Home

Saturday, July 3, 2010

திருப்பூர் மாநகராட்சி:

திருப்பூர்

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மாநகராட்சி. இது புதிதாக அறிவிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்தின் தலை நகரமாக அமைந்துள்ளது. இந்மாநகரம் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் ஏழாவது பெரிய நகரமான திருப்பூர் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும். திருப்பூர் மற்றும் அதன் சுற்றுபுறங்களிலும் சுமார் 8 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்.வேலம்பாளையம், நல்லூர் ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிகளும், தொட்டிபாளையம், ஆண்டி பாளையம், வீரபாண்டி, செட்டிபாளையம், மண்ணரை, முருகம்பாளையம், நெருப்பெரிச்சல், முத்தனம்பாளையம் ஆகிய கிராம ஊராட்சிப் பகுதிகளும் திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
திருப்பூரின் முக்கிய சாலைகளாக குமரன் ரோடு, அவிநாசி ரோடு, பெருமாநல்லூர் ரோடு, காங்கயம் ரோடு, பல்லடம் ரோடு, மங்கலம் ரோடு விளங்குகின்றன. குமரன் ரோடு மிக முக்கிய சாலையாக விளங்குகிறது.

திருப்புரின் தொழில் வளம்

தொழில் துறையில் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் நகரம் திருப்பூர் . லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வளித்த , வாழ்வளிக்கும் நகரம் திருப்பூர் . தென்மாவட்டத்தை சேர்ந்த ஆயிரகணக்கான மக்கள் பணிபுரிகிறார்கள் . ஆண்டு தோறும் பத்து ஆயிரம் கோடிக்கும் மேலான அந்நிய செலவாணியை ஈட்டி தருகிறது.


நன்றி மீண்டும் அடிப்படை அறிந்து சிந்தித்து நடப்போம் ......

No comments:

Post a Comment