Home

Saturday, October 30, 2010

தாத்ரா மற்றும் நகர் அவேலி:

தாத்ரா & நகர் அவேலி (Dadra and Nagar Haveli, குசராத்தி: દાદરા અને નગર હવેલી, மராத்தி: दादरा आणि नगर हवेली) , இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் சில்வாசா ஆகும்.

நில அமைப்பு
ஒன்றியப் பகுதியானது மேற்குத் தொடர்ச்சிமலையின் மேற்கு அடிவாரத்தில் அமைந்துள்ளது. நகர் அவேலி குசராத் மகாராஷ்டிரா எல்லையிலும் தாத்ரா நகர் குசராத்தின் எல்லைக்குள்ளும் அமைந்திள்ளன.ஒரே நதியான தமன் கங்கா செழிமைப்படுத்துப்படும் தாத்ரா & நகர் அவேலி நாற்பது விழுக்காடு காடு ஆகும்.

வரலாறு
ஆங்கிலேய ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும், முகலாயர்களின் எதிர்ப்பை நிலைநாட்டவும், மராத்தியர் போர்துகேயருடன் நட்பை வளர்க்க 1779-இல் ஒர் ஒப்பந்தம் செய்தனர். இதன் விளைவாக போர்துகேயரின் ஆட்சிக்குட்பட்ட பகுதியானது.

No comments:

Post a Comment