் தோன்றியது முதல் பெரும்பாலான மனிதர்களிடம் அனேகமாக எழுந்திருக்கும் சந்தேகம் 'கடவுள் உண்டா?'' என்பதேயாகும்!பகுத்தறிவாளர்களும், அறிவியலாளர்களும் பெரும்பாலான சமயங்களில் ஒத்துப் போய்விடுகின்றனர். ஆனால் இறை /மத நம்பிக்கையாளர்களில் மட்டுமே முரண்படுகின்றனர். முற்பிறவியின் பலனே இவ்வுலக வாழ்வின் இன்பமும் துன்பமும் என்பது இந்துமத நம்பிக்கை; இவ்வுலகில் செய்யும் கருமங்களுக்கு இறப்பிற்குப்பின் மறு உலகில் பலன் கொடுக்கப்படும் என்பது கிறிஸ்தவ, இஸ்லாம் மத நம்பிக்கைகளாகும்

நன்றி

இலவசம் உண்மை ஒரு எதிர்பார்ப்பு .

இது வரை தமிழ்நாடு பற்றிய தகவல் பொதுமானதாக படுகிறது.


இலவசமாக கிடைப்பது அறிவுரை மட்டுமே அதனால்தான் இந்த தலைப்பு.

மாற்றத்தை நோக்கியே பயணம் என்பதால்,
இதில் அடிப்படையில் நான் தமிழன் ஆகையால் தமிழ்நாட்டை பற்றி எழுதினேன். மாற்றத்தை கொண்டுவரவேண்டியது இந்திய அரசின் முடிவு எத்தனை பேர் சட்டதிருத்தம் ஏற்றுக்கொள்கிறோமோ அந்தளவுக்கு 100 மடங்கு எதிர்ப்பு இருக்கும்.கனவு மெய்பட வேண்டும் என திரைபடத்தில் மட்டுமே காண்கிறோம்.நாமுண்டு நம் குடும்பம்,வேலையுண்டு என்று இருக்கிறோம். ஆதிக்கவாதிகளின் உறவுமுறைகளுக்காக நம்முடைய வரிபணம் பயன்பாட்டை மாற்றவே இந்த குமுறல்.ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்த நமக்கு உள்ளூர் சுயநல அரசியல்வாதிகளின் அடக்குமுறையை ஏன் எதிர்க்க தயங்குகிறோம்.

மனதுக்கு வேண்டும் மனசாட்சி என் மனதில் எற்படுகின்ற உள்உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் மீண்டும் மாற்றத்தை நோக்கியே பயணம்


நன்றி

Saturday, July 3, 2010

தூத்துக்குடி மாநகராட்சி:

தூத்துக்குடி

இந்தியாவின் தென் மாநிலமான தமிழகத்திலுள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இது ஒரு துறைமுக நகரமாகும். இது தமிழகத்தின் 10 மாநகராட்சியாக ஆகஸ்ட் 5, 2008 இல் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது[2]. இதன் மேற்கிலும் தெற்கிலும் ஸ்ரீவைகுண்டம் வட்டமும், வடக்கில் ஒட்டப்பிடாரம் வட்டமும் உள்ளன. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. தூத்துக்குடி வரலாற்று ரீதியில் முத்துக் குளிப்புக்குப் பெயர் பெற்ற இடமாகும்.தூத்துக்குடியில் ஒரு அனல் மின் நிலையமும் ஸ்பிக் உரத்தொழிற்சாலையும் அமைந்துள்ளன.

சிறப்புப் பெயர்கள்

தூத்துக்குடி நகருக்கு திருமந்திர நகர் என்றும் முத்துநகர் என்றும் வேறு சிறப்புப் பெயர்களும் இருக்கின்றன.

திருமந்திர நகர்

தூத்துக்குடிக்கு திருமந்திர நகர் என்ற பெயர் வந்ததற்கு ஒரு தனிக் கதை உண்டு. இந்தக் கடற்கரை ஓரத்தில் மிகப்பெரும் காடாக இருந்ததாம். இராவணன் சீதையைக் கடத்திச் சென்ற பின்பு அவளைத் தேடி வர அனுமனை அனுப்பி விட்டு ராமன் இந்தப் பகுதியில் மந்திரங்களை உச்சரித்தபடி தவம் செய்யத் துவங்கினாராம். அவருடைய தவத்திற்குக் கடலலைகளின் பேரிரைச்சல் இடையூறாக இருக்க ராமன் கடலலைகளைச் சப்தமெழுப்பாமல் இருக்க சபித்து விட்டாராம். அன்றிலிருந்து இப்பகுதியில் கடலலைகள் அடங்கி சப்தமில்லாமல் போய்விட்டது. இன்றும் கடலலைகளோ, சப்தமோ இங்கிருப்பதில்லை. ராமன் திருமந்திரங்களை உச்சரித்த இடம் என்பதால் திருமந்திர நகர் என்று பெயர் வந்துவிட்டது என்று ஒரு சிலர் கருத்து சொகின்றனர்.

முத்துநகர்

தூத்துக்குடி கடலில் ஆண்டுக்கு ஒரு முறை முத்துக்குளிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. முத்துக்கள் அதிகம் கிடைத்த நகரம் என்பதால் முத்து நகர் என்று பெயர் ஏற்பட்டது. பாண்டிய நாட்டின் துறைமுக நகரமாக விளங்கிய நகரம்.பாண்டிய நாட்டின் ஆளுகை உடைய பரதவர்கள் நேரிடையாக முத்துக்குளித்தலில் ஈடுபட்ட துறைமுக நகரம் ஆதலால் இது முத்துக்குளித்துறை என்று பெயர் பெற்றது.பின்னாட்களில் முத்து நகர் என்று அழைக்கப்படுகிறது.

துறைமுகம்

தூத்துக்குடியின் பண்டைய துறைமுகம்- வரைபடம்மன்னார் வளைகுடா அருகே இது அமைந்துள்ள தூத்துக்குடி துறைமுகம் ஒரு இயற்கைத் துறைமுகம். இப்பகுதி புயல் கிளம்ப முடியாத பூகோள அமைப்பைக் கொண்டுள்ளது. இங்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வரக்கூடிய கப்பல்களுக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்குகிறது. 600 அடி முகத்துவாரத்தோடும், ஆறுபக்கவாட்டுத் தளங்களோடும் திகழும் இத்துறைமுகம் சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி வசதிக்காக 23 கிரேன்களும், 18 போர்க்லிப்ட் கருவிகளும், 4 பிரும்மாண்டமான சரக்கு லாரிகளும், 4 ரயில் என்ஜின்களும், சுமார் 50 ஆயிரம் டன்கள் சரக்குகள் வைப்பதற்குரிய பாதுகாப்புக் கிட்டங்கிகளும் கொண்டுள்ளது.

1974 ஆம் ஆண்டு இந்நகரிலுள்ள ஸ்பிக் உரத் தொழிற்சாலையின் அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்ய 125 இலட்ச ரூபாய் செலவில் எண்ணெய்த் துறை ஒன்று தனியாக இங்கே ஏற்படுத்தப்பட்டது. 1இங்கு 6 கப்பல்கள் தங்குவதற்கான தளங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கென்று தனியாக நிலக்கரி துறையும், மணிக்கு 2000 டன் நிலக்கரி இறக்லும் வசதியுடைய தானியங்கியும் 1983 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கு மணிக்கு 700 லிட்டர் பெட்ரோலிய எண்ணெப் பொருள்களை இறக்குமதி செய்யத் தேவையான சிறப்புக் கருவிகள் இத்துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

வர்த்தகம்
ஏற்றுமதி/இறக்குமதி கையாளும் நிறுவனங்கள்.
உப்பளங்கள்.
ஸ்பிக் உரத்தொழிற்சாலை.
ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை.
தூத்துக்குடி அல்காலி ரசாயன நிறுவனம்.
தேங்காய் எண்ணை ஆலைகள்.
கடல் சார் உணவு தயாரிப்பு நிறுவனங்கள்

தூய பனிமயமாதா ஆலயம்

தூத்துக்குடியில் வாழும் பரதர் குல மக்களும், இங்கு வாழும் பிற சமூக மக்களும் பனிமய மாதா ஆலயத்திற்கு வந்து வேண்டிச் செல்கின்றனர். 425 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் துத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் பனிமயமாதா தங்கத் தேர் விழா மிகச் சிறப்பான ஒரு விழாவாகும். இத்தேர்த்திருவிழாவைக் காண சாதி, மத, இனப்பாகுபாடிண்றி அனைவரும் கலந்து கொள்வதே இதன் சிறப்பு.இங்கு தயாராகும் உப்பு ஆசியாக் கண்டத்திலேயே மிகச் சிறந்த உப்பாகும். இங்கு பேக்கரிகள் அதிக அளவில் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் மெக்ரூன் எனப்படும் இனிப்பு மிகவும் சுவையானது.
புரோட்டாவிற்கு பெயர் பெற்ற விருதுநகருக்கு அடுத்து தூத்துக்குடி இரண்டாமிடத்தில் இருக்கிறது. இங்குள்ள பனிமயமாதா பேராலயத் தங்கத்தேர் திருவிழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சிறப்பு பெற்ற ஒரு விழாவாகும்.


நன்றி மீண்டும் அடிப்படை அறிந்து சிந்தித்து நடப்போம் ......

திருப்பூர் மாநகராட்சி:

திருப்பூர்

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மாநகராட்சி. இது புதிதாக அறிவிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்தின் தலை நகரமாக அமைந்துள்ளது. இந்மாநகரம் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் ஏழாவது பெரிய நகரமான திருப்பூர் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும். திருப்பூர் மற்றும் அதன் சுற்றுபுறங்களிலும் சுமார் 8 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்.வேலம்பாளையம், நல்லூர் ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிகளும், தொட்டிபாளையம், ஆண்டி பாளையம், வீரபாண்டி, செட்டிபாளையம், மண்ணரை, முருகம்பாளையம், நெருப்பெரிச்சல், முத்தனம்பாளையம் ஆகிய கிராம ஊராட்சிப் பகுதிகளும் திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
திருப்பூரின் முக்கிய சாலைகளாக குமரன் ரோடு, அவிநாசி ரோடு, பெருமாநல்லூர் ரோடு, காங்கயம் ரோடு, பல்லடம் ரோடு, மங்கலம் ரோடு விளங்குகின்றன. குமரன் ரோடு மிக முக்கிய சாலையாக விளங்குகிறது.

திருப்புரின் தொழில் வளம்

தொழில் துறையில் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் நகரம் திருப்பூர் . லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வளித்த , வாழ்வளிக்கும் நகரம் திருப்பூர் . தென்மாவட்டத்தை சேர்ந்த ஆயிரகணக்கான மக்கள் பணிபுரிகிறார்கள் . ஆண்டு தோறும் பத்து ஆயிரம் கோடிக்கும் மேலான அந்நிய செலவாணியை ஈட்டி தருகிறது.


நன்றி மீண்டும் அடிப்படை அறிந்து சிந்தித்து நடப்போம் ......

வேலூர் மாநகராட்சி:

வேலூர்

இந்திய மாநிலமான தமிழகத்தைச் சேர்ந்த நகரமும், வேலூர் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். பாலாற்றின் கரையில் உள்ள வேலூரின் முக்கிய இடமாக வேலூர் கோட்டை விளங்குகிறது. இக்கோட்டையின் உள்ளே இந்துக் கோயில், கிறித்தவ ஆலயம், இஸ்லாமியரின் மசூதி ஆகியவை உள்ளன.வேலூருக்கு அருகில் இரத்தனகிரி பாலமுருகன் கோயில் உள்ளது.

வரலாறு

வேலூர் கோட்டை 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியின் போது சின்ன பொம்மி நாயக்கரால் கட்டப்பட்டது. 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிஜாப்பூர் சுல்தான் இக்கோட்டையை கைப்பற்றினார். பின்னர் மராட்டியர்களாலும், தில்லியின் தௌத் கானாலும் கைப்பற்றப்பட்டது. இதன் பின்னர் ஆற்காடு நவாபுகளின் பொறுப்பில் இக்கோட்டை விடப்பட்டது. 1760ஆம் ஆண்டு இக்கோட்டை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினரின் வசம் சென்றது. திப்பு சுல்தானை வென்ற பிறகு அவருடைய மகன்களை இக்கோட்டையில் ஆங்கிலேயர் சிறை வைத்தனர். 1806 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இக்கோட்டையில் இந்திய சிப்பாய்கள் கலகம் நிகழ்த்தினர்.வேலூரில் பொற்கோயில் ஒரு சுற்றுலா தலமாக உள்ளது, இக்கோயிலில் கூரை முழுவதும் தங்கத்தால் வேயபட்டுள்ளது. தினமும் ஆயிரகணக்காண சுற்றுலா பயணிகள் வந்து தரிசித்து செல்கின்றனர்.

நன்றி மீண்டும் அடிப்படை அறிந்து சிந்தித்து நடப்போம் ......

ஈரோடு மாநகராட்சி:

ஈரோடு (ஆங்கிலம்:Erode)

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். ஈரோடு விசைத்தறி தொழிலுக்கும் மஞ்சள் சாகுபடிக்கும் பெயர் பெற்றது. காங்கயம் காளைகளும் ஊத்துக்குளி வெண்ணெய்யும் தமிழ் நாடு முழுவதும் புகழ் பெற்றவை. ஜவுளிப்பொருட்களான துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கிகள் ஆகியன உலகமுழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்பகுதி பருத்தி விளைச்சலுக்கு சாதகமாக உள்ளது. பஞ்சாலைகளும் மோட்டார் வாகன உதிரிபாக தொழிற்சாலைகளும் இங்குள்ள முக்கிய தொழில்களுள் ஒன்றாகும்.பெரியசேமூர், வீரப்பன்சத்திரம், காசிபாளையம், சூரம்பட்டி ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிகளும், பி.பெ.அக்ரஹாரம், சூரியம்பாளையம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளும், திண்டல், கங்காபுரம், எல்லப்பாளையம், வில்லரசம்பட்டி, முத்தம் பாளையம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளும் ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.


முக்கிய சுற்றுலாத்தலங்கள்

தந்தை பெரியார் நினைவிடம்
திண்டல் முருகன் கோயில்
கொடுமுடி மகுடேசுவரர் கோவில் (ஈரோட்டிலிருந்து 38 கீ.மீ தொலைவு)


நன்றி மீண்டும் அடிப்படை அறிந்து சிந்தித்து நடப்போம் ......

Friday, July 2, 2010

சேலம் மாநகராட்சி

சேலம் (ஆங்கிலம்:Salem)
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். தமிழகத்தின் 5வது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சேலம் ஒரு வணிக மையம் ஆகும். சேலம் மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை "மாங்கனி நகரம்" என்றும் அழைப்பார்கள்.

வரலாறு

சேலம் என்ற சொல் 'சைலம்' மற்றும் 'ஷைல்ய' என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாக கூறப்படுகிறது. 'சேலம்' என்றால் 'மலைகள் சூழ்ந்த இடம்' என்று பொருள்.
இவ்வூரில் உள்ள மலையைச் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று; அது போலச் 'சேரலம்' என்பது 'சேலம்' ஆயிற்று என்றும் கூறுவர். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் "சாலிய சேரமண்டலம்" எனக் குறிப்பிடுகிறது. எனவே, சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப்பட்டது. சேலம் மற்றும் கோவைப் பகுதிகள் நீண்ட காலம் மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாடில் இருந்தது. பிற்பாடு 1768 இல் மதுரை-மைசூர் போரில் சேலம் ஹைதர் அலி கட்டுப்பாட்டுக்கு சென்றது. பின்பு 1799 இல் லார்டு க்லைவ் கைப்பற்றி சங்ககிரி துர்கத்தை தலைமை இடமாக கொண்டு வெள்ளையர்கள் அரசாங்கம் சார்பில் நிர்வாகம் நடந்தது. ஆங்கிலேயர்களின் இராணுவ படைத்தளமாக சேலம் விளங்கிற்று. அவர்கள் கட்டிய கோட்டை இங்குள்ளது, கோட்டைப்பகுதி தற்போது நகரின் மைய பகுதியாக உள்ளது.சி.வி. ராஜகோபாலசாரியார், சி. விஜயராகவாச்சாரி, ராமசாமி உடையார் ஆகியோர் இம்மாநகரத்தை சேர்ந்தவர்கள்

பொருளாதாரம்

சேலம் பல்வேறு கனிமவளங்கள் நிறைந்த இடம். இங்கு கிடைக்கும் இரும்பு தாதுவை பயன்படுத்தி இந்திய நடுவன் அரசின் செயில் (SAIL) நிறுவனம் சேலம் இரும்பாலையை அமைத்துள்ளது, இது தமிழ்நாட்டின் ஒரே உருக்கு ஆலை ஆகும்.
இந்தியாவில் மாக்னசைட் தாது பெருமளவு கிடைக்கும் இடங்களில் சேலமும் ஒன்று. டால்மியா & தமிழக அரசின் டான்மாங் (TANMAG - TAMILNADU MAGNESITE LIMITED) நிறுவனங்கள் மாக்னசைட் சுரங்கங்களை இங்கு அமைத்துள்ளன.

ஏற்காட்டிலிருந்து தெரியும் டான்மாங் மாக்னசைட் சுரங்கம்அதிக அளவில் வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழில் இங்கு நடைபெறுகிறது.இது தவிர நூற்பாலை, வாகன உதிரிபாக ஆலை, சேகோ (சவ்வரிசி) ஆலை ஆகியவையும் உள்ளன.
கோழிப் பண்ணைகளும் அதிக அளவில் உள்ளன. இங்கு உள்ள லீ-பஜார், மஞ்சள், கடலை, தேங்காய், அரிசி போன்ற வேளாண்மை சார்ந்த சந்தைக்குப் பெயர் பெற்றது. பொதுவாக மாம்பழத்துக்கு பெயர் போன நகரம் என்பதால் இங்கு அதுவும் பிரசித்தி.
விரைவில் இங்கு ஒரு தகவல் தொழில் நுட்ப பூங்கா அமையவிருக்கிறது.
சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு சேலத்திலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

ஆன்மீக தலங்கள்

சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் கோவில்களை காணலாம். இங்கு உள்ள முக்கிய கோயில்கள் சில,

சேலம் அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில்
சேலம் அருள்மிகு சுகவனேஸ்வர் திருக்கோயில்
சேலம் அருள்மிகு கோட்டை பெருமாள் கோவில்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்-இந்த கோவிலின் திருவிழா மாநகரின் முக்கிய திருவிழாவாகும்.
சேலம் செவ்வாய்ப் பேட்டை மாரியம்மன் கோவில்
சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில்
ஆடி மாதத்தில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கும் அதே சமயத்தில் சேலம் செவ்வாய்ப் பேட்டை மாரியம்மன் கோவிலின் திருவிழாவும் சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவும் நடக்கும்.

கந்தாஸ்ரமம்
சித்தர் கோவில்- இது சித்தர்கள் கட்டிய கோவில் என்றும், இந்த கோவில் அமைந்து உள்ள கஞ்சமலையில் சித்தர்கள் இன்றும் வசிப்பதாக இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.இங்கு ஊற்றுகளில் இருந்து வரும் தண்ணீரை உட் கொண்டால் பல நோய்கள் குணமாவதாக மக்கள் நம்புகின்றனர்
ஊத்துமலை - சேலத்தில் உள்ள ஆன்மீக தளங்களில் இதுவும் ஒன்று. இது சேலம் மாநகரத்தின் தெற்கு பகுதியில் அமைந்து உள்ளது. இங்கு அமைந்துள்ள முருகன் கோவில் புகழ் பெற்றது. மேலும் இங்கு சிவபெருமான், பெருமாள் மற்றும் சௌடேஸ்வரி அம்மன் கோவில்களும் அமைந்துள்ளன. இங்குள்ள கிணறுகள் எவ்வளவு நீர் இறைத்தாலும் வற்றாதவை.
குமரகிரி
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்

நன்றி மீண்டும் அடிப்படை அறிந்து சிந்தித்து நடப்போம் ......

கோயம்புத்தூர் மாநகராட்சி:

கோயம்புத்தூர் (Coimbatore)
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த பெரிய நகரமாகும். இதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் தலைமையிடமான இது தொழில் வளர்ச்சியிலும் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும் மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும். தொழில் முனைவோர் கூடுதலாக உள்ள நெசவு மற்றும் பொறியியல் தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களும் கோவை மாநகரை மையமாகக் கொண்டு இயங்குகின்றன.தொன்மையான கொங்குநாடு பகுதியைச் சேர்ந்த இந்த நகரம் இங்குள்ள ஆலைகளின் எண்ணிக்கையால் தென்னிந்திய மான்செஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது. நகரத்திலும் புறநகர்ப்பகுதிகளும் 2.4 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

பெயர்க்காரணம்
இப்பகுதியை பண்டைக்காலத்தில் கோசர்கள் ஆண்டதால் கோசன்புத்தூர்->கோவன்புத்தூர்->கோயம்புத்தூர் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வரலாறு

கோயம்புத்தூரின் துவக்க காலம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. காட்டுவாசிகளான இருளர்கள் முதன்மைக் குடிகளாக இருந்தனர். 9ஆம் நூற்றாண்டின் இடையில் இரண்டாவது சோழர் ஆட்சி எழுந்தபோது கோயம்புத்தூரை தன்னாட்சியின் கீழ் கொணர்ந்தது. அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியை பழங்குடி மக்கள்,குறிப்பாக கோசர்கள்ஆண்டு வந்தனர்.கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூர் என மருவியது.

கரும்பு வளர்ப்பு நிலையம்,கோயம்புத்தூர், 1927உரோமர்களின் வணிகத்திற்கும் கோயம்புத்தூர் மையமாக இருந்ததாகத் தெரிகிறது. 14ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தில்லி சுல்தான்களின் கீழான மதுரையைச் சேர்ந்த இசுலாமியர் ஆட்சிப் புரிந்தனர்.[சான்று தேவை]இவர்களது ஆட்சி விசயநகரப் பேரரசினால் முடிவுக்கு வந்தது. அவர்களது ஆட்சிக்காலத்தில் இப்பகுதியில் ஆந்திர, கர்நாடக வந்தேறிகள் குடிபெயர்ந்தனர்.1550களில் மதுரையில் விசயநகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில், உருவெடுத்தனர். 1700களில் மதுரை நாயக்கர்களுக்கும் மைசூர் மன்னர்களுக்குமிடையே கோயம்புத்தூரில் சண்டை நடைபெற்றன. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது.

1760களில் மைசூரின் சிங்காதனத்தை ஹைதர் அலி கைப்பற்றினார்.அவர் பிரித்தானியருக்கு எதிராக செயல்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதை தடுத்தார். இதனை அவரது வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அந்த நேரத்தில் கோயம்புத்தூரை பிரித்தானியர் தங்களின் மதராசு மாகாணத்தில் இணைத்துக் கொண்டனர். 1801ஆம் ஆண்டு கொங்குநாட்டு பாளையக்காரரான தீரன் சின்னமலை மலபார் மற்றும் மைசூர் படைகளின் ஆதரவுடன் பிரித்தானியருடன் போர் புரிந்தார். இப்போரின் முடிவில் 1804ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது. 1848ஆம் ஆண்டு நகராட்சி தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகரவைத் தலைவரானார். அவரால் 1862ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது.

1981ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்காநல்லூர் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது.

நிர்வாகம்

திவான்பகதூர் சாலை (டிபி ரோட்), ஆர் எஸ் புரம், கோவைகோவை ஓர் மாநகராட்சியாகும். தவிர, மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். மாநகராட்சிக்கு மேயர் தலைமை ஏற்கிறார். இவருக்குத் துணையாக கவுன்சிலர்களும் துணை மேயரும் உள்ளனர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தவிர அரசுப்பணி சேவையைச் சேர்ந்த மாநகராட்சி ஆணையர் வழக்கமான ஆட்சிப்பணியை மாநகராட்சி அவையின் வழிகாட்டுதலின்படி நடத்துகிறார். மாவட்ட நிர்வாகத்தை மாவட்ட ஆட்சியர் ஏற்கிறார். மாவட்ட நீதிமன்றம் கோயம்புத்தூரின் நீதி நிர்வாகத்தை மேற்பார்வையிடுகிறது. மாநிலத்திலேயே மிகக் கூடுதலான வருவாயை ஈட்டிக் கொடுத்தாலும் நகரத்தின் கட்டுமானத் தேவைகளுக்கான நிதி மாநில அரசிடமிருந்து போதுமான அளவு கிடைப்பதில்லை என்ற குறை உள்ளது.

முக்கிய இடங்கள்

மருதமலைக் கோவில்பேரூர் பட்டீஸ்வரஸ்வாமி கோவில்: பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். சிவன், பட்டீஸ்வரனாகவும், பார்வதி பச்சை நாயகியாகவும் எழுந்தருளியுள்ளார்கள். கரிகால் சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோவில் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கனகசபை மண்டபத்திலும், இதர மண்டபங்களிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் காணத்தக்கவை. பேரூர் ஆதீனமும் இங்கு அமைந்துள்ளது.
மருதமலை முருகன் கோவில்: நகரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் சிறிய குன்றின் மீது அமைந்துள்ள கோவில் முருகனின் ஆறு படை வீடுகளுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெற்ற கோவிலாகும்.
கோனியம்மன் திருக்கோவில் கோவையின் மற்றுமொரு புகழ்பெற்ற கோவிலாகும். கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டில் ‘இருளர்கள்’ கட்டியதாக வரலாறு தெரிவிக்கிறது.சேரர்களின் படையெடுப்பிற்கு பயந்து கோட்டை கட்டி கோனியம்மனை காவல்தெய்வமாக பிற்காலத்தில் ஆண்ட இளங்கோசர்கள் வழிபட்டனர். கோவையின் மையப்பகுதி மக்கள் இன்றும் திருவிழாவின் போது கோவிலில் தீச்சட்டி ஏற்றியபிறகு ஊரை விட்டு செல்வதில்லை. பிற்காலத்தில் மைசூர் அரசர்கள் இக்கோவிலை புனரமைத்து கோனியம்மனை தேவி மகிசாசுரமர்த்தினியாக வழிபட்டதாக தெரிகிறது.
ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில்: நகர் மத்தியில் வைசியாள் தெருவில் அமைந்துள்ளது. நவராத்திரி உற்சவங்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.
கோவைக் குற்றாலம்: கோவையிலிருந்து 37 கி.மீ. தொலைவில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில், சிறுவாணி நதியில் அமைந்துள்ளது. வனப்பகுதி என்பதால் மாலை 5 மணிக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை.
வ.உ.சி. பூங்கா: வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவாக அமைக்கப்பட்ட பூங்கா. சிறு மிருகக்காட்சி சாலை, சிறுவர் ரயில், சிறுவர் விளையாட்டுக் கருவிகள் ஆகியவை உள்ளன. அருகிலுள்ள விளையாட்டரங்கில் நடக்கும் கால்பந்து போட்டிகளும் அரசியல் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் கோவையின் உயிரோட்டமாக விளங்குகின்றன.



அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

ஊட்டி - (90 கி.மீ. வடமேற்கு): மிகப் பிரபல மலை வாசஸ்தலம். அதிக சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்கள் பெருக்கத்தால் திணறினாலும் இன்றும் எல்லோரையும் ஈர்க்கிறது.
குன்னூர்: ஊட்டி செல்லும் வழியில் உள்ள மலை வாழிடம். இங்குள்ள சிம்ஸ் பூங்கா புகழ்பெற்றது.
முதுமலை வனவிலங்கு காப்பகம்: ஊட்டி வழியாக தமிழக எல்லையில் உள்ள பெரிய சரணாலயம் இதுவாகும்.
மலம்புழா அணை: பாலக்காடு அருகில் உள்ளது.
ஆனைமலை: பழனி - (100 கி.மீ., தெற்கு): குன்றின் மீதமைந்த முருகன் கோவில். ஆறு படை வீடுகளில் ஒன்று.
அமராவதி அணை: முதலை பண்ணை
திருமூர்த்தி அணை:பஞ்சலிங்கம் அருவி
ஆழியாறு அணை: குரங்கு அருவி
டாப் ஸ்லிப் ( இந்திரா காந்தி வன விலங்கு சரணாலயம்)
வால்பாறை நல்ல மலை வாசஸ்தலம்

நன்றி மீண்டும் அடிப்படை அறிந்து சிந்தித்து நடப்போம் ......

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி:

திருச்சிராப்பள்ளி

(ஆங்கிலம்:Tiruchirappalli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது திருச்சிராப்பள்ளி ; இது ஒரு மாவட்டத் தலைநகர் ஆகும்; மேலும் இது ஒரு [மாநகராட்சி] எனும் தகுதிபெற்றது.திருச்சிராப்பள்ளி தமிழகத்தில் உள்ள நான்கு முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி காவிரி நதிக் கரையில் அமைந்துள்ளது. பொதுவாகத் திருச்சிராப்பள்ளியைத் 'திருச்சி' என்று அழைப்பார்கள்.திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) - பள்ளி, அதாவது சிராய் பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேலேயே அமைந்து உள்ளது.தமிழகத்தின் மையப்பகுதியில் இருப்பதால் இது ஒரு வர்த்தக மையமாகவும் திகழ்கிறது.

பெயர்க் காரணம்

'திரிசிரன்' என்ற பெயருடைய அரக்கன், மூன்று சிரங்களைக் கொண்டவன். அவ்வரக்கன் இவ்வூரில் பூசித்ததனால் திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது. இது தென்னாட்டுக் கைலை மலை என்றும் புகழப்படுவது. திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் 'சிரா' என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. சிரா துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்குப் பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது.

நகர நிர்வாகம்

திருச்சிராப்பள்ளி மாநகரம் 60 வார்டுகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் 15 வார்டுகள் வீதம் பொன்மலை, கோ. அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம் என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மேயர் மற்றும் ஆணையாரால் நிர்வகிக்கபடுகிறது.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்கிறது.

திருத்தலங்கள்

அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில்,மலைக்கோட்டை, திருச்சி
அருள்மிகு உச்சிப் பிள்ளையார் திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்
அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், திருவரங்கம்
அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர்
அருள்மிகு சம்புகேசுவரர் திருக்கோயில், திருவானைக்கா
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், வயலூர்
அருள்மிகு பஞ்சவர்ண சுவாமி திருக்கோயில், உறையூர்
அருள்மிகு ஆம்ரனேஸ்வர சுவாமி திருக்கோயில் மாந்துறை

சுற்றுலாத் தலங்கள்
மலைக்கோட்டை
ஸ்ரீரங்கம்
திருவானைக்கோவில்
முக்கொம்பு
கல்லணை
வயலூர் முருகன் கோயில்
கங்கை கொண்ட சோழபுரம்


நன்றி மீண்டும் அடிப்படை அறிந்து சிந்தித்து நடப்போம் ......

சென்னை மாநகராட்சி:

சென்னை (chennai)
தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் (Madras) என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத்துறையின் தாயகம். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

சென்னையின் பொருளாதாரம் பலத்தரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது . ஊர்தி, தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது. மேலும் ஊர்தி மற்றும் ஊர்திகளின் உதிரி பாகங்கள் உற்பத்தியிலும் நாட்டின் 35 விழுக்காடு சென்னையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில உள்ளது.

வரலாற்றில் சென்னை

சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்த பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.சென்னையில் அமைந்துள்ள‌ புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள புனித மேரி தேவாலையம்சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. புனித தாமஸ் இங்கு கி.பி. 52 முதல் 70 வரை இங்கு போதித்ததாக கருதப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர், 1522ஆம் ஆண்டு சாந்தோம் என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது.

1639ம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது.ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.1522ம் ஆண்டில் இங்கு வந்த போர்ச்சுகீசியர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்த பகுதி போர்ச்சுகீசியர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612ம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688ம் ஆண்டில் சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது ராணுவ நடவடிக்கைகளுக்கான தளமாக இதை பயன்படுத்தினார். பின்னர் இது பிரிட்டிஷ் அரசின் இந்திய காலனி பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது. 1746ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது. 1749ம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969ம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996ம் ஆண்டு சென்னை மாற்றம் செய்யப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956ஆம் வருடம் மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது. 1996ஆம் வருடம் தமிழக அரசாங்கம் மதறாஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் சென்னை என மாற்றம் செய்யப்பட்டது. வெங்கடபதி சகோதரர்களரிடம் இருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தைபிரிட்டிஷார் வாங்கியதால், தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னப்பட்டணம் என அழைக்கவேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனை சுற்றிய பகுதிகளும் சென்னை என அழைக்கப்படுகிறது என்று கருதப்படுகிறது.டிசம்பர் 2004 சுனாமி தாக்கிய இடங்களில் சென்னையும் ஒன்றாகும்.


சென்னை மாநகரின் நிர்வாகம்

சென்னை மாநகராட்சியின் பொறுப்பில் உள்ளது. மாநகராட்சியின் தலைவர் மேயர் (மாநகரத் தந்தை) என்று அழைக்கப்படுகிறார். இவர் தவிர 155 வட்டங்களிலிருந்து 155 மாமன்றஉறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தற்போதைய மேயர் மா. சுப்பிரமணியம் அவர்களும் துணைமேயர் சத்யபாமா அவர்களும்அக்டோபர் 29, 2006 முதல் இப்பதவியை வகித்து வருகிறார்கள். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றது.சென்னை மாநகராட்சி 1688-ல் துவங்கப்பட்டது. இது இந்தியாவில் மட்டுமின்றி இங்கிலாந்து அல்லாத காமன் வெல்த் நாடுகளின் மாநகராட்சியைக் காட்டிலும் பழமையானது
தமிழகத் தமைச்செயலகம் இங்கு உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்தது பின் மார்ச் 13 2010 அன்று ஓமந்துரார் அரசினர் தோட்டத்தில் 400 கோடிகளுக்கு மேல் செலவில் கட்டப்பட்ட பசுமை கட்டத்தில் மாற்றப்பட்டுள்ளது. இது உலகின் முதல் பசுமை சட்டமன்ற கட்டடமாகும். சென்னையில் 18 தமிழக சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. வட சென்னையில் திருவொற்றியூர்,ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க. நகர் (தனி), இராயபுரம் ஆகிய தொகுதிகளும், மத்திய சென்னையில் வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய தொகுதிகளும், தென் சென்னையில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர்,மைலாப்பூர்,வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளும் உள்ளன.

இந்திய பாராளுமன்றத்தின் மூன்று தொகுதிகள் சென்னையில் உள்ளன. அவை வட சென்னை, மத்திய சென்னை , தென் சென்னை ஆகியவை.தமிழகம், மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் உயர்நீதிமன்றம் சென்னையில் உள்ளது.தமிழக காவல் துறையின் பிரிவான சென்னை மாநகர காவல்துறை சென்னையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கிறது. சென்னை மாநகர் முப்பத்தாறு காவல் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 121 காவல் நிலையங்கள் சென்னை மாநகரப் பகுதியில் உள்ளன.

கலாச்சாரம்

எழும்பூரில் உள்ள அரசு அருங்காடசியகம், Indo-Saracenic கட்டிடக்கலைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்; ஹென்றி இர்வினால் வடிவமைக்கப் பட்டு, 1896ல் கட்டப்பட்டது.சென்னையில் வாழும் பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சென்னையின் கலாசாரம் விளங்குகிறது. நவீனமும் பாரம்பரியமும் இங்கு கலந்து காணப்படுகிறது.
சென்னையில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் முழுவதும் இசைத் திருவிழா இசை ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தினந்தோறும் சென்னையின் பல இடங்களில் கர்நாடக சங்கீத கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. சென்னை அடையாறில் உள்ள கலாக்ஷேத்ராவில் உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்களும் வந்து பரதநாட்டியமும் மற்ற பாரம்பரியக் கலைகளும் பயின்று செல்கின்றனர்.

தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்கள் வருடந்தோறும் அரங்கேற்றப்படுகின்றன. சென்னையிலும் சுற்றுப்புறங்களிலும் உள்ள கல்லூரிகளில் வருடந்தோறும் கலைத்திருவிழாக்கள் மாணவர்களால் நடத்தப் படுகின்றன.சென்னை பூங்கா நகரில் அமைந்துள்ள 'விக்டோரியா பப்ளிக் ஹால்்'.சென்னையில் உள்ள கோலிவுட் என்றழைக்கப் படும் தமிழ் திரைப்படத் துறை இந்தியாவில் பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக மிகப் பெரியது. தமிழ் திரைப்படப் பாடல்கள் சென்னை மக்களால் மிகவும் ரசிக்கப் படுகிறது. தனியார் தொலைக்காட்சிகளிலும் வானொலி அலைவரிசைகளிலும் திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகள் அதிகம் ஒலிபரப்பப் படுவதைக் காணலாம்.இட்லி, வடை, தோசை போன்ற தென்னிந்திய உணவு வகைகளும் சமீபத்தில் மேற்கத்திய நாகரிகத்தின் பாதிப்பால் பீட்ஸா, பர்கர் போன்ற உணவு வகைகளும் சென்னையில் பிரபலமாய் உள்ளன.சென்னையில் மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மற்றும் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் போன்ற பல பழங்கால கோயில்கள் உள்ளன. புனித ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் கட்டிடம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் அரசு அருங்காட்சியகம் போன்று ஆங்கிலேயரின் பாதிப்பில் உருவான கட்டடங்களையும் அதிகமாகக் காணலாம். சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியால் பல நவீன கட்டடங்கள் பெருகி வருகின்றன.

பொருளாதாரம்

சென்னை தரமணியிலுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் முதலே தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாக சென்னை விளங்கி வருகிறது. பல இந்திய நிறுவனங்களின் கிளைகள் சென்னையில் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், தமிழகத்தின் தலைநகராகவும் சென்னை விளங்குவதால், பல தேசிய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் சென்னையில் உள்ளன.1990களிலிருந்து, சென்னை இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. தென் சென்னையில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. தரமணியில் உள்ள டைடெல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும். மேலும் சில த.தொ பூங்காக்களும் நகரங்களும் கட்டப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் வாகன உற்பத்தியில் சென்னை முதலிடம் வகிக்கிறது. அம்பத்தூர் மற்றும் பாடி பகுதிகளில் பல தொழிற்சாலைகள் உள்ளன. டி.வி.எஸ் (TVS), அசோக் லெய்லாண்ட், ஹையுண்டாய் (Hyundai), போர்டு (Ford), மிட்சுபிஷி (Mitsubishi), டி.ஐ, எம்.ஆர்.எஃப், பி.எம்.டபிள்யூ (BMW) போன்ற நிறுவனங்களின் தொழிற்சாலைகள் சென்னையில் உள்ளன. சென்னையை அடுத்த ஆவடியில் இந்திய ராணுவம் தொடர்பான பல நிறுவனங்களின் கிளைகள் உள்ளன. இந்தியாவின் முக்கிய போர் பீரங்கியான அர்ஜுன் இங்கு தயாரிக்கப்படுகிறது.

போக்குவரத்து

சென்னை போக்குவரத்து வரைபடம்சென்னை விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற நகரங்களுக்கும் தெற்கு, மற்றும் தென்கிழக்காசியா, வளைகுடா நாடுகள், ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்கும் நல்ல விமானப் போக்குவரத்து உண்டு. சென்னை விமான நிலையம், இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் சரக்கு விமான நிலையமாகும்.
சென்னை துறைமுகம் இந்தியாவில் முக்கிய துறைமுகங்களுள் ஒன்று. மேலும் சென்னையின் வடக்கில் உள்ள எண்ணூர் துறைமுகத்தில் நிலக்கரி, தாதுக்கள் போன்ற பொருட்களின் போக்குவரத்து நடைபெறுகிறது.சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூர் ஆகியவை சென்னையின் இரு முக்கிய ரயில் நிலையங்கள். சென்னை சென்ட்ரல், சென்னையின் வடக்கு, மற்றும் மேற்குப்பகுதிகளுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. சென்னை எழும்பூர், மற்ற தமிழக நகரங்களுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது.


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்சென்னை புறநகர் ரயில்வே மூன்று மார்க்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - தாம்பரம் ஆகியவை. இவை தவிர சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.
சென்னை நகரிலிருந்து இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு சென்று வர நல்ல சாலை வசதிகள் உள்ளன. ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் சென்னையை கொல்கத்தா, பெங்களூர், திருச்சி, பாண்டிச்சேரி, திருவள்ளூர் ஆகிய நகரங்களுடன் இணைக்கின்றன. சென்னை கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும்.
சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களையும் இணைக்கும் பொதுப் போக்குவரத்து வசதியாக சென்னை மாநகரப் பேருந்து செயல்பட்டு வருகிறது. சுமார் 2773 பேருந்துகள் 375 வழித்தடங்கள் மூலம் சென்னை நகரின் பகுதிகளை இணைக்கின்றன. இது தவிர பல்லாயிரக்கணக்கான ஆட்டோக்களும் நகரத்தில் ஓடுகின்றன.

விளையாட்டு

சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம்மற்ற இந்திய நகரங்களைப் போல சென்னையிலும் கிரிக்கெட்டே பிரபலமான விளையாட்டாகும். சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் 50000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இந்திய கிரிக்கெட் அணி இங்கு தான் முதன் முதலாக டெஸ்ட் போட்டியை வென்றது. ஐ.ஐ.டி வளாகத்திலுள்ள கெம்பிளாஸ்ட் கிரிக்கெட் மைதானம் மற்றொரு முக்கிய மைதானம்.நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் அரங்கத்தில் வருடந்தோறும் ஜனவரி மாதம் சர்வதேச ஏ.டி.பி பந்தயமான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபறுகின்றன. விஜய் அமிர்தராஜ், ராமநாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன் போன்று சர்வதேச போட்டிகளில் முத்திரை பதித்த பல இந்திய ஆட்டக்காரர்கள் சென்னையைச் சேர்ந்தவர்களே.எழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம் 4000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இது செயற்கை தரை கொண்டது. 1995ஆம் ஆண்டு இங்கு சாம்பியன் கோப்பை பந்தயத்தொடர் நடந்தது. 2005 டிசம்பரிலும் இப்போட்டிகள் இங்கு நடைபெறும்.

ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் கால்பந்து, தடகளப்போட்டிகள் போன்றவை நடைபெறுகின்றன. இதன் வளாகத்தில் உள்ள உள்ளக விளையாட்டரங்கில் கூடைப்பந்து, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் போன்ற போட்டிகள் நடத்தும் வசதிகள் உள்ளன. 1996 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது.மூன்று கோல்ஃப் விளையாடும் இடங்கள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் மோட்டர் பந்தய போட்டிகள் நடைபெறும் களம் உள்ளது.

உயிரியல் பூங்காக்கள்

அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் உள்ள வெள்ளை புலிகிண்டியில் உள்ள உயிரியல் பூங்காவில் மான்கள், பாம்புகள், ஆமைகள் ஆகியவை உள்ளன. ஆளுனர் வசிக்கும் ராஜ் பவனிலும், அதை ஒட்டியுள்ள ஐ.ஐ.டி வளாகத்திலும் குரங்குகளும் மான்களும் துள்ளி விளையாடுவதைக் காணலாம். வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 80 மிருக வகைகள் உள்ளன. சென்னையின் தெற்கில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முதலைப்பண்ணை உள்ளது. இங்கு முதலைகள், ஆமைகள், பாம்புகள் ஆகியவை வளர்க்கப்படுவதுடன் ஆராய்ச்சியும் நடைபெறுகிறது.


கல்வி
சென்னை ராயப்பேட்டையிலுள்ள புதுக்கல்லூரி

சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம்சென்னையில் உள்ள ஐ.ஐ.டியும் (Indian Institute of Technology-இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி), அதன் எதிரில் உள்ள அண்ணா பல்கலைக்கழகமும் , இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுள் சிலவாகும். இவை தவிர பல தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ளன.

சென்னை பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் பல கலை, அறிவியல் கல்லூரிகள் சென்னையில் உள்ளன. அவற்றுள் சென்னை மாநிலக் கல்லூரி, சென்னை கிறித்துவ கல்லூரி, லயோலா கல்லூரி, புதுக்கல்லூரி, வைஷ்ணவ் கல்லூரி, விவேகானந்தா கல்லூரி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இது தவிர என்.ஐ.எஃப்.டி (National Institute of Fashion Technology-தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி), ஏ.சி.ஜெ (Asian College of Journalism-ஆசிய இதழியல் கல்லூரி), Madras School of Social Work (மெட்ராஸ் சமூகப்பணி கல்லூரி) போன்ற கல்வி நிறுவனங்களும் உள்ளன.
வருடந்தோறும் பள்ளி இறுதித் தேர்வுகளில் இந்தியாவிலேயே சென்னை மாணாக்கர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதைக் காணலாம்.சென்னையில் உள்ள கன்னிமரா பொது நூலகம் தேசிய களஞ்சிய நூலகங்களுள் (National Depository Libraries) ஒன்று.


தகவல் தொடர்பு

தென்கிழக்காசிய கண்ணாடி நூலிழை மையங்களுள் ஒன்றான சென்னை இந்தியாவில் தகவல் தொடர்பில் முதலிடம் வகிக்கிறது. இங்கு பி.எஸ்.என்.எல், டாடா இண்டிகாம், ரிலையன்ஸ், ஏர்டெல் ஆகிய தொலைபேசி நிறுவனங்கள் தொலைபேசி இணைப்பு அளிக்கின்றன. பி.எஸ்.என்.எல், ஹட்ச், ஏர்டெல், டாடா, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் நகர்பேசி இணைப்பு அளிக்கின்றன. இது தவிர இந்நிறுவனங்கள் அகலப்பாட்டைஇணைய இணைப்புகளும் அளிக்கின்றன.

அனைத்து தேசிய, அனைத்துலக தொலைக்காட்சிகளும் சென்னையில் தெரிகின்றன. சன் டிவி,சன் மியூசிக்,சன் நியூஸ்,கே டிவி, மக்கள் தொலைக்காட்சி, கலைஞர் டிவி,கலைஞர் நியூஸ்,ராஜ் டிவி,ராஜ் நியூஸ்,ராஜ் டிஜிடல் ப்ளஸ், ஸ்டார் விஜய், ஜெயா டிவி, ஜெயா Max, ஜெயா Plus,Isai Aruvi, எஸ். எஸ் மியூசிக், தூர்தர்ஷன் பொதிகை ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகள் அதிகம் பார்க்கப்படுகின்றன. இரண்டு ஏ.எம், ஒன்பது பண்பலை சூரியன் பண்பலை,ரேடியோ மிர்ச்சி, ரேடியோ சிட்டி, ஹலோ, ரேடியோ ஒன், அஹா, பிக்,ரெயின்போ பண்பலை, எப் எம் கோல்டு வானொலி அலைவரிசைகள் சென்னையிலிருந்து ஒலிபரப்பப் படுகிறது.

தினகரன்,தமிழ் முரசு, தினத்தந்தி, தின மலர், தினமணி,மாலை மலர் ஆகிய தமிழ் செய்தித் தாள்களும், தி இந்து, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் கிரானிக்கிள் ஆகிய ஆங்கில செய்தித்தாள்களும் சென்னையில் அச்சிடப்படுகின்றன. ஆனந்த விகடன், குமுதம், கல்கி, குங்குமம் புதிய தலைமுறை ஆகியவை இங்கு அச்சிடப்படும் முக்கிய வார இதழ்கள்.


மக்கள்

பரங்கி மலையிலிருந்து காணப்படும் சென்னை மாநகரம்சென்னையின் மக்கள் தொகை சுமார் 7.45 மில்லியன் ஆகும். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 24,418 மக்கள் வசிக்கின்றனர். ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண்கள் உள்ளனர். கல்வியறிவு விகிதம் 80.14%. நகரின் 25% மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர்.

சென்னையில் தமிழ் மொழி பேசுவோரே பெரும்பான்மை, இதைத்தவிர ஆங்கிலம், தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, மார்வாரி, வங்காளி, பஞ்சாபி , ஆகியவை பயனில் உள்ளன. அனால் தமிழிற்கு அடுத்த படியாக, இந்திய மொழிகளில், தெலுங்கே அதிக அளவில் பேச படுகிறது.அலுவலகங்களிலும் கல்விக் கூடங்களிலும் ஆங்கிலம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலோ இந்திய மக்களும், மற்ற நாட்டவரும் சிறு அளவில் காணப்படுகின்றனர்.

இங்கு பேசப்படும் பல மொழிகளின் கலவையில் உருவான மெட்ராஸ் பாஷை உள்ளூர் மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களாலும், ஆட்டோ மற்றும் லாரி ஓட்டுனர்கள் போன்றோராலும் ஒயிலாகப் பேசப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத இந்த மொழி சிலரால் கொச்சை மொழியாக கருதப்படுகிறது.

நன்றி மீண்டும் அடிப்படை அறிந்து சிந்தித்து நடப்போம் ......

மதுரை மாநகராட்சி:

இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான மதுரை மாவட்டத்தின் தலைநகராக உள்ள மதுரை உள்ளாட்சி அமைப்பில் ஒரு மாநகராட்சியாகும். தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான மதுரை 1971 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியிலிருந்து மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அப்போது மொத்தம் 13 பஞ்சாயத்து பகுதிகளைச் சேர்ந்து மதுரை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. வைகை ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நகரமாகும். தமிழ் மொழியின் பிறப்பிடமாக மதுரை கூறப்படுகின்றது. தென்னிந்திய திருத்தலங்களின் நுழைவு வாயிலாகவும், உலகப்புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ள இடமாக மதுரை விளங்குகின்றது.

மதுரை (ஆங்கிலம்:Madurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரைஉள்ளாட்சி அமைப்பில் ஒரு மாநகராட்சி ஆகும். மதுரை நகரம் 2500 ஆண்டுகள் பழமையானது.மதுரை வைகை ஆற்ற்ங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாநகர், கூடல் நகர், மதுரையம்பதி, கிழக்கின் ஏதென்ஸ் என்பன மதுரையின் வேறு பல பெயர்களாகும். இந்திய துணைகண்டத்தில் ஒரு தொன்மையான வரலாறைக் கொண்ட நகரமாகும். பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாகவும் விளங்கியது. சங்க காலத்தில் தமிழ் சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடையது.

மதுரை மாநகராட்சி வரலாறு

தென்னிந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கிய இடம் மதுரைக்கு உண்டு. முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல சாதனைகளையும் சோதனைகளையும் தாண்டி வந்தது இம்மதுரை நகரம். பராசக்தியின் வடிவமான அன்னை மீனாட்சி பிறந்து, வளர்ந்து, ஆட்சிசெய்து, தெய்வமான இடமாகக் கருதப்படும் மதுரை, இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களின் மிக முக்கிய சக்திஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன. தமிழ் வளர்ச்சிக்குத் தனியே சங்கம் வைத்து வளர்த்த பெருமையும் இந்த நகரத்துக்கு உண்டு என்று பழமையான வரலாறுகள் தெரிவிக்கின்றன. மதுரை தமிழின் ஐம்ப்ருங்காப்பியங்களின் ஒன்றான சிலப்பதிகாரம் கதையின்படி அதன் நாயகி கண்ணகியால் ஒரு முறை எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
1866: மதுரை நகராட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு. அப்போதைய மக்கள் தொகை 41,601. நகரின் பரப்பளவு 2.60 சதுர கிலோமீட்டர்.
1882: நகராட்சியில் புதிதாக கமிஷனர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. முதலாவது கமிஷனர் அதே ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி பதவியேற்றார்.
1885: கமிஷனர் பதவி கவுன்சிலர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பல கவுன்சிலர்கள் நியமிக்கப்பட்டனர். கமிஷனர்களின் தலைவர் பதவி பிரசிடென்ட்என்ற பெயரிலிருந்து சேர்மன் என்று மாற்றப்பட்டது. முதலாவது சேர்மனாக ராவ் பகதூர் ராமசுப்பய்யர் என்பவர் பதவியேற்றார்.
1892: கவுன்சிலர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்த்தப்பட்டது. இவர்களில் 6 பேரை அரசே நியமிக்கும்.
1921: கவுன்சிலர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்த்தப்பட்டது.
1931: அரசியல் காரணங்களுக்காக நகராட்சி கவுன்சில் கலைக்கப்பட்டது. மாவட்ட உதவி கலெக்டர் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
1933: மீண்டும் அதே கவுன்சில் செயல்பட அரசு அனுமதித்தது.
1942: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆதரித்ததற்காக கவுன்சில் மீண்டும் கலைக்கப்பட்டது.
1943: கவுன்சில் முழுவதும் மாற்றியமைக்கப்பட்டது. கவுன்சிலர்கள் அனைவரையும் அரசே நியமிக்கும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது.
1948: சுதந்திரத்திற்குப் பின் முதல் முறையாக கவுன்சிலுக்குத் தேர்தல் நடந்தது. ஜனவரி மாதம் 3-ம் தேதி முதல் இந்த தேர்ந்தெடுக்கப்பட் நகராட்சிசெயல்படத் துவங்கியது. கவுன்சிலர்கள் அனைவரும் 1969 வரை செயல்பட்டனர்.
1969: நகராட்சிக்கு தேர்தல் நடந்தது. மொத்தம் 48 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் பெண்கள், மூன்று பேர் தாழ்த்தப்பட்டபிரிவைச் சேர்ந்தவர்கள்.
1971: மதுரை நகராட்சி, மாநகராட்சியாக மேம்பாடு செய்யப்பட்டது. நகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் மாநகராட்சி கவுன்சிலர்களாக செயல்பட அனுமதிக்கப்பட்டனர். மதுரை மாநகராட்சியின் முதல் மேயராக இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்த எஸ்.முத்து தேர்வு செய்யப்பட்டார். பி.ஆனந்தம் துணை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1974: மேலும் 13 பஞ்சாயத்துக்கள் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. நகரிலுள்ள வார்டுகள் 65 ஆக மாற்றம் செய்யப்பட்டன.
1978: மாநகராட்சிக்கு முதல் முறையாக தேர்தல் நடந்தது. 65 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 5 பேர் பெண்கள், 4 பேர்தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
1991: வார்டு சீரமைப்பு கமிட்டியின் பரிந்துரைகளின்படி மதுரை மாநகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கை 72 ஆக மாற்றப்பட்டது.
1996: மதுரை மாநகராட்சிக்கு இரண்டாவது முறையாக தேர்தல் நடந்தது. மேயராக கோனார் சமுதாயத்தைச் சேர்ந்த ப.குழந்தைவேலு (தி.மு.க) தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை மேயராக மிசா.பாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.
2001: மதுரை மாநகராட்சிக்கு மூன்றாவது முறையாக தேர்தல் நடந்தது. மேயராக திமுகவைச் சேர்ந்த செ.ராமச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2006: மதுரை மாநகராட்சிக்கு நான்காவது முறையாக தேர்தல் நடந்தது. மேயராக பிள்ளைமார் சேர்ந்த தேன்மொழி கோபிநாதன் (தி.மு.க) தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை மேயராக பி.எம்.மன்னன் தேர்வு செய்யப்பட்டார்.

மாநகராட்சி அமைப்பு
மதுரை மாநகராட்சி இரண்டு மாவட்டப் பிரிவுகளாக செயல்படுகின்றது. ஒன்று தீர்மானித்து ஆய்ந்து செயல் படுகின்ற பிரிவு (ஆய்வுக் குழு) இன்னொன்று செயலாட்சி புரிகின்ற பிரிவு என இரு பிரிவுகளாக பிரிந்து செயல்படுகின்றன. செயலாட்சியர் பிரிவில் நகராட்சி உறுப்பினர்கள், நகராட்சித் தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள் இதில் அடங்குவர்.


சுற்றுலா

மீனாட்சி அம்மன் கோயில் குளம்மதுரை மாநகரில் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம், காந்தி அருங்காட்சியகம் என்று சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அம்சங்கள் இந்நகரில் நிறைய இருக்கிறது. தூங்கா நகரமான மதுரைக்கு அருகில் அழகர்கோயில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் போன்ற இந்துமதத்தின் சிறப்புமிக்க சில தலங்கள் அமைந்துள்ள ஊர்கள் உள்ளன. இது தவிர அணடை மாவட்டங்களான [[சிவகங்கை] மாவட்டத்தில் காளையார் கோயில், ஆவுடையார்கோயில்,புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டத்தில்இராமேஸ்வரம், திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், தேனி மாவட்டத்தில் சுருளி நீர்வீழ்ச்சி,வைகை அணை,தேனி மாவட்டத்தின் அருகில் கேரளமாநில எல்லையில் உள்ள தேக்கடிமற்றும் திருநெல்வேலி,தூத்துக்குடி என்று சரித்திர மற்றும் பொழுதுபோக்கு தலங்களுக்கு செல்ல இங்கிருந்து போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

நன்றி மீண்டும் அடிப்படை அறிந்து சிந்தித்து நடப்போம் ......

மாநகராட்சி ஒரு விளக்கம்:(திருநெல்வேலி)

முதலில் தலைநகரை விட்டுவிட்டு திருநெல்வேலிக்கு முண்ணுரிமை என்று பார்க்கிறீர்களா,

தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை மாநகரம்.அதற்கு முக்கியதுவம் கொடுப்பதைவிட நான் பிறந்த நெல்லை தென்மேற்குசீமையின் பெருமைக்கு முண்ணுரிமை கொடுப்பதை பெருமையாக நினைத்து மேலும் தொடர்கிறேன்.

பெயர்க் காரணம்
இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி எனப்படுகிறது என்ற கருத்து உள்ளது.ஒரு ஏழை விவசாயி இறைவனுக்கு படைக்க நெல்லை காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரென பெய்ய, சிவன்(நெல்லையப்பர்), நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர், என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பெயர்.

திருநெல்வேலி மாநகராட்சி

தென் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் தெற்குப் பகுதி மாவட்டமான திருநெல்வேலியின் நகர் பகுதியாகும். இது ஆரம்பிக்கப்பட்டுது 1994ஆம் ஆண்டு. திருச்சி , சேலம் ஆகியவை திருநெல்வேலி மாநகராட்சியின் வயதை ஒத்தவை.பல சிறப்புகளுக்குப் பெயர் கொண்ட மாநகராட்சிப் பகுதியாகும். இந்த மாவட்டத்தில் தான் பல இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பிறந்த மாவட்டமாகும். வீரபாண்டிய கட்டபொம்மன், வாஞ்சி நாதன் மற்றும் விடுதலை புரட்சியாளர்களான வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா மற்றும் பலரின் பிறப்பிடமாகக் கொண்டுள்ளது.டிவிஎஸ் சுந்தரம், சிம்சன், ஏசான், இந்தியா சிமென்ட்ஸ்பல தொழிலதிபர்களும் இம்மாவட்டத்தையே பிறப்பிடமாக கொண்டுள்ளனர்.திருநெல்வேலி அல்வாத் தயாரிப்புக்கு பிரசித்திப் பெற்ற இடமாகும். இதன் இது அல்வா நகரம் என்ற இடுகுறிப் பெயருடன் விளங்குகின்றது.
இம்மாநகராட்சி மூன்றுப் பெரிய நகராட்சிகளை ஒன்றிணைக்கின்றது. அதாவது திருநெல்வேலி, பாளயங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் மற்றும் இதர ஊராட்சிகளையும் இணைக்கின்றது.


திருநெல்வேலி மாவட்டம்

இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று திருநெல்வேலி மாவட்டம் . இம்மாவட்டத்தின் தலைநகரம் திருநெல்வேலி ஆகும்.

"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும். 1790 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி(1 September 1790)[1][2] திருநெல்வேலி மாவட்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனியால்(இங்கிலாந்து அரசாங்கம்) உருவாக்கப்பட்டது.(அன்றைய தினத்தில் திருநெல்வேலி மாவட்டத்துடன் இன்றைய தூத்துக்குடி மாவட்டமும், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளும் இருந்தன.) செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி திருநெல்வேலி தினமாக கொண்டாடப்படுகிறது.

வருவாய் கோட்டங்கள்

திருநெல்வேலி
தென்காசி
சேரன்மகாதேவி

வட்டங்கள்

திருநெல்வேலி
பாளையங்கோட்டை
சங்கரன்கோவில்
அம்பாசமுத்திரம்
தென்காசி
சிவகிரி
செங்கோட்டை
நாங்குநேரி
இராதாபுரம்
ஆலங்குளம்
வீரகேளம்புதூர்

நகராட்சிகள்

முதல் நிலை நகராட்சிகள்
சங்கரன்கோவில்
தென்காசி
கடையநல்லூர்
இரண்டாம் நிலை நகராட்சிகள்
செங்கோட்டை
புளியங்குடி
மூன்றாம் நிலை நகராட்சிகள்
அம்பாசமுத்திரம்
விக்கிரமசிங்கபுரம்

இந்து சமயக் கோயில்கள்
தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம், சிவசைல மகாத்மியம், திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம், திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம் முன்னோர்கள் வழிபட்டுள்ளனர்.

காந்திமதி நெல்லையப்பர் கோவில்
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தான் [3].இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் என்று இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

சபை சிவாலயங்கள்
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்து உள்ளது. இந்த ஐம்பெரும் மன்றங்களில் (சபைகள்) இரண்டு மன்றங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சித்ர சபை - திருக்குற்றாலம்
தாமிர சபை- திருநெல்வேலி

முப்பீட தலங்கள்
அம்பாசமுத்திரம் - திருமூலநாதர் திருக்கோயில்
ஊர்காடு - திருக்கோஷ்டியப்பர் திருக்கோயில்
வல்லநாடு - திருமூலநாதர் திருக்கோயில் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது).

பஞ்ச ஆசன தலங்கள்
ஏர்வாடி - திருவழுந்தீசர் திருக்கோயில்
களக்காடு - சத்யவாகீசர் திருக்கோயில்
நான்குநேரி - திருநாகேஷ்வரர் திருக்கோயில்
விஜயநாராயணம்- மனோன்மணீசர் திருக்கோயில்
செண்பகராமநல்லூர் - இராமலிங்கர் திருக்கோயில்
தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்
சங்கரன்கோயில் - மண் தலம் (ப்ருத்திவி)
கரிவலம்வந்தநல்லூர் - அக்னி தலம்
தாருகாபுரம் - நீர் தலம்
தென்மலை- காற்று தலம்
தேவதானம் - ஆகாய தலம்

காசிக்கு சமமான பஞ்ச குரோச தலங்கள்
சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில்
ஆழ்வார்குறிச்சி - வன்னீஸ்வரர் திருக்கோயில்
கடையம் - வில்வவனநாதர் திருக்கோயில்
திருப்புடைமருதூர் - நாறும்பூநாதர் திருக்கோயில்
பாபநாசம் - பாபநாசர் திருக்கோயில்

இராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்கள்
களக்காடு- சத்யவாகீசர்
பத்தை - குலசேகரநாதம்
பத்மனேரி - நெல்லையப்பர்
தேவநல்லூர் - சோமநாதம்
சிங்கிகுளம் - கைலாசநாதம்

நவ சமுத்திர தலங்கள்
அம்பாசமுத்திரம்
ரவணசமுத்திரம்
வீராசமுத்திரம்
அரங்கசமுத்திரம்
தளபதிசமுத்திரம்
வாலசமுத்திரம்
கோபாலசமுத்திரம்
வடமலைசமுத்திரம் (பத்மனேரி)
ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்- இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
[தொகு] பஞ்ச பீட தலங்கள்
பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.

கூர்ம பீடம் - பிரம்மதேசம்
சக்ர பீடம் - குற்றாலம்
பத்ம பீடம் - தென்காசி
காந்தி பீடம் - திருநெல்வேலி
குமரி பீடம் - கன்னியாகுமரி.இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.

சிவ கைலாயங்கள் (ஆதி கைலாசம்)
பிரம்மதேசம் - கைலாசநாதர் திருக்கோயில்
அரியநாயகிபுரம் - கைலாசநாதர் திருக்கோயில்
திருநெல்வேலி (தென்கைலாயம்)- தென்கைலாசநாதர் (நெல்லையப்பர்) திருக்கோயில்
கீழநத்தம் (மேலூர்)- கைலாசநாதர் திருக்கோயில்
முறப்பநாடு - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
தென்திருப்பேரை - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
சேர்ந்தபூமங்கலம் - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
கங்கைகொண்டான் - கைலாசநாதர் திருக்கோயில்
தச வீரட்டானத் தலங்கள் (மேற்கு சிவாலயங்கள்)
சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில் - பக்த தலம்
வழுதூர் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - மகேச தலம்
கோடகநல்லூர் - அவிமுக்தீஸ்வரர் திருக்கோயில் - பிராண லிங்கத் தலம்
சிங்கிகுளம் - கைலாசநாதர் திருக்கோயில் - ஞானலிங்கத் தலம்
மேலநத்தம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சரண தலம்
ராஜவல்லிபுரம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சகாய தலம்
தென்மலை - திருப்பாத்தீஸ்வரமுடையார் திருக்கோயில் - பிரசாதி தலம்
அங்கமங்கலம் - நரசிங்கஈஸ்வரமுடையார் திருக்கோயில் - கிரியாலிங்க தலம்
காயல்பட்டினம் - மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில் - சம்பத் தலம் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
திற்பரப்பு - மகாதேவர் திருக்கோயில் (இது தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது)

வாலி வழிபட்டத் தலங்கள்
திருவாலீஸ்வரம் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
கீழப்பாவூர் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
தென்காசி வாலியன்பத்தை - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
நவகைலாயங்களும் நவக்கிரகங்களின் ஆட்சியும்
பாபநாசம் - சூரியன்
சேரன்மகாதேவி - சந்திரன்
கோடகநல்லூர் - செவ்வாய்
குன்னத்தூர் - இராகு
முறப்பநாடு - குரு(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
ஸ்ரீவைகுண்டம்- சனி(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
தென்திருப்பேரை - புதன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
ராஜபதி - கேது(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

வேறு சில ஆலயங்கள்
இது தவிர தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் கரிசூழ்ந்தமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலை சுற்றி அஷ்டலிங்க தலங்கள் உள்ளதாக திருநெல்வேலி தல புராணம் கூறுகிறது. துர்வாச முனிவர் வழிபட்ட இந்த கோயில்கள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.
நெல்லையிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் திருவேங்கடநாதர் கோவில் உள்ளது.
நெல்லையிலிருந்து சுமார் 53 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது தென்காசி. தென்னிந்தியாவின் காசி (வாரணாசி) என்று அழைக்கப்படும் இந்நகர் சுமார் 400 ஆண்டுகால வரலாறு கொண்டது.
சங்கரன் கோயில் எனும் ஊரில் உள்ள சங்கரநாராயணர் கோவில் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.

சுற்றுலாத் தலங்கள்
பாபநாசம்
தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி சிவன் வியாசரையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார். இங்கு அகஸ்தியர் அருவி என்கிற நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது.

குற்றாலம்
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் குற்றாலம் நகரும் ஒன்று. குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது. இங்கு குளித்து மகிழ மெயின் அருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவி அருவி, பேரருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி, தேனருவி என்று பல நீர்விழ்ச்சிகள் உள்ளன. இங்கு குளிப்பதால் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கிறது என்று 1811 ஆம் ஆண்டில் ஆங்கில ஆட்சியாளர்களான கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் அனுப்பிய மருத்துவ குழுவினர் தங்களது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர். தென்பொதிகைச் சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளன. இந்த மூலிகைச் செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் இதில் அனைத்து மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களும் கலந்துள்ளது என்கிறார்கள்.இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் அருவிகளில் நீர் விழத் தொடங்கும். சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும்.குற்றாலத்தில் பல அருவிகள் உள்ளன. அதில் மிகவும் ஆபத்தானது தேனருவி, இங்கு தேன்கூடுகள் பல உள்ளதால் இப்பெயர் பெற்றுள்ளது. இங்கிருந்து இரண்டரை கி.மீ கீழே செண்பகா தேவி அருவி உள்ளது. இங்கு செண்பகா தேவியம்மன் ஆலயம் இருக்கிறது.தமிழகத்தில் நடராஜர் நடனமாடிய 5 சபைகளில் திருகுற்றாலநாதர் ஆலயம் சித்திர சபை என்று அழைக்கப்படுகிறது. இங்கு குறுமுனி என்றழைக்கப்பட்ட தமிழ் மாமுனிவர் அகத்தியர் வழிபட்ட சிவபெருமான் சன்னதி உள்ளது.

அல்வா
திருநெல்வேலி, அல்வா எனப்படும் இனிப்புப் பண்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றது. திருநெல்வேலி அல்வாவின் சுவைக்கு தாமிரபரணி ஆற்றின் நீரும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

பத்தமடை பாய்
திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி செல்லும் வழியில் உள்ள ஊர் பத்தமடை. இந்த பத்தமடை பாய் நெய்வதற்கு உலக அளவில் பெயர் பெற்ற ஊராகும். இங்குள்ள மக்கள் நெய்யும் பாய்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தாமிரபரணி ஆறு
நெல்லையில் பாயும் புகழ்பெற்ற தாமிரபரணி ஆறு அகத்திய மலையில் உற்பத்தியாகிறது. இந்த ஆற்றின் குறுக்கே பாபநாசத்தில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் பல்வேறு திரைப்படப் படப்பிடிப்புகள் நடந்துள்ளன. நெல்லையில் பாயும் இந்தத் தாமிரபரணி ஆறு சுற்றியுள்ள பல பகுதிகளையும் செழிக்க வைக்கிறது.


ஹென்றி பவர் கல்லறை
ஹென்றி பவர் கல்லறைசீகன் பால்க் மொழிபெயர்ப்பு வழக்கொழிந்து மறக்கப்பட்டுப் போனதாலும், பப்ரிசியுசின் மொழி பெயர்ப்பிலும், இரேனியுஸ் மொழி பெயர்ப்பிலும் குறைபாடுகள் இருந்த காரணத்தாலும், சென்னை வேதாகமச் சங்கம், எல்லா புரோட்டஸ்தாந்து சபைகளும் ஏற்றுக் கொள்ளும் விதமாக ஒரு புதிய தமிழ் மொழி பெயர்ப்பை உருவாக்கும் எண்ணத்தில், ஹென்றி பவர் ஐயரைத் தலைமை மொழி பெயர்ப்பாளராகவும், அவருக்கு உதவியாக மற்ற சபைகளைச் சேர்ந்த ஏழு பேரைக் கொண்ட ஒரு குழுவையும் நியமித்தது. இந்தக் குழுவில், டாக்டர் கால்டுவெல், சார்ஜென்ட் ஐயர், திரேசி ஐயர், திரு. முத்தையா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த மொழிபெயர்ப்புதான், இரண்டு முறை திருத்தப்பட்டுள்ளது. இன்று தமிழ் பேசும் கிறித்தவர்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் வேதாகமம் ஆகும். இவரின் மொழிபெயர்ப்பு, பவர் மொழிபெயர்ப்பு, அல்லது ஐக்கிய மொழிபெயர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த குழுவின் தலைவர் ஹென்றி பவர் ஐயரின் கல்லறை திருநெல்வேலி, பாளையங்கோட்டை மிலிட்டரி லைன், கிறிஸ்து ஆலயக் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழின் தோற்றம்
தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி சிவன் வியாசரையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார்.திருநெல்வேலி ம்ற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பேசப்படும் தமிழ் நெல்லை தமிழ் என்று வழங்கப்படுகிறது.திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் எனப்படுகின்றன. பாளையங்கோட்டை கல்விநிலையங்களுக்குப் பெயர்பெற்றது. இது தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு என்றழைக்கப்படுகிறது. பாளையம்கோட்டைச் சிறையும் மிகவும் புகழ்பெற்றது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல சுதந்திரப்போராட்ட வீரர்கள் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வளவு பெருமைமிகுந்த நெல்லை சீமையில் பிறந்ததை என்னி பெருமையடைகிறேன்.


நன்றி மீண்டும் அடிப்படை அறிந்து கொள்ள உலகம் முழுவதும் இருக்கிறது சிந்தித்து நடப்போம் ......

தமிழக மாவட்டங்கள் ஒரு பார்வை:

தமிழ் நாட்டில் 32 மாவட்டங்கள் உள்ளன.

1. அரியலூர் மாவட்டம்
2. இராமநாதபுரம் மாவட்டம்
3. ஈரோடு மாவட்டம்
4. கடலூர் மாவட்டம்
5. கரூர் மாவட்டம்
6. கன்னியாகுமரி மாவட்டம்
7. காஞ்சிபுரம் மாவட்டம்
8. கிருஷ்ணகிரி மாவட்டம்
9. கோயம்புத்தூர் மாவட்டம்
10. சிவகங்கை மாவட்டம்
11. சென்னை மாவட்டம்
12. சேலம் மாவட்டம்
13. தஞ்சாவூர் மாவட்டம்
14. தர்மபுரி மாவட்டம்
15. திண்டுக்கல் மாவட்டம்
16. திருச்சிராப்பள்ளி மாவட்டம்
17. திருநெல்வேலி மாவட்டம்
18. திருப்பூர் மாவட்டம்
19. திருவண்ணாமலை மாவட்டம்
20. திருவள்ளூர் மாவட்டம்
21. திருவாரூர் மாவட்டம்
22. தூத்துக்குடி மாவட்டம்
23. தேனி மாவட்டம்
24. நாகப்பட்டினம் மாவட்டம்
25. நாமக்கல் மாவட்டம்
26. நீலகிரி மாவட்டம்
27. புதுக்கோட்டை மாவட்டம்
28. பெரம்பலூர் மாவட்டம்
29. மதுரை மாவட்டம்
30. விருதுநகர் மாவட்டம்
31. விழுப்புரம் மாவட்டம்
32. வேலூர் மாவட்டம்

மாவட்ட ஆட்சி அமைப்பு

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியான ஆட்சி அமைப்பு ஒன்று இருக்கிறது. இந்த ஆட்சி அமைப்பின் கீழ் பல்வேறு துறை அலுவல்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த அமைப்புகள் அனைத்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் பதவியில் இருப்பவரின் கீழ் இயங்குகின்றன.

மாவட்ட ஆட்சித்தலைவர்

ஒவ்வொரு மாவட்டத்தின் ஆட்சி அமைப்புகள் அனைத்தும் மாவட்ட ஆட்சித்தலைவரின் மேற்பார்வையில் இயங்குகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் குறிப்பாக மாநில அரசின் வருவாய்த்துறையின் மாவட்டத் தலைமை அதிகாரியாக இருக்கிறார். இருப்பினும் மாவட்டத்திலிருக்கும் அனைத்துத்துறை அலுவல்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரியாகவும் இருக்கிறார்.மாவட்ட ஆட்சித்தலைவர் பொறுப்பிற்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தமிழக அரசால் நியமிக்கப்படுகிறார்.

மாவட்ட வருவாய் அதிகாரி

மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் பணி மாவட்ட வருவாய் அதிகாரி பணியாகும். இவர் வருவாய்த்துறையின் அனைத்துச் செயல்பாடுகளையும் கவனிக்கிறார். மாவட்ட ஆட்சித்தலைவர் விடுமுறையில் இருக்கும் போது இவர் மாவட்ட ஆட்சித்தலைவர் பணியைக் கூடுதலாகக் கவனிப்பார்.மாவட்ட வருவாய் அதிகாரி பொறுப்பிற்கு வருவாய்த்துறையில் பணியாற்றி பதவி உயர்வு பெற்றவர்கள் தமிழக அரசால் நியமிக்கப்படுகிறார்.

மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்

மாவட்ட அளவில் மாவட்ட சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்புப் பணிகளைக் கண்காணிக்கும் அதிகாரியாக மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் செயல்படுகிறார். மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் பொறுப்பிற்கு இந்தியக் காவல் பணி அதிகாரிகள் தமிழக அரசால் நியமிக்கப்படுகிறார்.

மாவட்ட முதன்மை நீதிபதி

மாவட்ட அளவில் நீதித்துறை சார்ந்த பணிகளைக் கண்காணிக்கும் அதிகாரியாக மாவட்ட முதன்மை நீதிபதி செயல்படுகிறார். மாவட்ட முதன்மை நீதிபதி பொறுப்பிற்கு சட்டம் பயின்றவர்கள் தமிழக அரசால் நியமிக்கப்படுகிறார்.

மாவட்ட வன அலுவலர்

மாவட்ட அளவில் வனங்கள் மற்றும் காடுகளில் உள்ள மரங்கள், விலங்கினங்கள் போன்றவைகளின் பாதுகாப்பிற்கான அதிகாரியாக மாவட்ட வன அலுவலர் செயல்படுகிறார். மாவட்ட வன அலுவலர் பொறுப்பிற்கு இந்தியக் வனப் பணி அதிகாரிகள் தமிழக அரசால் நியமிக்கப்படுகிறார்.

திட்ட அதிகாரி

மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர் மாவட்ட அளவிலான கிராம வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துகிறார். இவர் தமிழக அரசால் நியமிக்கப்படுகிறார்.

மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக அதிகாரிகள்

மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித்தலைவருக்குப் பல்வேறு துறையின் கீழ் உதவுவதற்காக குறிப்பிட்ட துறைகளின் நேர்முக அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

நேர்முக அதிகாரி (பொது)
நேர்முக அதிகாரி (பொது வினியோகம்)
நேர்முக அதிகாரி (சிறுசேமிப்பு)
நேர்முக அதிகாரி (சத்துணவு)
நேர்முக அதிகாரி (கணக்குகள்)
என்று சில அதிகாரிகள் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அவர்கள் துறைகள் சார்பாக உதவுகிறார்கள்

மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள்

மாவட்ட ஆட்சித்தலைவருக்கு உதவ மேலும் பல துறைகளின் சார்பில் சில மாவட்ட அதிகாரிகளை தமிழக அரசு நியமிக்கிறது.

மாவட்ட வழங்கல் அதிகாரி
மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி
மாவட்ட சமூகநல அதிகாரி
மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வு நல அதிகாரி
மாவட்ட திட்ட அதிகாரி (மகளிர் மேம்பாட்டுத் திட்டம்)
மாவட்ட திட்ட அதிகாரி (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்)
மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி
உதவி இயக்குனர்( கிராமப் பஞ்சாயத்துக்கள்)
உதவி இயக்குனர்( நகரப் பஞ்சாயத்துக்கள்)
உதவி இயக்குனர்( தணிக்கைத்துறை)
உதவி இயக்குனர்( புள்ளியியல்)
உதவி இயக்குனர்( மீன்வளம்)
உதவி இயக்குனர்( கனிம வளம்)

துணை ஆட்சியர் அல்லது வருவாய்க் கோட்ட அலுவலர்

மாவட்டங்களில் வருவாய்த்துறையில் சில வட்ட அலுவலகங்களை உள்ளடக்கி வருவாய்த்துறைக் கோட்ட அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவைகளில் துணை ஆட்சியர் அல்லது வருவாய்க் கோட்ட அலுவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இப்பணியிடங்களில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் துணை ஆட்சியர் என்றும் மற்றவர்கள் நியமிக்கப்பட்டால் வருவாய்க் கோட்ட அலுவலர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

பிற மாவட்ட அதிகாரிகள்

இதுபோல் ஒவ்வொரு துறையிலும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் அரசால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட துறையின் தலைமை அதிகாரிகளாகப் பதவி வகிப்பதுடன் அந்தத்துறையின் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறார்கள்

மாவட்ட நூலக அதிகாரி
மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி
மாவட்ட விளையாட்டு அதிகாரி
மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி
மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி
மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளர்
மின்வாரிய மேற்பார்வை பொறியாளர்
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் கோட்ட அதிகாரி
சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர்
கூட்டுறவு இணைப் பதிவாளர்

நன்றி மீண்டும் அடிப்படை அறிந்து சிந்தித்து நடப்போம் ......

Thursday, July 1, 2010

தமிழக மாநகராட்சிகள்,நகராட்சிகள்,பேரூராட்சி,ஊராட்சிகள், ஒரு பார்வை

தமிழக மாநகராட்சிகள்

இந்தியாவின் மாநிலமான தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப மாநகராட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளன.தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 10 மாநகராட்சிகள் இருக்கின்றன. இந்த மாநகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த மாமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாமன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். மாநகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 10 மாநகராட்சிகள் உள்ளன.

1.சென்னை மாநகராட்சி
2.கோவை மாநகராட்சி (கோயம்புத்தூர்)
3.மதுரை மாநகராட்சி
4.ஈரோடு மாநகராட்சி
5.சேலம் மாநகராட்சி
6.தூத்துக்குடி மாநகராட்சி
7.திருச்சி மாநகராட்சி (திருச்சிராப்பள்ளி)
8.நெல்லை மாநகராட்சி (திருநெல்வேலி)
9.திருப்பூர் மாநகராட்சி
10.வேலூர் மாநகராட்சி


தமிழக நகராட்சி மன்றங்கள் தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் நகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நகராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த நகராட்சி மன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் நகராட்சி மன்றத் தலைவராகவும், ஒருவர் நகராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். நகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி நகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

தமிழக நகராட்சிகள் (முனிசிபல்) இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் நகர உள்ளாட்சி அமைப்பான இவ்வமைப்புகள் பண்டையத் தமிழர்கள் காலத்திலேயே பின்பற்றி வந்த அமைப்பாக வரலாற்று சான்றிகள் கூறுகின்றன. தமிழகத்தில் சோழப் பேரசு வீற்றிருந்த காலத்தில் குடவோலை முறையில் இவ்வமைப்புகளை அமைத்திருந்ததாக சான்றுகள் கூறுகின்றன.தமிழக உள்ளாட்சி அமைப்பான நகராட்சிகள் அரசியலமைப்பு 74 வது திருத்தச் சட்ட செயல் 1992ன் விதி 243 டபுள்யூ நகாரட்சிகள் அமைக்க . அதற்கு அதிகாரங்களை வழங்க வழி செய்கின்றது. அதன் படி இது ஒரு மாநில அரசிடமிருந்து அதிகாரப் பகீர்வைப் பெற்றத் தன்னாட்சி அமைப்பாக தமிழகத்தில் செயல்படுகின்றது.தமிழகத்தில் நகராட்சி அமைப்புச் சட்டத்தின் படி 10 மாநகராட்சிகள் மற்றும் 148 நகராட்சிகள் (49 மூன்றாம் படி நிலை நகராட்சிகள் உட்பட) இயங்குகின்றன.


தமிழக ஊராட்சி மன்றங்கள் தமிழ்நாட்டில் பேரூராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் குறிப்பிட்ட வருவாயுடைய ஊர்களை ஊராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த ஊராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் ஊராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த ஊராட்சி மன்றத்திற்கான தலைவர் மக்களால் நேரடியாகத் தலைவர் தேர்வு செய்யடுகின்றார். இந்த ஊராட்சி மன்றத்திற்கான துணைத் தலைவர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களால் தேர்வு செய்யடுகின்றார். ஊராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஊராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி மன்றத்தலைவரே அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் மொத்தம் 12606 ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன.
ஊராட்சிப் பகுதிகளில் இருக்கும் வாக்காளர்கள் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட வார்டு உறுப்பினர் என்று நான்கு பதவிகளுக்காக நான்கு வாக்குகள் அளிக்கின்றனர். பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வாக்காளர்கள் வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் ஒரு வாக்கு அளிக்கின்றனர்.

தமிழகப் பேரூராட்சி

தமிழகப் பேரூராட்சி மன்றங்கள் இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் நகராட்சிகளுக்கும் ஊராட்சிகளுக்கும் இடைப்பட்ட நிலையில் பேரூராட்சி என்ற அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் குறிப்பிட்ட வருவாயுடைய ஊர்களை பேரூராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த பேரூராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் பேரூராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பேரூராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த பேரூராட்சிமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் பேரூராட்சி மன்றத் தலைவராகவும், ஒருவர் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். பேரூராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் பேரூராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி பேரூராட்சிச் செயல் அலுவலர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் 561 பேரூராட்சி மன்றங்கள் இருக்கின்றன.
பேரூராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு இடைப்பட்டதாக இருக்கின்றன. பேரூராட்சிகளில் மக்கள்தொகை 5000க்கு அதிகமாகவும் 30,000 வரையிலும் உள்ளனர்.
பெரும்பான்மையான பேரூராட்சிகள் தாலுக்கா தலைமையிடமாகவும், ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,பதிவுத்துறை அலுவலகம், வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்கள்,வழிபாட்டு தலங்களாகவும் தொழிலகங்கள் நிறைந்ததாகவும் விளங்குவதால் நகரங்களுக்கான வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகின்றன. தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-ன்படி பேரூராட்சிகளின் நிர்வாகம் செயல்படுகிறது.

பேரூராட்சிகள் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்/உதவி இயக்குநர் மற்றும் மாநில அளவில் பேரூராட்சிகளின் இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.பேரூராட்சிகள் இயக்ககம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும்துறையின் கீழ் செயல்படுகிறது.

பேரூராட்சிகள் மேற்கொள்ளும் பணிகள்

பொது சுகாதாரம் - துப்புரவு,கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி,திடக்கழிவு மேலாண்மை
மக்கள் உடல்நலம் மற்றும் நோய்த்தடுப்பு
குடிநீர் வழங்கல்
விளக்குவசதி
கட்டிடங்கள் கட்டுவதை ஒழுங்குசெய்தல்
தொழிற்சாலைகள் மற்றும் தொழில்கள் ஏற்படுத்துவதை உரிமம் வழங்கி முறைப்படுத்துதல்
பிறப்பு/இறப்பு பதிவு
மயானங்களை ஏற்படுத்தி பராமரித்தல்.
தமிழ்நாட்டில் பேரூராட்சிகள் நான்கு நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வகை பேரூராட்சிகள் எண்ணிக்கை
நிலை 2 82
நிலை 1 221
தேர்வுநிலை 245
சிறப்புநிலை 13
மொத்தம் 561


நன்றி மீண்டும் அடிப்படை அறிந்து சிந்தித்து நடப்போம் ......