Home

Wednesday, June 30, 2010

தமிழக தேர்தல் ஆணையம் :

தமிழக தேர்தல் என்பது இப்பொழுது பணம் காய்க்கும் மரம்போல் ஆகிவிட்டது.

இருப்பினும் அதன் அடிப்படை தெரிந்துகொள்வது நமது கடமைகளில் ஒன்று....

என்னடா இவைஎல்லாம் படித்ததுதானே என்று நினைக்கவேண்டாம் படித்ததால்தான் நமக்கு ஏன் என்று ஒதுங்கிவிடுகிறோம்.சிந்திக்க நேரமில்லை என்று ஒவ்வொருவரும் தன்னைசுற்றி இருப்பவர்களிடம் மட்டுமே கருத்துகளை பரிமாறிகொள்கிறோம். தமிழகத்தில் எத்தனையோ ஜாதி,மதங்களுக்கு இடையில் தேர்தல் மட்டுமே பாதியல் ஒற்றுமையுடன் இருக்கிறது.ஓட்டுரிமை என்பது இந்திய குடிமகனின் பிறப்புரிமை அதனாலென்னவோ எல்லா மதமும்,ஜாதியும் எல்லா கட்சியிலும் இருக்கின்றனர்.

தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிகள் தேர்ந்து எடுக்கப் படுகின்றனர்.

தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்- தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆவார். மாநிலத் தேர்தல் ஆணைய அமைப்பு திருத்தச் செயல் சட்டத்தின் கீழ் மாநிலம் மாற்றும் ஆட்சிப் பிரதேசங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்த அதிகாரங்கள் பெற்றது. அவ்வாணையத்தின் தலைவரான தலைமைத் தேர்தல் ஆணையர்

மாநகராட்சி,
மாவட்ட ஊராட்சி,
ஊராட்சி ஒன்றியம் மற்றும்
கிராம ஊராட்சி
இவைகளின் தேர்தல்களை நடத்தக்கூடியவர் ஆவார்.

மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையரின் படி நிலை உயர் நீதி மன்ற நீதிபதிக்கு இணையாகக் கொண்டது.தமிழ் நாடு மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையரை தமிழக ஆளுநரே நியமன்ம் செய்கின்றார். மாவட்ட அளவில் மாவட்டத் தேர்தல் அலுவலர், மற்றும் மாவட்ட ஆட்சியரால் தேர்தல் நடத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. உள் அமைப்புத் தேர்தல்களை தேர்தல் அலுவலர் (ரிட்டனிங் ஆபிசர்) நடத்துகின்றார்.இதன் தற்பொழுதயத் தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக திரு. டி.சந்திர சேகரன் இ ஆ ப பதவி வகிக்கின்றார்.

தமிழகத் தேர்தல்கள்

நேரடித் தேர்தல்

தமிழ் நாடு மாநிலத்தில் பொதுத் தேர்தலாகிய தமிழ் நாடு சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையிலும் உள்ளாட்சித் தேர்தல்கள் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையிலும் என இருத் தேர்தல்கள் நேரடித் தேர்தல்களாக நடைபெறுகின்றன.

மறைமுகத் தேர்தல்

இது தவிர மறைமுகத் தேர்தலாக மாநிலங்களவை உறுப்பினர்களின் தேர்தல் மற்றும் குடியரசுத தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்கள் தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையில் நடைபெறுகின்றன. உள்ளாட்சியிலும் மறைமுகத் தேர்தல்கள் மாநிலத் தேர்தல் ஆணையரால் நடத்தப் பெறுகின்றன.

நேரடித் தேர்தல்கள் எண் தேர்தல்கள் தொகுதிகள்
1 சட்டப் பேரவை 234
2 மக்களவை 39

மறைமுகத் தேர்தல்கள் எண் தேர்தல்கள் தொகுதிகள்/இருக்கை
1 மாநிலங்களவை 18
2 குடியரசுத் தலைவர் 1
3 குடியரசுத் துணைத் தலைவர் 1

உள்ளாட்சி நேரடித் தேர்தல்கள்.எண் அலுவலகம் இருக்கைகள் / அலுவலகம்
1 மாநகராட்சி மேயர் 6 (தற்பொழுது 10)
2 மாநகராட்சி உறுப்பினர்கள்
(கவுன்சிலர்-நகாரட்சி உறுப்பினர்) 474
3 நகராட்சித் தலைவர்கள் 102
4 நகராட்சி உறுப்பினர்கள் 3,392
5 மூன்றாம் படி நகராட்சித் தலைவர்கள் 50
6 மூன்றாம் படி நகராட்சி உறுப்பினர்கள் 969
7 மாவட்ட ஊராட்சி வட்ட (வார்டு) உறுப்பினர்கள் 656
8 ஊராட்சி ஒன்றிய வட்ட உறுப்பினர்கள் 6,570
9 பேரூராட்சித் தலைவர்கள் 561
10 பேரூராட்சி வட்ட உறுப்பினர்கள் 6,825
11 கிராம ஊரட்சித் தலைவர்கள் (பிரசிடன்ட்) 12,618
12 கிராம ஊராட்சி வட்ட உறுப்பினர்கள் 97,458

உள்ளாட்சி மறைமுகத் தேர்தல்கள்எண் அலுவலகம்
1 நகராட்சி அமைப்புகள்
2 மாநகர மேயர் மற்றும் துணை மேயர்
3 நகராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர்
4 மூன்றாம் படி நகரமன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்
5 பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர்
6 சட்டப்படித் தேவைப்படக்கூடிய நிரந்தர உறுப்பினர்க்ள

தமிழக சட்டப் பேரவைத் தலைவர்

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநில அரசின் சட்டமன்றத்திற்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் இருந்து சட்டப்பேரவைத் தலைவர் ஒருவர் தேர்வு செய்யப்படுகிறார். இவர் சட்டமன்றக் கூட்டத்திற்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பதுடன் கூட்டங்களின் போது உறுப்பினர்களின் கருத்துக்களை பதிவேடுகளில் சேர்க்கவும் தேவையற்ற கருத்துக்களை நீக்கவும் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார். இதுபோல் உறுப்பினர்கள் மீது கொண்டு வரப்படும் முறையீடுகளின் அடிப்படையில் உறுப்பினர்களை தற்காலிகமாகவோ கூட்டத் தொடர் முழுமைக்குமோ கலந்து கொள்ளத் தடைவிதிக்கும் அதிகாரமுடையவராகவும் இருக்கிறார். மேலும் அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போதிலும் சட்டமன்றத்திலும், வெளியிடங்களிலும் பதவிக்காலம் முடியும் வரை கட்சி சார்பற்றவராகவே நடந்து கொள்ளவேண்டும் என்கிற விதிமுறையையும் இவர் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.

தமிழ்நாடு சட்டப் பேரவையின் தற்போதைய தலைவர் ஆவுடையப்பன்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பட்டியல்
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான சட்டப்பேரவைத் தலைவராகப் பதவி வகித்தவர்களும் அவர்களது பதவிக்காலங்களும் குறித்த பட்டியல்

பெயர் பதவி வகித்த காலம்
1 - துலுசு சாம்பமூர்த்தி 15-07-1937 முதல் 25-07-1942
2 - ஜே.சிவசண்முகம் பிள்ளை 25-05-1946 முதல் 21-04-1952 & 06-05-1952 முதல் 15-08-1955
3 - என்.கோபாலமேனன் 27-09-1955 முதல் 30-10-1956
4 - யு.கிருஷ்ணராவ் 30-04-1957 முதல் 03-08-1961
5 - எஸ்.செல்லப்பாண்டியன் 31-03-1962 முதல் 14-03-1967
6 - சி.பா.ஆதித்தனார் 17-03-1967 முதல் 12-08-1968
7 - புலவர் சு.கோவிந்தன் 22-02-1969 முதல் 14-03-1971 & 03-08-1973 முதல் 03-07-1977
8 - கே.ஏ.மதியழகன் 24-03-1971 முதல் 02-12-1972
9 - முனு ஆதி 06-07-1977 முதல் 18-06-1980
10 - க.ராசாராம் 21-06-1980 முதல் 24-02-1985
11 - பி.எச்.பாண்டியன் 27-02-1985 முதல் 05-02-1989
12 - மு.தமிழ்க்குடிமகன் 08-02-1989 முதல் 30-06-1991
13 - சேடப்பட்டி முத்தையா 03-07-1991 முதல் 21-05-1996
14 - பி.டி.ஆர்.பழனிவேல்ராசன் 23-05-1996 முதல் 13-05-2001
15 - கா.காளிமுத்து 24-05-2001 முதல் 12-05-2006
16 - இரா.ஆவுடையப்பன் 13-05-2006 முதல்


நன்றி மீண்டும் அடிப்படை அறிந்து சிந்தித்து நடப்போம் ......

No comments:

Post a Comment