Home

Friday, September 3, 2010

கர்நாடகம்

கர்நாடகம் இந்தியாவின் தென் பகுதியில் உள்ள ஒரு மாநிலமாகும். மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் இம் மாநிலம் நவம்பர் 1,1956 அன்று உருவாக்கப்பட்டது. மைசூர் மாநிலம் என்று அழைக்கப்பட்டு வந்த இம் மாநிலம் 1973 -இல் கர்நாடகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.கர்நாடக மாநிலமானது மேற்கில் அரபிப் பெருங்கடலையும் வட மேற்கில் கோவாவையும், வடக்கில் மகாராஷ்டிராவையும், கிழக்கில் ஆந்திரப் பிரதேசத்தையும், தென் கிழக்கில் தமிழ்நாட்டையும், தென் மேற்கில் கேரளாவையும், எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம் மாநிலம் 74,122 சதுர மைல்கள், அதாவது 191,976 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் 5.83% ஆகும். 29 மாவட்டங்களைக் கொண்டுள்ள இம் மாநிலம் பரப்பளவில் இந்தியாவின் எட்டாவது மிகப் பெரிய மாநிலமாகத் திகழ்வதுடன் மக்கள்தொகையில் இந்திய அளவில் ஒன்பதாவது இடத்தையும் கொண்டுள்ளது. கன்னடம் ஆட்சி மொழியாகவும் பெருமளவு பேசப்படும் மொழியாகவும் உள்ளது.

கர்நாடகம் என்ற பெயருக்கு பல வித சொல்லில்லக்கணம் பரிந்துரைக்கப்பட்டாலும், 'கரு' மற்றும் 'நாடு' என்ற கன்னட வார்த்தைகளில் இருந்துதான் அது உருவாக்கப்பட்டுள்ளது என்பது பொதுவான கருத்து. இந்த வார்த்தைகளின் பொருள் மேட்டு நிலம் என்பதாகும். ஆங்கிலேயர்கள் இம் மாநிலத்தை கர்நாடிக் என்றும் சில சமயங்களில் கர்நாடக் என்றும் குறிப்பிட்டனர்.பழங் கற்கால பாரம்பரியத்தைக் கொண்டுள்ள கர்நாடகம், புராதன மற்றும் மத்திய கால இந்தியாவின் சில வலிமை வாய்ந்த பேரரசுகளின் தாயகமாகவும் திகழ்ந்துள்ளது. இப் பேரரசுகளால் ஆதரிக்கப்பட்ட தத்துவ ஞானிகளும், இசை வல்லுனர்களும் சமய, பொருளாதார மற்றும் இலக்கிய இயக்கங்களைத் தொடங்கினர். அவை இன்றுவரை நிலைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவிலேயே கன்னட மொழி எழுத்தாளர்கள்தான் அதிக அளவில் ஞானபீட விருது பெற்றுள்ளார்கள். மாநிலத் தலைநகராக விளங்கும் பெங்களுரு, இந்தியா சந்தித்துவரும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் முன்னோடியாக உள்ளது.


வரலாறு

கர்நாடக வரலாற்றை அப்பகுதியில் கிடைத்துள்ள கைக் கோடரிகள் மற்றும் இதர கண்டுபிடிப்புகள் மூலம் பழங்கற்கால கைக் கோடரி கலாச்சாரத்துடன் அதற்க்கு இருந்துள்ள தொடர்பை அறிந்துகொள்ள முடிகிறது. புதிய கற்கால கலாசாரத்தின் சான்றுகளும் இம்மாநிலத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.பண்டைய சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தின் எச்சமான ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் கர்நாடக தங்க சுரங்களை சார்ந்ததாக அறியப்படுவதன் மூலம் கர்நாடக பகுதி பண்டைய காலம்தொட்டே வாணிபம், கலாச்சாரம் ஆகியவற்றில் முன்னேறி இருப்பது தெரிய வருகிறது. பொது வழக்க சகாப்தத்திற்கு 3 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக, கர்நாடகத்தின் பெரும் பகுதி, பேரரசர் அசோகரின் மௌரிய ஆட்சிக்கு உட்படு முன், நந்தா பேரரசின் கீழ் இருந்தது. நான்கு நூற்றாண்டுகள் தொடர்ந்த சதவாகன ஆட்சி பெருமளவு கர்நாடகத்தை அவர்களின் அதிகாரத்தின் கீழ் கொள்ள உதவி புரிந்தது. சடவாகனர்களின் ஆட்சி இறக்கம் கர்நாடகத்தை அடிச்சார்ந்த, முதல் அரசநாடுகளான கடம்பர்கள் மற்றும் மேற்கு கங்கை வழியினரும் வளர வழி வகுத்தது. அதுவே, அப்பகுதி பக்கசார்பற்ற அரசியல் உருபொருளாக புகுந்து அடையாளம் காணவும் வழி வகுத்தது. மௌரிய சர்மாவால் தொடங்கப்பட்ட கடம்ப வம்சம், பானவாசியை தலைநகராக கொண்டது.அது போல், மேற்கு கங்கை வம்சம், தாலகாட்டை தலைநகராக கொண்டு அமைக்கப் பட்டது.

கடம்பர், சாளுக்கியர்

கடம்பர் வம்சத்தை சார்ந்த முதலாவது கன்னடம் மொழியை நிர்வாக மொழியாக பயன்படுத்தினர் என்பது கால்மிதி கல்வெட்டு மூலமாகவும் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டை சார்ந்த செப்பு நாணயங்கள் மூலமாகவும் அறியலாம் இவ்வம்சத்தை தொடர்ந்து சாளுக்கியர் வலிமை பெற்று ஆட்சியை கைப்பற்றினர். தக்காணத்தை முழுவதுமாக ஆட்சிக்குள் கொண்டு வந்த சாளுக்கியர் கர்நாடகத்தை முழுவதும் இணைத்த பெருமை பெற்றவர்கள்.சாளுக்கியர் கட்டக்கலை, கன்னட இலக்கியம், இசை ஆகியவற்றை பெரிதும் வளர்த்தனர்.

விசயநகர பேரரசு, இசுலாமியர் ஆட்சி

திப்பு சுல்தான் .1565ஆம் ஆண்டு, கர்நாடகம் மட்டுமல்லாது தென் இந்தியா முழுவதும் முக்கிய அரசியல் மாற்றத்தை சந்தித்தது. பல நூற்றாண்டுகளாக வலிமை பெற்று திகழ்ந்த விஜயநகர பேரரசு இசுலாமிய சுல்தானியத்துடன் தோல்வியை தழுவியது. பின் பிஜபூர் சுல்தானியதிடம் ஆட்சி சிறிது காலம் இருந்து, பின் மொகலாயர்களிடம் 17ஆம் நூற்றாண்டு இடம்மாறியது சுல்தானியத்தின் ஆட்சிகளின் போது உருது மற்றும் பாரசீக இலக்கியங்களும் வளர்க்கப்பட்டன. இதை தொடர்ந்து வடக்கு கர்நாடகம் ஐதராபாத் நிசாமாலும் மைசூர் அரசர்களாலும், ஆளப்பட்டது. மைசூர் அரசரான கிருஷ்ணா உடையார் II மரணத்தை தொடர்ந்து, தளபதியான ஹைதர் அலி ஆட்சியை கைப்பற்றினார். ஆங்கிலேயருடன் பல போர்களில் வெற்றி கொண்ட அவரை தொடர்ந்து அவரது மகன் திப்பு சுல்தான் ஆட்சி பொறுபேற்று ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆங்கிலேயருடனான நான்காவது போரில் திப்பு சுல்தான் மரணம் அடைந்ததன் மூலம் மைசூர் அரசு ஆங்கிலேய அரசுடன் 1799ல் ஒருங்கிணைக்கப்பட்டது.

புவியமைப்பு

கர்நாடகத்தின் மேற்கில் அரபிக் கடலும், வடமேற்கில் கோவாவும், வடக்கில் மகாராஷ்டிரமும், கிழக்கில் ஆந்திரப் பிரதேசமும், தென்கிழக்கில் தமிழகமும், தென்மேற்கில் கேரளமும் அமைந்துள்ளன. கர்நாடகத்தில் பெரும்பாலும் மலைப் பகுதிகளே காணப்படுகிறது. கர்நாடக மாநிலத்தின் தென் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. காவிரி ஆறு கர்நாடகத்தில் தொடங்குகிறது.இந்தியாவின் உயரமான ஜோக் அருவி ஷராவதி ஆற்றில்இம் மாநிலம் 3 முக்கிய நிலப்பகுதிகளை கொண்டுள்ளது கரவாளி கடற்கரை நிலப்பகுதி, மேற்கு தொடர்ச்சிமலையின் அங்கமான மலைப்பாங்கான மலைநாடு நிலப்பகுதி மற்றும் தக்காண பீடபூமியின் பாயலுசீமா சமவெளி. மாநிலத்தின் பெரும்பகுதி பாயலுசீமா சமவெளியின் வரண்ட நிலப்பகுதியாகும். பெயர்.கர்நாடகத்தில் பாயும் ஆறுகளாவன: காவேரி, துங்கபத்ரா, கிருஷ்ணா ஆறு மற்றும் சரவதி.கர்நாடகம் நான்கு பருவகாலங்கள் உணரப்படுகின்றன. குளிர்காலம் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களிலும், கோடைக்காலம் மார்ச் மற்றும் மே மாதங்களிலும், பருவக்காற்று காலம் ஜுன் முதல் செப்டம்பர் வரையிலும்,பருவக்காற்று கடைக்காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் உணரப்படுகின்றது.

கர்நாடக மாநிலம் 27 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 27 மாவட்டங்கள், பெங்களூர், பெல்காம், குல்பர்கா, மைசூர் ஆகிய நாள்கு ஆட்சிப்பிரிவுகளுள் அடங்கும்.

பெங்களூர் ஆட்சிப்பிரிவு
பெங்களூர் மாவட்டம்
பெங்களூர் கிராம மாவட்டம்
சித்ரதுர்கா மாவட்டம்
தாவனகரே மாவட்டம்
கோலார் மாவட்டம்
ஷிமோகா மாவட்டம்
தும்கூர் மாவட்டம்
பெல்காம் ஆட்சிப்பிரிவு
பாகல்கோட் மாவட்டம்
பெல்காம் மாவட்டம்
பிஜப்பூர் மாவட்டம்
தார்வாட் மாவட்டம்
கதக்மாவட்டம்
ஹவேரி மாவட்டம்
உத்தர கன்னடம் மாவட்டம்
குல்பர்கா ஆட்சிப்பிரிவு
பெல்லாரி மாவட்டம்
பிதர் மாவட்டம்
கொப்பல் மாவட்டம்
ராய்ச்சூர் மாவட்டம்
மைசூர் ஆட்சிப்பிரிவு
சிக்மகளூர் மாவட்டம்
சாம்ராஜ்நகர் மாவட்டம்
தெற்கு கன்னடம் மாவட்டம்
ஹஸ்ஸன் மாவட்டம்
கொடகு மாவட்டம்
மாண்டியா மாவட்டம்
மைசூர் மாவட்டம்
உடுப்பி மாவட்டம்

போக்குவரத்து

பேரூர்திகளின் செல்லுமிடப் பெயரானது கன்னட மொழியில் மாத்திரமே எழுதப்படும் எனினும் கன்னட மொழியானது பேச்சுவழக்கில் தமிழை ஒத்துள்ளதால் "ஹோகுதா இல்வா" (தமிழில்: போகுதா இல்லையா?) என்றாவாறு பேரூர்தி நடத்துனரிடம் கேட்டறிந்து கொள்ளலாம்.

பொருளாதாரம்

கடந்த ஆண்டு கர்நாடகத்தின் உள்மாநில உற்பத்தி சுமார் ரூ. 2152.82 பில்லியன் ($ 51.25 billion) என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வேகமாக பொருளாதார வளர்ச்சி பெறும் மாநிலங்களில் ஒன்றாக கர்நாடகம் கருதப்படுகிறது. இம்மாநிலத்தின் 2007-2008 ஆண்டுகளுக்கான உள்மாநில உற்பத்தி வளர்ச்சி விகிதம் சுமார் 7% .2004-05 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கர்நாடக மாநிலத்தின் பங்களிப்பு சுமார் 5.2% சதவிதமாக இருந்தது.கர்நாடகம் கடந்த பத்தாண்டுகளில் மிகப்பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது.பத்தாண்டுகளில் உள்மாநில உற்பத்தி 56.2% சதவிகிதமும், தனி நபர் உள்மாநில உற்பத்தி 43.9% சதவிகிதமும் வளர்ந்துள்ளது.2006-2007 ஆம் ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ. 78.097 பில்லியன் ($ 1.7255 பில்லியன்) கர்நாடகம் அன்னிய நேரடி முதலிடாக பெற்று இந்திய மாநிலங்களில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. [22] 2004ஆம் ஆண்டின் முடிவில், கர்நாடகத்தில் வேலையில்லாதவர் விகிதம் 4.94% . இது தேசிய சராசரியான 5.99% விட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. [23] கர்நாடகத்தின் தலைநகரமான பெங்களூர் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரமாக கருதப்படுகிறது. கர்நாடகத்தில் தங்கச் சுரங்கங்கள் அமைந்துள்ளன. கர்நாடகம் மிகப்பெரிய பொதுத் துறை தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. இந்துஸ்தான் வானூர்தியல் நிறுவனம் (Hindustan Aeronautics Limited) , தேசிய விண்வெளி ஆய்வகங்கள்( National Aerospace Laboratories), பாரத கனமின்சார தொழிலகம் (Bharat Heavy Electricals Limited) , இந்திய தொலைப்பேசி தொழிலகங்கள்(Indian Telephone Industries), இந்துஸ்தான் மெஷின் டுல்ஸ்(Hindustan Machine Tool), ஆகிய நிறுவனங்கள் பெங்களூரு நகரில் உள்ளன.

மக்கள் தொகை

2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கர்நாடகத்தின் மொத்த மக்கள்தொகை சுமார் 52,850,562, அதில் ஆண்கள் 26 898,918 (50.89%) மற்றும் பெண்கள் 25,951,644 (49.11%). சுமார் 1000 ஆண்களுக்கு 964 பெண்கள் என்ற நிலையில் ஆண்-பெண் விகிதம் அமைந்துள்ளது. 1991 ஆண்டின் மக்கள்தொகையுடன் ஒப்புநோக்கும்போது 17.25% மக்கள்தொகை உயர்ந்து இருப்பது தெரியவருகிறது. மக்கள்தொகை நெருக்கம் 275.6 நபர்கள்/சதுர கிலோமீட்டர் ஆகும். 33.98% மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர். மொத்த கல்வியறிவு 66.6% ஆகவும், ஆண்கள் கல்வியறிவு 76.1% ஆகவும், பெண்கள் கல்வியறிவு 56.9% ஆகவும் உள்ளது. 83% மக்கள் இந்து சமயத்தை பின்பற்றுபராகவும், 11% இசுலாம் சமயத்தை பின்பற்றுபராகவும், 4% கிறித்தவ சமயத்தை பின்பற்றுபராகவும் , 0.78% சமண சமயத்தை பின்பற்றுபராகவும், 0.73% பௌத்த சமயத்தை பின்பற்றுபராகவும் உள்ளனர். கன்னடம் மொழி அலுவல் மொழியாகவும் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாகவும் உள்ளது. சுமார் 64.75% மக்கள் இம்மொழியை பேசுகின்றனர். இது தவிர, தமிழ், மராத்தி, கொங்கனி, துளு ஆகிய மொழிகளும் பேசப்படுகிறது.


நன்றி மீண்டும் பயணம் தொடரும் .. தெரிந்தவற்றை மீண்டும் தெளிவுபடுத்துவதற்காக……

No comments:

Post a Comment