Home

Saturday, October 30, 2010

புதுச்சேரி:

புதுச்சேரி (ஆங்கிலம்: Puducherry) எனவும் பாண்டிச்சேரி, புதுவை எனவும் அழைக்கப்படும் இந்நகரம், சென்னை மாநகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில், வங்கக் கடலோரத்தில் அமைந்த நடுவண் அரசின் பிரதேசமாகும்.இது பிரெஞ்சு நாட்டின் பகுதியாக இருந்தது. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரெஞ்சுச் சொற்களை வெகு லாகவமாக அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் இடமாகவும் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் காக்கி நாடாவுக்கு அருகாமையிலுள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின் நாகப்பட்டினத்தின் அருகாமையிலுள்ள காரைக்கால் நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகிலுள்ள மாஹே நகரும் இந்த மாநிலத்தின் (ஆட்சிப் பகுதியின் பிராந்தியங்கள்) அங்கமாகையால், ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் மொழிகளுடன், தெலுங்கு, மலையாளம் மொழி பேசும் மக்களும் சிறுபான்மையாக இருக்கிறார்கள்.

நகரமைப்பு
கடற்கரையில் உள்ள காந்தி சிலைபுதுச்சேரி நகரத்தில் பிரெஞ்சுக்காரகளால் அமைக்கப்பட்ட சாலைகள் பெரும்பாலும் நேர்கோட்டில் அமைந்தவை என்பது புதுவையின் ஓர் சிறப்பு. அது குறித்தான ஒரு சொலவடை, ‘நீதி அழகு இல்லையென்றாலும் வீதி அழகு உண்டு’ என்பதாகும். புதுச்சேரியின் கிழக்குப் பகுதியில் அழகிய கடற்கரை உள்ளது.

கல்வி நடுவம்
ஏனம் கோதாவரியின் கழிமுகத்திலும் காரைக்கால் காவிரியின் கழிமுகத்திலும் அமைந்துள்ளன.சிறிய மாநிலமான புதுச்சேரியில் 7 மருத்துவ கல்லூரிகளும், 7 பொறியியல் கல்லூரிகளும், 10 கலை , அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளும் அமைந்துள்ளதால் இதனை கல்வி மையம் எனவும் வழங்கப்படுகிறது.

புதுச்சேரியில் இலக்கிய வளர்ச்சி
புதுச்சேரியில் இலக்கிய வளர்ச்சி என்பது மகாகவி பாரதி, புதுவைக்கு வருவதற்கு முன்பிருந்தே துவங்கிய ஒன்று. அந்த வழியில், மகாகவி பாரதியார், பெருஞ்சித்திரனார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தேவநேயப் பாவாணர், முதலான அறிஞர் பெருமக்கள் இலக்கியத் தொண்டினை பின்பற்றி, புதுவையின் கவிஞர் பெருமக்கள், பண்ணார் தமிழன்னைக்கு முத்தாரம் சூட்டி, உலக அரங்கில் முன்னிறுத்த பெரும் பாடுபட்டனர் என்று சொன்னால் அது மிகையல்ல.புதுச்சேரியின் வரலாற்றில் ஒரு பெரும்பகுதி பிரெஞ்சு ஆட்சியின்கீழ் இருந்ததன் விளைவாக இங்கு பிரெஞ்சு மொழி இலக்கியமும் வளர்ச்சி பெற்றது. பல பிரெஞ்சு இலக்கியக் கழகங்கள் இன்றும் இங்கு இயங்கி வருகின்றன.

சமயவாரியாக மக்கள் தொகை
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 974,345 100%
இந்துகள் 845,449 86.77%
இசுலாமியர் 59,358 6.09%
கிறித்தவர் 67,688 6.95%
சீக்கியர் 108 0.01%
பௌத்தர் 73 0.01%
சமணர் 952 0.10%
ஏனைய 158 0.02%
குறிப்பிடாதோர் 559 0.06%

புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பூர்வீக‌ குடிமக்களில் பலரும் இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் நாட்டு குடிமை உரிமை பெற்று இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களாக உள்ளார்கள்.

No comments:

Post a Comment