Home

Friday, September 3, 2010

மகாராஷ்ட்ரா.

மகாராஷ்ட்ரா/ மகாராட்டிரம்

தலைநகரம் :மும்பை
மிகப்பெரிய நகரம் :மும்பை
ஆட்சி மொழி :மராத்தி
ஆளுநர் :எஸ். சி. ஜமீர்
முதலமைச்சர் :அசோக் சவான்
ஆக்கப்பட்ட நாள் 1 மே 1960
பரப்பளவு 307,713 கி.மீ² மக்கள் தொகை (2001)அடர்த்தி 96,752,247/314.42/கி.மீ²
மாவட்டங்கள் 35

மகாராட்டிரம் (மராத்தி: महाराष्ट्र mahārāṣṭra,) இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். மகாராட்டிரம் தன் எல்லைகளாக மேற்கே அரபிக்கடல் , வடமேற்கில் குசராத் மற்றும் ஒன்றியஆட்சிப் பகுதிகள் யாகிய தாத்ரா மற்றும் நகர் ஹவேலி , வடகிழக்கில் மத்தியப் பிரதேசம் , கிழக்கில் சத்தீசுக்கர் , தெற்கில் கர்நாடகம் , தென்கிழக்கில்ஆந்திரப் பிரதேசம், மற்றும் தென்மேற்கில் கோவாவையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு (307,731 ச.கி.மீ / 118,816 ச மைல்) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 9.84% ஆகும். இம்மாநிலத்தின் தலைநகர் மும்பை, நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றானதும் மற்றும் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குவதுமாகும். புணே மற்றும் நாக்பூர் மற்ற பெரிய நகரங்களாகும். இம்மாநிலம் பரப்பளவில் மூன்றாவது பெரிய மாநிலமாகவும் மக்கள்தொகையில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் விளங்குகிறது.முதல் மாநில சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி தற்போதைய மகாராட்டிர மாநிலம் மே1,1960இல் (மகாராட்டிர தினமாக கொண்டாடப்படுகிறது) உருவானது. மராத்தி மொழி பெரும்பான்மையாகப் பேசும் முந்தைய பாம்பே, தக்கண் மாநிலம் மற்றும் விதர்பா பகுதிகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.மகாராட்டிரம் இந்தியாவின் செல்வவள மிக்க மாநிலங்களில் ஒன்றாகும். 2005-06ஆம் ஆண்டில் நாட்டின் தொழில் உற்பத்தியில் 15% உம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.2%உம் பங்களிக்கிறது.


பிரிவுகள்

மகாராட்டிராவில் மொத்தம் 35 மாவட்டங்கள் உள்ளன. அவை ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஔரங்காபாத் மண்டலம், புணே மண்டலம், அமராவதி மண்டலம், கொங்கண் மண்டலம், நாக்பூர் மண்டலம், நாசிக் மண்டலம், நாந்தெட் மண்டலம் ஆகியனவாகும்.இவை அரசாண்மைக்கு பிரிக்கப்பட்ட வருமானத்துறை பிரிவுகளாகும். நிலப்பரப்பு,அரசியல் உணர்வுகள் மற்றும் வரலாற்றின் அடிப்படையில் இவை ஐந்து பிரிவுகளாகும். 1.விதர்பா (நாக்பூர் மற்றும் அமராவதி மண்டலங்கள்), 2.மராத்வாடா (ஔரங்காபாத் மண்டலம்), 3.வட மகாராட்டிரம் அல்லது காந்தேஷ் (நாசிக் மண்டலம்), 4.மேற்கு மகாராட்டிரம் அல்லது தேஷ் (புணே மண்டலம்), 5.கொங்கண் (கொங்கண் மண்டலம்).


சமயவாரியாக மக்கள் தொகை சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 96,878,627 100%
இந்துகள் 77,859,385 80.37%
இசுலாமியர் 10,270,485 10.60%
கிறித்தவர் 1,058,313 1.09%
சீக்கியர் 215,337 0.22%
பௌத்தர் 5,838,710 6.03%
சமணர் 1,301,843 1.34%
ஏனைய 236,841 0.24%
குறிப்பிடாதோர் 97,713 0.10%

நன்றி மீண்டும் பயணம் தொடரும் .. தெரிந்தவற்றை மீண்டும் சரித்திரத்தை தெளிவுபடுத்துவதற்காக……

No comments:

Post a Comment