Home

Friday, September 3, 2010

இந்திய மாநிலங்கள் ஒரு சிறப்பு பார்வை.கேரளம்.

அடுத்தபடியாக கேரளம்.மாந்ரீகத்திற்கு பெயர்போன ஊர் என்பது தனிசிறப்பு.

கேரளா (Kerala,(ஆங்கிலமாக்கப்பட்டது) அல்லது (உள்ளூர்) மலையாளம்: കേരളം, — Kēraḷaṁ) இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று. கேரா என்ற சொல் தேங்காயைக் குறிக்கும். இங்கு தென்னை மரங்கள் அதிகமாக காணப்படுவதால் அதனைத் தருவி கேரளம் என அழைக்கப்படுகிறது. இது கிழக்கில் தமிழ் நாட்டையும், வடக்கில் கர்நாடகத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மேற்கில் அரபுக் கடல் உள்ளது. மலையாளம் கேரளாவின் முதன்மையான மொழியாகும். தமிழ் பேசுவோரும் அதிகமாக காணப்படுகினறனர். கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம். பிற குறிப்பிடத்தக்க நகரங்கள் கொச்சி, திருச்சூர் மற்றும் கோட்டயம் ஆகும். இந்திய மாநிலங்களில் கல்வியறிவு விகிதத்தில் கேரளம் முதலிடம் வகிக்கிறது.

வரலாறு
பரசுராமரின் கோடரி கடலைப் பிளந்த தால் தோன்றிய நாடு கேரளம் என்பது புராணக் கற்பனை.இதனை பார்க்கவ சேத்திரம் என்றும் பரசுராம சேத்திரம் என்றும் வழங்குகின்றனர்.

கேரளம் பதினான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருவன

காசர்கோடு
கண்ணூர்
வயநாடு
கோழிக்கோடு
மலைப்புறம்
பாலக்காடு
திருச்சூர்
எர்ணாகுளம்
இடுக்கி
ஆலப்புழா
கோட்டயம்
பத்தனம்திட்டா
கொல்லம்
திருவனந்தபுரம்

கலைகள்

கூடியாட்டம், கதகளி, கேரள நடனம், மோகினியாட்டம், தெய்யம், துள்ளல் ஆகியவை கேரளத்தின் நாட்டிய வகைகளாகும். வர்மக்கலை, களரி போன்ற தற்காப்புக் கலைகளும் கேரளத்திலிருந்து தோன்றியவையே.

விழாக்கள்
ஓணம் மற்றும் விஷு கேரளத்தின் முக்கிய பண்டிகைகளாகும். கிறிஸ்துமஸும் ரமலான் பெருநாளும் இங்கு கொண்டாட படுகிறது.

மக்கள்

சமயவாரியாக மக்கள் தொகை சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 31,841,374 100%
இந்துகள் 17,883,449 56.16%
இசுலாமியர் 7,863,842 24.70%
கிறித்தவர் 6,057,427 19.02%
சீக்கியர் 2,762 0.01%
பௌத்தர் 2,027 0.01%
சமணர் 4,528 0.01%
ஏனைய 2,256 0.01%
குறிப்பிடாதோர் 25,083 0.08%

நன்றி மீண்டும் பயணம் தொடரும் ..

No comments:

Post a Comment