Home

Monday, June 21, 2010

நூறாவது ஆண்டு சட்டம் திருத்தம் வருமா?

இந்திய அரசியலமைப்பு:

இந்தியாவின் உச்சபட்ச சட்டத் தொகுப்பாகும்.. இந்தியாவின் அடிப்படை அரசியல் கொள்கைகளை, கட்டமைப்பு, அதிகாரங்கள் மற்றும் அதன் கடமைகளை அதன் அரசுக்கும் அதன்மூலம் அடிப்படை உரிமைகளை ஒவ்வொரு இந்திய குடிமகனிற்கும் வழங்குகின்ற வகையில் அரசியலமைப்பு அவையில் நவம்பர் 26, 1949 ல் அறிமுகப்படுத்தப்பட்டு ஜனவரி 26, 1950 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு இதுகாரும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த பிரதேசமாக , தன்னாட்சி கொண்ட நாடாக, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக 1976 ல் நடைபெற்ற திருத்தங்களில் இந்தியா கடைப்பிடிக்கும் மூன்று கொள்கைகளாக பொதுவுடமை, சமய சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளை தன் கொள்கைகளாக அறிவித்தது.


அம்பேத்கார் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழு அதன் பணியை முடித்து நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்த நாள் நவம்பர் 26, 1949.அம்பேத்கார் தலைமையிலான குழு எழுதிய இந்திய அரசியல் சட்டத்தை பலரும் புகழ்ந்து கொண்டிருந்த நிலையில், "இந்திய அரசியலமைப்புச் சட்டம்" என்பது மாற்றப்பட கூடாத வேதப்புத்தகம் அல்ல. தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடுக்கு வழிவகுக்கும் வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் முதல் சட்டதிருத்தத்திற்கும் வழி வகுத்தவர் தோழர் பெரியார்.ஆனால் இவற்றில் மக்களுக்கு தேவையான வகையில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் மிகக்குறைவே. ஆட்சியில் இருப்பவர்களின் வசதிக்கும். அதிகாரத்தை ஒரிடத்தில் குவிப்பதற்குமே இந்திய அரசியலமைப்பு சட்டம் பலமுறை திருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சட்டங்களில் அரசியலமைப்பு சட்டமே மேலானது; இந்த அரசியலமைப்பு சட்டத்தின் கொள்கைகளுக்கு எதிரான சட்டங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டியதே உச்ச நீதிமன்றம் உள்ளடக்கிய நீதித்துறையின் முதன்மை பணியாகும்.

அப்படியானால் “இந்திய அரசியல் அமைப்பு சட்டம்” உண்மையிலேயே சட்டம் திருத்தம் வருமா?

நன்றி

No comments:

Post a Comment