Home

Wednesday, June 30, 2010

தமிழர் பண்பாடு ஒரு பார்வை :

பண்பாடு என்பது பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல். ஆங்கிலத்தில் culture (கல்ச்சர்) என்னும் சொல்லுக்கு இணையான பொருளில் இச்சொல் தமிழில் பயன்படுத்தப்படுகிறது. கலாச்சாரம் என்ற சொல்லும் பண்பாட்டுக்கு ஒத்தசொல்லாக பயன்படுகின்றது. இது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும்; அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது.பண்டைய எகிப்து நாட்டைச் சேர்ந்த ஓவியம்.பண்பாடு ஒரு பலக்கிய கருப்பொருள். அதற்கு பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றை சுட்டி நிற்க்கின்றது. மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்.பொதுவாக இது மனிதரின் நடவடிக்கைகளைக் குறிக்கிறது எனலாம். பண்பாட்டின் வெவ்வேறு வரைவிலக்கணங்கள், மனிதச் செயல்பாடுகளை விளங்கிக்கொள்வதற்கான அல்லது அவற்றை மதிப்பிடுவதற்குரிய அளபுருக்களுக்கான வெவ்வேறு கோட்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன எனலாம். 1952ல் அல்பிரட் எல். குறோபெர் என்பாரும் கிளைட் குளுக்ஹோனும் பண்பாடு என்பதற்குக் கூறப்படும் 200க்கு மேற்பட்ட வரைவிலக்கணங்களைத் தாங்கள் எழுதிய பண்பாடு: எண்ணக்கருக்களும் வரைவிலக்கணங்களும், ஒரு விமர்சன மீள்பார்வை (Culture: A Critical Review of Concepts and Definitions) என்னும் நூலில் பட்டியலிட்டுள்ளார்கள்.

தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும்.தமிழர் பண்பாடு பல காலமாக பேணப்பட்டு, திருத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒரு இயங்கியல் பண்பாடே."தமிழர் பண்பாட்டின் அமைப்பொழுங்கானது அடிப்படையில் இரண்டு அம்சங்கங்களைக் கொண்டதாகும். ஒன்று: அதனளவில் சார்புடையது (culture dependent). மற்றறொன்று, உலகளாவிய அமைப்பியல்புகளோடு பொருந்தக்கூடியது (culture independent). அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய 'புறக் கூறுகள்' பண்பாட்டு சார்ந்தும், அவற்றின் 'அகக் கூறுகள்' உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும்."பல சந்தர்ப்பங்களில் தமிழர் பண்பாடு இது, தமிழர் பண்பாடு இதுவல்ல என்று தெளிவாக வரையறைப்பது கடினமாகினும் ஒரு அறிவுசார் மதிப்பீடு செய்யமுடியும். எடுத்துக்காட்டாக யூத சமயமோ, சீக்கிய சமயமோ தமிழர் பண்பாட்டு வட்டத்துக்குள் வரமாட்டாது, மாற்றாக சைவ சமயத்துக்கு தமிழர் பண்பாட்டுடன் ஒரு இறுகிய தொடர்பு உண்டு.

தமிழர் நிலத்திணைகள்

தமிழர் நிலத்திணைகள் என்பவை பண்டைத் தமிழர் தமது இயற்கைச் சூழலுக்கு ஏற்ப வாழ்ந்த நிலங்களாகும். இவை ஐந்து வகைகளாகப் பகுக்கப்பட்டன. முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்பனவே தமிழர் நிலத்திணைகள் ஆகும்.

காடும், காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை
மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை
இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை எனப்பட்டது.
வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் எனவும்,
கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் அழைக்கப்பட்டன.
இது வெறுமனே இயல்பியல் அடிப்படையிலான பகுப்புக்களாக இல்லாது, மக்கள் வாழ்வியலோடு இணைந்தவையாக அமைந்திருந்தன.


குறிஞ்சி நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்படுகின்றன. குறிஞ்சி நிலத்திற்கு முருகன் குலதெய்வமாக பண்டைய மக்களால் வழிபடப்பட்டார். குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி, பாக்கம் என்று அழைக்கப்பட்டன.கூதிர், முன்பனி என்னும் பெரும் பொழுதுகளும் யாமம் என்னும் சிறுபொழுதும் குறிஞ்சி நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.

குறிஞ்சி நிலத்தின் கருப்பொருட்கள்
தெய்வம்: முருகன்
மக்கள்: பொருப்பன், வெற்பன், சிலம்பன், நாடன், கொடிச்சி
விலங்குகள்: குரங்கு, கரடி
மலர்கள்: குறிஞ்சி, காந்தள்
மரங்கள்: வேங்கை, பலா
பண்: குறிஞ்சி யாழ்
தொழில்: கிழங்கு அகழ்தல், தேன் எடுத்தல்

நெய்தல் நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என அழைக்கப்படுகின்றன. நெய்தல் நிலத்தலைவர்கள் கொண்கன், சேர்ப்பன், துறைவன், புலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர்.கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறை, எற்பாடு என்னும் சிறுபொழுதும் நெய்தல் நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.

நெய்தல் நிலத்தின் கருப்பொருட்கள்
தெய்வம்: வருணன்
மக்கள்: சேர்ப்பன், நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர்
பறவைகள்: கடற் காகம்
விலங்குகள்: சுறா
மரங்கள்: கண்டல், புன்னை
பண்: மீன்கோட் பறை, விளரி யாழ்
தொழில்: மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு உணக்கல், உப்பு விற்றல்


பாலை நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பண்பின் அடிப்படையில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல் மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும். பாலை நிலத்தலைவர் காளை, விடலை என அழைக்கப்பட்டனர். பாலை நில மக்கள் எயினர் எனப்பட்டனர்.இளவேனில், முதுவேனில், பின்பனி என்னும் பெரும் பொழுதுகளும் நண்பகல் என்னும் சிறுபொழுதும் பாலை நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.

பாலை நிலத்தின் கருப்பொருட்கள்
தெய்வம்: கொற்றவை
மக்கள்: விடலை, காளை, மறவர், மறத்தியர்
பறவைகள்: புறா, கழுகு
மரங்கள்: உழிஞ, பாலை, இருப்பை
பண்: பாலை யாழ்
தொழில்: வழிப்பறி செய்தல், சூறையாடல்

மருதம் நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர். மருத நிலத்தலைவர்கள் மகிழ்நன், ஊரன் என்று அழைக்கப்பட்டனர்.மதுரை என்ற பெயர் மருதை என்பதன் மருபுச் சொல் என பலர் கருதுகின்றனர்.கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறை, விடியல் என்னும் சிறுபொழுதுகளும் மருத நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.


மருத நிலத்தின் கருப்பொருட்கள்
தெய்வம்: இந்திரன்
மக்கள்: மள்ளர், உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
பறவைகள்: நாரை, குருகு, தாரா
விலங்குகள்: எருமை, நீர்நாய்
மலர்கள்: தாமரை, கழுநீர், குவளை
மரங்கள்: காஞ்சி, மருதம்
உணவு: செந்நெல், வெண்நெல்
பண்: மருத யாழ்
தொழில்: களைகட்டல், நெல்லரிதல், கடாவிடல்

முல்லை நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்பட்டது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது.கார் என்னும் பெரும் பொழுதும் மாலை என்னும் சிறுபொழுதும் முல்லை நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.

முல்லை நிலத்தின் கருப்பொருட்கள்
தெய்வம்: திருமால்
மக்கள்: இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்,யாதவர்,கோனார்
பறவைகள்: காட்டுக் கோழி
விலங்குகள்: மான், முயல், பசு
மலர்கள்: முல்லை, பிடா
பண்: பறை, முல்லை யாழ்
தொழில்: சாமை, வரகு விதைத்தல், களை எடுத்தல், குழலூதல், ஏறு தழுவல், குரவைக் கூத்தாடல்



தமிழர்களின் பண்பாட்டில் யானைகள்

தமிழர்களின் பண்பாட்டில் யானைகள்குறிப்பிடத்தக்க இடம் பெறுகிக்கின்றன.

பண்டைத்தமிழ் அரசுகளில் யானைப் படை முதன்மையான பங்கு வகித்தது. படை யானைகளுக்குப் பெயரும் பட்டங்களும் வழங்கப்பட்டன. பெரும்பாலான தமிழகக் கோவில்களில் யானைகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். இன்றும் தமிழகத்தின் பெரிய கோவில்களில் கோவில் யானைகள் இருக்கின்றன. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் பழங்குடியினரில் சிலர் யானைகளைப் பழக்குவதில் வல்லவர்கள். தமிழகத்தின் முதுமலை போன்ற பகுதிகளில் காட்டுமரங்களைக் எடுத்துக் கொண்டு செல்ல யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.தற்காலத்தில் தமிழகத்தின் தெருக்களில் பாகன்கள் யானைகளை அழைத்து வந்து யானையை ஆசி வழங்க வைத்து பணம் பெறுவதும் உண்டு.
பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும் யானைகளைப் பற்றி நிறையக் குறிப்புகள் உள்ளன. யானைகள் தமிழில் கரி (நிறத்தால் ஏற்பட்ட பெயர்), களிறு (ஆண் யானை), பிடி (பெண் யானை), போன்ற பெயர்களால் வழங்கப்பட்டன. தந்தத்திற்கு கோடு, மருப்பு போன்ற பெயர்கள் வழங்கப்பட்டன.

பல ஆயிரம் ஆண்டுகளாகத் தனித்துவமான பண்பாட்டைக் கொண்டவர்களாக ஓரேயிடத்தில் வாழ்ந்துவருகின்ற தமிழருக்கு வானியல் துறையில் இருந்த அறிவையும், அது பற்றி அவர்கள் கொண்டிருந்த விளக்கங்களையும், அந்த அறிவை அவர்கள் பயன்படுத்திய முறைகளையும் தமிழர் வானியல் என்னும் தலைப்பில் இக் கட்டுரை விளக்க முயல்கிறது.
பண்டைக்காலத்தில், வானவியலுக்கு என்று தனியான நூல்கள் எதுவும் தமிழில் இருந்ததாகத் தெரியவில்லை. தமிழ் மக்கள் வாழ்க்கை முறைகள் நம்பிக்கைகள் மற்றும் பிற அம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள உதவும் மிகப்பழைய எழுத்துமூல ஆவணங்கள் சங்க நூல்களேயாகும். சங்கப் பாடல்களை எழுதியவர்கள் பெரும்பாலும் சாதாரண புலவர்களே அவர்களிடம் வானியல் போன்ற துறைகளின் நுட்ப அம்சங்கள் தொடர்பான தகவல்களை எதிர்பார்க்க முடியாது. எனினும் வானியலோடு தொடர்புடைய, மக்கள் மட்டத்தில் புழங்கிய பல்வேறு விடயங்கள் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும்.



நன்றி மீண்டும் அடிப்படை அறிந்து நடப்போம் ......

No comments:

Post a Comment