Home

Friday, July 2, 2010

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி:

திருச்சிராப்பள்ளி

(ஆங்கிலம்:Tiruchirappalli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது திருச்சிராப்பள்ளி ; இது ஒரு மாவட்டத் தலைநகர் ஆகும்; மேலும் இது ஒரு [மாநகராட்சி] எனும் தகுதிபெற்றது.திருச்சிராப்பள்ளி தமிழகத்தில் உள்ள நான்கு முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி காவிரி நதிக் கரையில் அமைந்துள்ளது. பொதுவாகத் திருச்சிராப்பள்ளியைத் 'திருச்சி' என்று அழைப்பார்கள்.திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) - பள்ளி, அதாவது சிராய் பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேலேயே அமைந்து உள்ளது.தமிழகத்தின் மையப்பகுதியில் இருப்பதால் இது ஒரு வர்த்தக மையமாகவும் திகழ்கிறது.

பெயர்க் காரணம்

'திரிசிரன்' என்ற பெயருடைய அரக்கன், மூன்று சிரங்களைக் கொண்டவன். அவ்வரக்கன் இவ்வூரில் பூசித்ததனால் திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது. இது தென்னாட்டுக் கைலை மலை என்றும் புகழப்படுவது. திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் 'சிரா' என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. சிரா துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்குப் பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது.

நகர நிர்வாகம்

திருச்சிராப்பள்ளி மாநகரம் 60 வார்டுகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் 15 வார்டுகள் வீதம் பொன்மலை, கோ. அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம் என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மேயர் மற்றும் ஆணையாரால் நிர்வகிக்கபடுகிறது.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்கிறது.

திருத்தலங்கள்

அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில்,மலைக்கோட்டை, திருச்சி
அருள்மிகு உச்சிப் பிள்ளையார் திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்
அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், திருவரங்கம்
அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர்
அருள்மிகு சம்புகேசுவரர் திருக்கோயில், திருவானைக்கா
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், வயலூர்
அருள்மிகு பஞ்சவர்ண சுவாமி திருக்கோயில், உறையூர்
அருள்மிகு ஆம்ரனேஸ்வர சுவாமி திருக்கோயில் மாந்துறை

சுற்றுலாத் தலங்கள்
மலைக்கோட்டை
ஸ்ரீரங்கம்
திருவானைக்கோவில்
முக்கொம்பு
கல்லணை
வயலூர் முருகன் கோயில்
கங்கை கொண்ட சோழபுரம்


நன்றி மீண்டும் அடிப்படை அறிந்து சிந்தித்து நடப்போம் ......

No comments:

Post a Comment