Home

Friday, July 2, 2010

கோயம்புத்தூர் மாநகராட்சி:

கோயம்புத்தூர் (Coimbatore)
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த பெரிய நகரமாகும். இதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் தலைமையிடமான இது தொழில் வளர்ச்சியிலும் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும் மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும். தொழில் முனைவோர் கூடுதலாக உள்ள நெசவு மற்றும் பொறியியல் தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களும் கோவை மாநகரை மையமாகக் கொண்டு இயங்குகின்றன.தொன்மையான கொங்குநாடு பகுதியைச் சேர்ந்த இந்த நகரம் இங்குள்ள ஆலைகளின் எண்ணிக்கையால் தென்னிந்திய மான்செஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது. நகரத்திலும் புறநகர்ப்பகுதிகளும் 2.4 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

பெயர்க்காரணம்
இப்பகுதியை பண்டைக்காலத்தில் கோசர்கள் ஆண்டதால் கோசன்புத்தூர்->கோவன்புத்தூர்->கோயம்புத்தூர் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வரலாறு

கோயம்புத்தூரின் துவக்க காலம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. காட்டுவாசிகளான இருளர்கள் முதன்மைக் குடிகளாக இருந்தனர். 9ஆம் நூற்றாண்டின் இடையில் இரண்டாவது சோழர் ஆட்சி எழுந்தபோது கோயம்புத்தூரை தன்னாட்சியின் கீழ் கொணர்ந்தது. அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியை பழங்குடி மக்கள்,குறிப்பாக கோசர்கள்ஆண்டு வந்தனர்.கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூர் என மருவியது.

கரும்பு வளர்ப்பு நிலையம்,கோயம்புத்தூர், 1927உரோமர்களின் வணிகத்திற்கும் கோயம்புத்தூர் மையமாக இருந்ததாகத் தெரிகிறது. 14ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தில்லி சுல்தான்களின் கீழான மதுரையைச் சேர்ந்த இசுலாமியர் ஆட்சிப் புரிந்தனர்.[சான்று தேவை]இவர்களது ஆட்சி விசயநகரப் பேரரசினால் முடிவுக்கு வந்தது. அவர்களது ஆட்சிக்காலத்தில் இப்பகுதியில் ஆந்திர, கர்நாடக வந்தேறிகள் குடிபெயர்ந்தனர்.1550களில் மதுரையில் விசயநகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில், உருவெடுத்தனர். 1700களில் மதுரை நாயக்கர்களுக்கும் மைசூர் மன்னர்களுக்குமிடையே கோயம்புத்தூரில் சண்டை நடைபெற்றன. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது.

1760களில் மைசூரின் சிங்காதனத்தை ஹைதர் அலி கைப்பற்றினார்.அவர் பிரித்தானியருக்கு எதிராக செயல்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதை தடுத்தார். இதனை அவரது வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அந்த நேரத்தில் கோயம்புத்தூரை பிரித்தானியர் தங்களின் மதராசு மாகாணத்தில் இணைத்துக் கொண்டனர். 1801ஆம் ஆண்டு கொங்குநாட்டு பாளையக்காரரான தீரன் சின்னமலை மலபார் மற்றும் மைசூர் படைகளின் ஆதரவுடன் பிரித்தானியருடன் போர் புரிந்தார். இப்போரின் முடிவில் 1804ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது. 1848ஆம் ஆண்டு நகராட்சி தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகரவைத் தலைவரானார். அவரால் 1862ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது.

1981ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்காநல்லூர் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது.

நிர்வாகம்

திவான்பகதூர் சாலை (டிபி ரோட்), ஆர் எஸ் புரம், கோவைகோவை ஓர் மாநகராட்சியாகும். தவிர, மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். மாநகராட்சிக்கு மேயர் தலைமை ஏற்கிறார். இவருக்குத் துணையாக கவுன்சிலர்களும் துணை மேயரும் உள்ளனர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தவிர அரசுப்பணி சேவையைச் சேர்ந்த மாநகராட்சி ஆணையர் வழக்கமான ஆட்சிப்பணியை மாநகராட்சி அவையின் வழிகாட்டுதலின்படி நடத்துகிறார். மாவட்ட நிர்வாகத்தை மாவட்ட ஆட்சியர் ஏற்கிறார். மாவட்ட நீதிமன்றம் கோயம்புத்தூரின் நீதி நிர்வாகத்தை மேற்பார்வையிடுகிறது. மாநிலத்திலேயே மிகக் கூடுதலான வருவாயை ஈட்டிக் கொடுத்தாலும் நகரத்தின் கட்டுமானத் தேவைகளுக்கான நிதி மாநில அரசிடமிருந்து போதுமான அளவு கிடைப்பதில்லை என்ற குறை உள்ளது.

முக்கிய இடங்கள்

மருதமலைக் கோவில்பேரூர் பட்டீஸ்வரஸ்வாமி கோவில்: பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். சிவன், பட்டீஸ்வரனாகவும், பார்வதி பச்சை நாயகியாகவும் எழுந்தருளியுள்ளார்கள். கரிகால் சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோவில் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கனகசபை மண்டபத்திலும், இதர மண்டபங்களிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் காணத்தக்கவை. பேரூர் ஆதீனமும் இங்கு அமைந்துள்ளது.
மருதமலை முருகன் கோவில்: நகரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் சிறிய குன்றின் மீது அமைந்துள்ள கோவில் முருகனின் ஆறு படை வீடுகளுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெற்ற கோவிலாகும்.
கோனியம்மன் திருக்கோவில் கோவையின் மற்றுமொரு புகழ்பெற்ற கோவிலாகும். கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டில் ‘இருளர்கள்’ கட்டியதாக வரலாறு தெரிவிக்கிறது.சேரர்களின் படையெடுப்பிற்கு பயந்து கோட்டை கட்டி கோனியம்மனை காவல்தெய்வமாக பிற்காலத்தில் ஆண்ட இளங்கோசர்கள் வழிபட்டனர். கோவையின் மையப்பகுதி மக்கள் இன்றும் திருவிழாவின் போது கோவிலில் தீச்சட்டி ஏற்றியபிறகு ஊரை விட்டு செல்வதில்லை. பிற்காலத்தில் மைசூர் அரசர்கள் இக்கோவிலை புனரமைத்து கோனியம்மனை தேவி மகிசாசுரமர்த்தினியாக வழிபட்டதாக தெரிகிறது.
ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில்: நகர் மத்தியில் வைசியாள் தெருவில் அமைந்துள்ளது. நவராத்திரி உற்சவங்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.
கோவைக் குற்றாலம்: கோவையிலிருந்து 37 கி.மீ. தொலைவில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில், சிறுவாணி நதியில் அமைந்துள்ளது. வனப்பகுதி என்பதால் மாலை 5 மணிக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை.
வ.உ.சி. பூங்கா: வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவாக அமைக்கப்பட்ட பூங்கா. சிறு மிருகக்காட்சி சாலை, சிறுவர் ரயில், சிறுவர் விளையாட்டுக் கருவிகள் ஆகியவை உள்ளன. அருகிலுள்ள விளையாட்டரங்கில் நடக்கும் கால்பந்து போட்டிகளும் அரசியல் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் கோவையின் உயிரோட்டமாக விளங்குகின்றன.



அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

ஊட்டி - (90 கி.மீ. வடமேற்கு): மிகப் பிரபல மலை வாசஸ்தலம். அதிக சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்கள் பெருக்கத்தால் திணறினாலும் இன்றும் எல்லோரையும் ஈர்க்கிறது.
குன்னூர்: ஊட்டி செல்லும் வழியில் உள்ள மலை வாழிடம். இங்குள்ள சிம்ஸ் பூங்கா புகழ்பெற்றது.
முதுமலை வனவிலங்கு காப்பகம்: ஊட்டி வழியாக தமிழக எல்லையில் உள்ள பெரிய சரணாலயம் இதுவாகும்.
மலம்புழா அணை: பாலக்காடு அருகில் உள்ளது.
ஆனைமலை: பழனி - (100 கி.மீ., தெற்கு): குன்றின் மீதமைந்த முருகன் கோவில். ஆறு படை வீடுகளில் ஒன்று.
அமராவதி அணை: முதலை பண்ணை
திருமூர்த்தி அணை:பஞ்சலிங்கம் அருவி
ஆழியாறு அணை: குரங்கு அருவி
டாப் ஸ்லிப் ( இந்திரா காந்தி வன விலங்கு சரணாலயம்)
வால்பாறை நல்ல மலை வாசஸ்தலம்

நன்றி மீண்டும் அடிப்படை அறிந்து சிந்தித்து நடப்போம் ......

No comments:

Post a Comment