Home

Saturday, July 3, 2010

வேலூர் மாநகராட்சி:

வேலூர்

இந்திய மாநிலமான தமிழகத்தைச் சேர்ந்த நகரமும், வேலூர் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். பாலாற்றின் கரையில் உள்ள வேலூரின் முக்கிய இடமாக வேலூர் கோட்டை விளங்குகிறது. இக்கோட்டையின் உள்ளே இந்துக் கோயில், கிறித்தவ ஆலயம், இஸ்லாமியரின் மசூதி ஆகியவை உள்ளன.வேலூருக்கு அருகில் இரத்தனகிரி பாலமுருகன் கோயில் உள்ளது.

வரலாறு

வேலூர் கோட்டை 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியின் போது சின்ன பொம்மி நாயக்கரால் கட்டப்பட்டது. 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிஜாப்பூர் சுல்தான் இக்கோட்டையை கைப்பற்றினார். பின்னர் மராட்டியர்களாலும், தில்லியின் தௌத் கானாலும் கைப்பற்றப்பட்டது. இதன் பின்னர் ஆற்காடு நவாபுகளின் பொறுப்பில் இக்கோட்டை விடப்பட்டது. 1760ஆம் ஆண்டு இக்கோட்டை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினரின் வசம் சென்றது. திப்பு சுல்தானை வென்ற பிறகு அவருடைய மகன்களை இக்கோட்டையில் ஆங்கிலேயர் சிறை வைத்தனர். 1806 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இக்கோட்டையில் இந்திய சிப்பாய்கள் கலகம் நிகழ்த்தினர்.வேலூரில் பொற்கோயில் ஒரு சுற்றுலா தலமாக உள்ளது, இக்கோயிலில் கூரை முழுவதும் தங்கத்தால் வேயபட்டுள்ளது. தினமும் ஆயிரகணக்காண சுற்றுலா பயணிகள் வந்து தரிசித்து செல்கின்றனர்.

நன்றி மீண்டும் அடிப்படை அறிந்து சிந்தித்து நடப்போம் ......

No comments:

Post a Comment