Home

Monday, June 28, 2010

துணை முதலமைச்சர்

துணை முதலமைச்சர் (Deputy chief minister):


முதலமைச்சர் பொறுப்பு வரையறுக்கப்பட்டிருக்கும் வேளையில், துணை முதலமைச்சர் பொறுப்பு அவ்வப்பொழுது ஏற்படும் அரசியல் சூழலுக்கேற்ப ஏற்படுத்தப்படுத்தப்படும் விருப்பபொறுப்பு (பதவி) ஆகும். இந்தியாவில் இம்முறையிலேயே இப்பொறுப்பை பல்வேறு மாநிலங்களில் வகிக்கின்றனர். கட்டாயமாக இப்பொறுப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற விதிகள் இந்தியாவின் மாநிலங்களில் பின்பற்றபடுவதில்லை. பெரும்பாலும் கூட்டணி ஆட்சிகள் அமைகின்ற மாநில ஆட்சிகளில் அக்கூட்டணியில் பங்குபெற்றுள்ள முக்கிய கட்சியினரின் பங்கும், ஆதரவும் இருக்கவேண்டும் என்ற காரணத்தினால் ஒரு சில துறைகளுடன் அக்கட்சிக்கு இந்த பொறுப்பு வழங்கபெற்று அதன்மூலம் ஆடசியில் பங்கு வகிக்கின்றனர். முதல்வரின் பணிச்சுமை காரணமாகவும் துறைகள் பிரித்து கொடுப்பதற்காகவும் இப்பொறுப்பு முதல்வரால் சிலசமயங்களில் ஏற்படுத்தப்படும்.

60 ஆண்டு காலமாக இல்லாத புதுபதவி இந்த துணை முதலமைச்சர் பதவி ஏன்? எதற்காக?.


நன்றி மீண்டும் அடிப்படை புரிந்து நடப்போம் சிந்திப்போம் ........

No comments:

Post a Comment